Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ آیت: (17) سورت: انعام
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ؕ— وَاِنْ یَّمْسَسْكَ بِخَیْرٍ فَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
6.17. ஆதமின் மகனே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவனைத் தவிர யாராலும் அதனைப் போக்க முடியாது. அவன் புறத்திலிருந்து உனக்கு ஏதேனும் நன்மை நேர்ந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• بيان حكمة الله تعالى في إرسال كل رسول من جنس من يرسل إليهم؛ ليكون أبلغ في السماع والوعي والقبول عنه.
1. அல்லாஹ் தூதர்களை மனித இனத்திலிருந்தே அனுப்பியதன் நோக்கம், அவர்கள் சிறந்த முறையில் செவியேற்று, புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

• الدعوة للتأمل في أن تكرار سنن الأوّلين في العصيان قد يقابله تكرار سنن الله تعالى في العقاب.
2. இறைவனுக்கு மாறுசெய்வதில் முன்னோரின் வழிமுறையைப் பின்பற்றினால் சில வேளை தண்டனையிலும் அல்லாஹ்வின் வழிமுறை நடைபெறும் என்பதைச் சிந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

• وجوب الخوف من المعصية ونتائجها.
3. பாவத்தைக் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் அஞ்சுவது கடமையாகும்.

• أن ما يصيب البشر من بلاء ليس له صارف إلا الله، وأن ما يصيبهم من خير فلا مانع له إلا الله، فلا رَادَّ لفضله، ولا مانع لنعمته.
4. மனிதனுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் போக்க முடியாது. அவனுக்குக் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அவனது அருளைத் தடுப்பவர் யாரும் இல்லை.

 
معانی کا ترجمہ آیت: (17) سورت: انعام
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں