Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: ذاریات   آیت:
كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟۫
51.52. இந்த மக்காவாசிகள் பொய்ப்பித்ததைப்போன்றே முந்தைய சமூக மக்களும் பொய்ப்பித்தார்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் தூதர்கள் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர், என்று.”
عربی تفاسیر:
اَتَوَاصَوْا بِهٖ ۚ— بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
51.53. நிராகரிப்பாளர்களில் முந்தையவர்களும் பிந்தையவர்களும் தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துள்ளார்களா என்ன? இல்லை. மாறாக அவர்களின் வரம்புமீறலே அவர்களை இதில் ஒன்றிணைத்தது.
عربی تفاسیر:
فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟ؗ
51.54. -தூதரே!- இந்த பொய்ப்பிப்பாளர்களை நீர் புறக்கணித்து விடுவீராக. நீர் பழிப்பிற்குரியவர் அல்ல. நீர் அவர்களின்பால் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீரோ அதனை எடுத்துரைத்துவிட்டீர்.
عربی تفاسیر:
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟
51.55. அவர்களை நீர் புறக்கணிப்பது, அவர்களுக்கு அறிவுரை கூறுவதிலிருந்தும் நினைவூட்டுவதிலிருந்தும் உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக, நினைவூட்டுவீராக. நிச்சயமாக நினைவூட்டல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களுக்குப் பயனளிக்கும்.
عربی تفاسیر:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟
51.56. நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை மட்டுமே வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். எனக்கு இணைகளை ஏற்படுத்துவதற்காக நான் அவர்களைப் படைக்கவில்லை.
عربی تفاسیر:
مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟
51.57. நான் அவர்களிடம் வாழ்வாதாரத்தையோ, அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.
عربی تفاسیر:
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟
51.58. நிச்சயமாக அல்லாஹ்வே தன் அடியார்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன். அனைவரும் அவன் அளிக்கும் வாழ்வாதாரத்தின் பக்கம் தேவையுடையவர்களாவர். அவன் உறுதியான வல்லமை மிக்கவன். எதுவும் அவனை மிகைத்துவிட முடியாது. மனிதர்கள், ஜின்கள் அனைவரும் அவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
عربی تفاسیر:
فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟
51.59. -தூதரே!- நிச்சயமாக உம்மை பொய்ப்பித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் அவர்களின் முந்தைய தோழர்களின் பங்கை போன்று வேதனையின் ஒரு பகுதியைப் பெறுவார்கள். அதற்கு குறிப்பிட்ட தவணை இருக்கின்றது. அது வருவதற்கு முன்னரே விரைவாக என்னிடம் அதனை அவர்கள் கோரவேண்டாம்.
عربی تفاسیر:
فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠
51.60. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதரை பொய்ப்பித்தவர்களுக்கு மறுமை நாளில் இழப்பும் அழிவுமே ஏற்படும். அதுதான் அவர்கள்மீது வேதனை இறக்கப்படுவதற்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• الكفر ملة واحدة وإن اختلفت وسائله وتنوع أهله ومكانه وزمانه.
1. நிராகரிப்பு, நிராகரிப்பாளர்கள் பலவாறாக பிரிந்து கிடந்தாலும், அதன் வழிவகைகள், இடங்கள், காலகட்டங்கள் மாறுபட்டாலும் அவை ஒரே மார்க்கம்தான்.

• شهادة الله لرسوله صلى الله عليه وسلم بتبليغ الرسالة.
2. நபியவர்கள் தூதுப்பணியை நிறைவேற்றி விட்டார்கள் என்பதற்கான அல்லாஹ்வே சாட்சி.

• الحكمة من خلق الجن والإنس تحقيق عبادة الله بكل مظاهرها.
3. அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களைப் படைத்த நோக்கம் வணக்க வழிபாட்டின் எல்லா வெளிப்பாடுகளோடும் அவனை வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

• سوف تتغير أحوال الكون يوم القيامة.
4. பிரபஞ்சத்தின் நிலைமைகள் மறுமை நாளில் மாறிவிடும்.

 
معانی کا ترجمہ سورت: ذاریات
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں