Қуръони Карим маъноларининг таржимаси - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Оят: (75) Сура: Исроъ сураси
اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَیٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَیْنَا نَصِیْرًا ۟
17.75. அவர்கள் உமக்குக் கூறிய ஆலோசனையின்படி நீர் அவர்களின்பால் சாய்ந்திருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இருமடங்கு வேதனையால் நாம் உம்மைத் தண்டித்திருப்போம். பின்னர் எங்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்யக்கூடிய உதவியாளரையோ வேதனையிலிருந்து உம்மைக் காப்பாற்றக்கூடியவரையோ நீர் பெற்றுக்கொள்ள மாட்டீர்.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• الإنسان كفور للنعم إلا من هدى الله.
1. மனிதன் அருட்கொடைகளை மிக அதிகமாக மறுக்கக்கூடியவனாக இருக்கின்றான். அல்லாஹ் நேர்வழிகாட்டியவர்களைத் தவிர.

• كل أمة تُدْعَى إلى دينها وكتابها، هل عملت به أو لا؟ والله لا يعذب أحدًا إلا بعد قيام الحجة عليه ومخالفته لها.
2. ஒவ்வொரு சமூகமும் அதனுடைய மார்க்கம் மற்றும் வேதத்தின்பால் அழைக்கப்படும். அவர்கள் அதனடிப்படையில் செயல்பட்டார்களா? இல்லையா? (என்று விசாரிக்கப்படுவார்கள்). அல்லாஹ் எந்த ஒரு மனிதரையும், ஆதாரம் கிடைத்த பின் அதற்கு மாற்றம் செய்தாலேயன்றி தண்டிக்க மாட்டான்.

• عداوة المجرمين والمكذبين للرسل وورثتهم ظاهرة بسبب الحق الذي يحملونه، وليس لذواتهم.
3. குற்றவாளிகளும் பொய்பித்தவர்களும் தூதர்களையும் அவர்களது வாரிசுகளையும் எதிர்ப்பது வெளிப்படையானது. அதற்குக் காரணம் அவர்கள் சுமந்திருக்கும் சத்தியமேயாகும். மாறாக அவர்களல்ல.

• الله تعالى عصم النبي من أسباب الشر ومن البشر، فثبته وهداه الصراط المستقيم، ولورثته مثل ذلك على حسب اتباعهم له.
4. அல்லாஹ் நபியை தீங்குகளின் காரணங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் பாதுகாத்துள்ளான். அவரை உறுதிப்படுத்தி நேரான பாதைக்கு வழிகாட்டியுள்ளான். அவர்களது வாரிசுகள் அவர்களைப் பின்பற்றுவதற்கேற்ப அவற்றைப் பெறுவார்கள்.

 
Маънолар таржимаси Оят: (75) Сура: Исроъ сураси
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Таржималар мундарижаси

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Ёпиш