Check out the new design

Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси * - Таржималар мундарижаси


Маънолар таржимаси Оят: (130) Сура: Анъом
یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ— قَالُوْا شَهِدْنَا عَلٰۤی اَنْفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟
6.130. மறுமை நாளில் நாம் அவர்களிடம் கூறுவோம்: “மனித, ஜின் சமூகமே! தம் மீது அல்லாஹ் இறக்கியதை உங்களிடம் எடுத்துரைக்கும், மறுமை நாளாகிய இந்த நாளின் சந்திப்பைக் குறித்து எச்சரிக்கை செய்யும் தூதர்கள், உங்கள் இனமான மனிதர்களிலிருந்தே, உங்களிடம் வரவில்லையா? ” அதற்கு அவர்கள், “ஆம். உன் தூதர்கள் எங்களிடம் எடுத்துரைத்தார்கள் என்பதை நிச்சயமாக நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இந்நாளின் சந்திப்பையும் ஒத்துக் கொள்கிறோம். ஆயினும் உன் தூதர்களையும் இந்த நாளின் சந்திப்பையும் பொய்யெனக்கூறி நாங்கள் நிராகரித்துவிட்டோம். இவ்வுலகிலுள்ள அழியக்கூடிய அற்ப இன்பங்களும் அலங்காரங்களும் அவர்களை ஏமாற்றிவிட்டன” நாங்கள் உலகிலே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து வாழ்ந்தோம் என்று தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். நேரம் முடிவுற்று விட்டதால் அவர்களின் இந்த சாட்சியமும் நம்பிக்கையும் அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
Арабча тафсирлар:
Ушбу саҳифадаги оят фойдаларидан:
• سُنَّة الله في الضلال والهداية أنهما من عنده تعالى، أي بخلقه وإيجاده، وهما من فعل العبد باختياره بعد مشيئة الله.
1. நேர்வழி மற்றும் வழிகேடு என்பவை அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நிகழ்கின்றன. அல்லாஹ்வின் நாட்டத்திற்குப் பிறகே மனிதனது தேர்வின் மூலம் அவனது செயலாகக் கணிக்கப்படும். இதுவே அல்லாஹ்வின் வழிமுறை.

• ولاية الله للمؤمنين بحسب أعمالهم الصالحة، فكلما زادت أعمالهم الصالحة زادت ولايته لهم والعكس.
2. நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நற்செயல்களுக்கேற்பவே அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது. அவர்களின் நற்செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம் அவனுடைய நேசமும் அதிகமாகிறது. நற்செயல்கள் குறைந்தால் நேசமும் குறையும்.

• من سُنَّة الله أن يولي كل ظالم ظالمًا مثله، يدفعه إلى الشر ويحثه عليه، ويزهِّده في الخير وينفِّره عنه.
3. அல்லாஹ் அநியாயக்காரர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து விடுகிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் தீமைகளை செய்யத் தூண்டுவதோடு, நற்செயல்களில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றனர். அதை விட்டும் தூரமாக்கியும் விடுகின்றனர்.

 
Маънолар таржимаси Оят: (130) Сура: Анъом
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Қуръон Карим мухтасар тафсирининг тамилча таржимаси - Таржималар мундарижаси

Тафсир маркази томонидан нашр этилган.

Ёпиш