Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ آیت: (104) سورت: انعام
قَدْ جَآءَكُمْ بَصَآىِٕرُ مِنْ رَّبِّكُمْ ۚ— فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ عَمِیَ فَعَلَیْهَا ؕ— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
6.104. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் உங்களிடம் வந்துவிட்டன. யார் அவற்றைப் புரிந்து கீழ்ப்படிந்தாரோ அதன் பயன் அவருக்கே. யார் அவற்றைக் கண்டுகொள்ளாமலும் புரியாமலும் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லையோ அதன் தீங்கு அவருக்கே. உங்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்லன். என் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன். அவனே உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• تنزيه الله تعالى عن الظلم الذي ترسِّخُه عقيدة (الجَبْر)، وبيان أن كفر العباد وشركهم أمر يحدث باختيارهم.
1. நிர்ப்பந்த கொள்கை அழுத்திக்கூறும் அநீதி என்பதிலிருந்து அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்தல். அடியார்களின் நிராகரிப்பும் இணைவைப்பும் அவர்களின் தெரிவினால் ஏற்பட்டதே என்பதைத் தெளிவுபடுத்தல்.

• ليس بمقدور نبي من الأنبياء أن يأتي بآية من عند نفسه، أو متى شاء، بل ذلك أمر مردود لله تعالى، فهو القادر وحده على ذلك، وهو الحكيم الذي يُقَدِّر نوع الآية ووقت إظهارها.
2. தங்களின் புறத்திலிருந்து அல்லது தாங்கள் விரும்பிய சமயத்தில் எந்தவொரு சான்றையும் கொண்டுவரும் ஆற்றல் எந்த நபியிடமும் இல்லை. அது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உட்பட்டவையாகும். அவன் மட்டுமே சான்றுகளைக் கொண்டு வருவதற்கு முழு சக்தியுடையவன். என்ன விதமான அத்தாட்சி அதனை எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என்பதை நிர்ணியிக்கும் ஞானமிக்கவன் அவனே.

• النهي عن سب آلهة المشركين حذرًا من مفسدة أكبر وهي التعدي بالسب على جناب رب العالمين.
3. பெரும் தீமையைத் தவிர்ப்பதற்காக இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவதே அந்த பெரும் தீமையாகும்.

• قد يحول الله سبحانه وتعالى بين العبد والهداية، ويُصرِّف بصره وقلبه على غير الطاعة؛ عقوبة له على اختياره الكفر.
4. அடியானுக்கும் நேர்வழிக்குமிடையே சில வேளை அல்லாஹ் குறுக்கிடுகிறான். அடியான் நிராகரிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்குத் தண்டனையாக அவனது பார்வையையும் உள்ளத்தையும் இறைவழிபாட்டை விட்டும் திருப்பிவிடுகிறான்.

 
معانی کا ترجمہ آیت: (104) سورت: انعام
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں