قرآن کریم کے معانی کا ترجمہ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ آیت: (71) سورت: سورۂ انعام
قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُنَا وَلَا یَضُرُّنَا وَنُرَدُّ عَلٰۤی اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِی اسْتَهْوَتْهُ الشَّیٰطِیْنُ فِی الْاَرْضِ حَیْرَانَ ۪— لَهٗۤ اَصْحٰبٌ یَّدْعُوْنَهٗۤ اِلَی الْهُدَی ائْتِنَا ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
6.71. தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “எங்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க இயலாத இந்த சிலைகளையா நாங்கள் வணங்க வேண்டும்? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு ஈமானை நாங்கள் இழந்து, ஷைத்தான்களால் வழிகெடுக்கப்பட்டவன் போல் ஆகலாமா? ஷைத்தான் அவனை செய்வதறியாது தடுமாறித் திரியுமாறு விட்டுவிட்டான். அதே நேரத்தில் அவனை நேரான வழியின் பக்கம் அழைக்கக்கூடிய தோழர்கள் இருந்தும் அவன் அந்த தோழர்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும். நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுமாறு அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன்.”
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• الداعية إلى الله تعالى ليس مسؤولًا عن محاسبة أحد، بل هو مسؤول عن التبليغ والتذكير.
1. எவரையும் விசாரணை செய்வது அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளரின் பொறுப்பல்ல. எடுத்துரைப்பதும் அறிவுரை வழங்குவதுமே அவர் மீதுள்ள பொறுப்பாகும்.

• الوعظ من أعظم وسائل إيقاظ الغافلين والمستكبرين.
2. நல்லுபதேசம் மறதியாளர்களையும் கர்வமிக்கவர்களையும் விழிப்பூட்டும் பிரதானமான வழிகளில் ஒன்றாகும்.

• من دلائل التوحيد: أن من لا يملك نفعًا ولا ضرًّا ولا تصرفًا، هو بالضرورة لا يستحق أن يكون إلهًا معبودًا.
3. எவ்விதமான பலனுக்கோ, தீமைக்கோ, இயங்குவதற்கோ உரிமையற்றவர்கள் ஒருபோதும் வணங்கப்படும் இறைவனாக இருக்கத் தகுதியற்றவர்கள் என்பது அல்லாஹ் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும்.

 
معانی کا ترجمہ آیت: (71) سورت: سورۂ انعام
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ترجمے کی لسٹ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

بند کریں