Қуръони Карим маъноларининг таржимаси - Тамилча таржима - Умар Шариф * - Таржималар мундарижаси

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

Маънолар таржимаси Сура: Қоф сураси   Оят:

ஸூரா காஃப்

قٓ ۫— وَالْقُرْاٰنِ الْمَجِیْدِ ۟ۚ
காஃப். கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மத் அவர்கள், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்).
Арабча тафсирлар:
بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَیْءٌ عَجِیْبٌ ۟ۚ
மாறாக, அவர்களோ அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டனர். ஆக, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்து விட்ட)னர். (உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று அவர்களை நபி எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:)
Арабча тафсирлар:
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ— ذٰلِكَ رَجْعٌ بَعِیْدٌ ۟
“நாங்கள் இறந்து, மண்ணாக ஆகிவிட்டாலுமா (-மீண்டும் உயிருடன் நாங்கள் எழுப்பப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவோம்)? அது (-இறந்தபின் எழுப்பப்படுவது நடப்பதற்கு சாத்தியமற்ற) மிக தூரமான மீட்சியாகும்.”
Арабча тафсирлар:
قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚ— وَعِنْدَنَا كِتٰبٌ حَفِیْظٌ ۟
அவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். (எழுதப்பட்ட செய்திகளை) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் நம்மிடம் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்பட்டு மிக்க பாதுகாப்பாக இருக்கிறது.)
Арабча тафсирлар:
بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِیْۤ اَمْرٍ مَّرِیْجٍ ۟
மாறாக, அவர்கள் உண்மையை (-இந்த குர்ஆனை) - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் குழப்பமான ஒரு விஷயத்தில் இருக்கிறார்கள்.
Арабча тафсирлар:
اَفَلَمْ یَنْظُرُوْۤا اِلَی السَّمَآءِ فَوْقَهُمْ كَیْفَ بَنَیْنٰهَا وَزَیَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ۟
அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, “நாம் அதை எப்படி படைத்தோம்? இன்னும், அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (-கீறல்கள், வெடிப்புகள்) இல்லை என்பதை (அவர்கள்) பார்க்கவில்லையா?”
Арабча тафсирлар:
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟ۙ
இன்னும், பூமியை அதை நாம் விரித்தோம். அதில் பெரிய மலைகளை அமைத்தோம். இன்னும் அதில் அழகான எல்லா வகையான தாவரங்களை முளைக்க வைத்தோம்.
Арабча тафсирлар:
تَبْصِرَةً وَّذِكْرٰی لِكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟
(அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் (அவர்கள் இறை அத்தாட்சிகளை) உற்று நோக்குவதற்காகவும் (அவற்றின் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (நமது வசனங்களை நாம் விவரிக்கிறோம்).
Арабча тафсирлар:
وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِیْدِ ۟ۙ
இன்னும், அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய மழை) நீரை வானத்தில் இருந்து இறக்கினோம். ஆக, அதன் மூலம் தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்க வைத்தோம்.
Арабча тафсирлар:
وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِیْدٌ ۟ۙ
இன்னும் உயரமான பேரீச்ச மரங்களையும் (நாம் முளைக்க வைத்தோம்). அவற்றில் அடர்த்தியான குலைகள் இருக்கின்றன.
Арабча тафсирлар:
رِّزْقًا لِّلْعِبَادِ ۙ— وَاَحْیَیْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ؕ— كَذٰلِكَ الْخُرُوْجُ ۟
அடியார்களுக்கு உணவாக (-வாழ்வாதாரமாக) இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). இன்னும், அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும்.
Арабча тафсирлар:
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ
இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் ஸமூது சமுதாய மக்களும் (தூதர்களைப்) பொய்ப்பித்தனர்.
Арабча тафсирлар:
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ
இன்னும், ஆது சமுதாய மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (தூதர்களைப் பொய்ப்பித்தனர்.)
Арабча тафсирлар:
وَّاَصْحٰبُ الْاَیْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ؕ— كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیْدِ ۟
இன்னும், தோட்டக்காரர்களும் துப்பஃ உடைய மக்களும் (தூதர்களைப் பொய்ப்பித்தனர்.) (மேற்கூறப்பட்ட இவர்கள்) எல்லோரும் தூதர்களைப் பொய்ப்பித்தனர். ஆகவே, என் எச்சரிக்கை (-எனது தண்டனை அவர்களுக்கு வருவது) உறுதியாகிவிட்டது.
Арабча тафсирлар:
اَفَعَیِیْنَا بِالْخَلْقِ الْاَوَّلِ ؕ— بَلْ هُمْ فِیْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِیْدٍ ۟۠
ஆக, முதல் முறை படைத்ததினால் நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? (இல்லையே!) மாறாக, அவர்கள் (இறந்தபின் மறுமையில்) புதிதாக படைக்கப்படுவதைப் பற்றி குழப்பத்தில் இருக்கிறார்கள்.
Арабча тафсирлар:
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ— وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْ حَبْلِ الْوَرِیْدِ ۟
திட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். இன்னும் அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்களாக இருக்கிறோம்.)
Арабча тафсирлар:
اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟
சந்திக்கின்ற இரு வானவர்கள் சந்திக்கின்ற போது (நாம் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறோம்). வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் (ஒவ்வொரு பக்கத்திலும் மனிதனை) கண்காணிப்பவர் இருப்பார்.
Арабча тафсирлар:
مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟
பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர.
Арабча тафсирлар:
وَجَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ؕ— ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِیْدُ ۟
மரணத்தின் மயக்கம் (மறுமையின்) உண்மையை கொண்டு வந்துவிட்டது. அதுதான் (-அந்த மரணம் இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுகிறவனாக இருந்தாய்.
Арабча тафсирлар:
وَنُفِخَ فِی الصُّوْرِ ؕ— ذٰلِكَ یَوْمُ الْوَعِیْدِ ۟
இன்னும், (அப்போது) எக்காளத்தில் ஊதப்படும். அதுதான் எச்சரிக்கப்பட்ட நாள் ஆகும்.
Арабча тафсирлар:
وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآىِٕقٌ وَّشَهِیْدٌ ۟
இன்னும், எல்லா ஆன்மாவும் - அதனுடன் (அதை) ஓட்டிவருபவரும் (அதற்கு) சாட்சி சொல்பவரும் இருக்கின்ற நிலையில் - வரும்.
Арабча тафсирлар:
لَقَدْ كُنْتَ فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْیَوْمَ حَدِیْدٌ ۟
திட்டவட்டமாக இதை மறந்(து அலட்சியம் செய்)த நிலையில் நீ இருந்தாய். ஆக, உன்னை விட்டும் உனது (மறதியின்) திரையை நாம் அகற்றி விட்டோம். ஆகவே, இன்றைய தினம் உனது பார்வை மிகக் கூர்மையானதாக இருக்கும்.
Арабча тафсирлар:
وَقَالَ قَرِیْنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیْدٌ ۟ؕ
அவனுடைய நண்பர் (-உலகில் மனிதனின் செயல்களை கண்காணித்து பதிவு செய்வதற்காக அவனுடன் நிர்ணயிக்கப்பட்ட வானவர்) கூறுவார்: “இது (-இவர் உலகில் செய்த அமல்) என்னிடம் தயாராக (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது.”
Арабча тафсирлар:
اَلْقِیَا فِیْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیْدٍ ۟ۙ
(மனிதனுடன் நிர்ணயிக்கப்பட்ட இரு வானவர்களே!) நிராகரிப்பாளர், முரண்டுபிடிப்பவர் எல்லோரையும் நீங்கள் நரகத்தில் தள்ளுங்கள்!
Арабча тафсирлар:
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ مُّرِیْبِ ۟ۙ
செல்வத்தை (தர்மம் செய்யாமல்) முற்றிலும் தடுப்பவர், (மக்கள் மீது தனது சொல்லாலும் செயலாலும்) எல்லை மீறுபவர், (அல்லாஹ்வின் விஷயத்தில் அதிகம்) சந்தேகிப்பவன் எல்லோரையும் (நீங்கள் நரகத்தில் தள்ளுங்கள்!)
Арабча тафсирлар:
١لَّذِیْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِیٰهُ فِی الْعَذَابِ الشَّدِیْدِ ۟
எவர் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தினாரோ அவரை கடுமையான தண்டனையில் நீங்கள் தள்ளுங்கள்! (என்று அந்த இரு வானவர்களுக்கு உத்தரவிடப்படும்.)
Арабча тафсирлар:
قَالَ قَرِیْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَیْتُهٗ وَلٰكِنْ كَانَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟
அவனுடைய நண்பன் (-உலகத்தில் மனிதனுடன் இணைந்திருந்த ஷைத்தான்) கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை (உனது மார்க்கத்தை) மீறச் செய்யவில்லை. (நான் அவனை வழி கெடுக்கவில்லை.) எனினும், அவன் தூரமான வழிகேட்டில் இருந்தான்.”
Арабча тафсирлар:
قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَیَّ وَقَدْ قَدَّمْتُ اِلَیْكُمْ بِالْوَعِیْدِ ۟
அல்லாஹ் கூறுவான்: “என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் உங்களுக்கு திட்டமாக எச்சரிக்கையை முற்படுத்திவிட்டேன்.”
Арабча тафсирлар:
مَا یُبَدَّلُ الْقَوْلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠
(இணைவைத்தவர்கள் விஷயத்தில்) என்னிடம் பேச்சுகள் (-எனது வாக்குகள்) மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனாக இல்லை,
Арабча тафсирлар:
یَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِیْدٍ ۟
“நீ நிரம்பிவிட்டாயா? என்று நரகத்திடம் நாம் கூறுகின்ற (அந்த) நாளில் (முற்றிலும் நீதமாக தீர்ப்புகள் இருக்கும்).” அந்த நரகம் (பதில்) கூறும்: “(நரகத்தில் போடுவதற்கு பாவிகள்) இன்னும் அதிகம் இருக்கிறார்களா?” என்று.
Арабча тафсирлар:
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْدٍ ۟
இன்னும், இறையச்சமுள்ளவர்களுக்காக சொர்க்கம் தூரமின்றி சமீபமாகக் கொண்டு வரப்படும்.
Арабча тафсирлар:
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ ۟ۚ
அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, (அல்லாஹ்வின் கட்டளைகளை) அதிகம் பேணி பாதுகாக்கக்கூடிய எல்லோருக்கும் இ(ந்த சொர்க்கமான)து வாக்களிக்கப்படுகிறது.
Арабча тафсирлар:
مَنْ خَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِیْبِ ۟ۙ
எவர் ரஹ்மானை மறைவில் பயந்து (பாவங்களை விட்டு விலகி,) அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய உள்ளத்துடன் வந்தாரோ (அவருக்காக சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது),
Арабча тафсирлар:
١دْخُلُوْهَا بِسَلٰمٍ ؕ— ذٰلِكَ یَوْمُ الْخُلُوْدِ ۟
(இத்தகைய நல்லோரே!) நீங்கள் அ(ந்த சொர்க்கத்)தில் ஸலாமுடன் - பாதுகாப்புடன் நுழையுங்கள்! இதுதான் (முடிவே இல்லாத) நிரந்தர நாள் ஆகும்.
Арабча тафсирлар:
لَهُمْ مَّا یَشَآءُوْنَ فِیْهَا وَلَدَیْنَا مَزِیْدٌ ۟
அவர்கள் நாடுகின்ற எல்லாம் அதில் அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நம்மிடம் அதிகமான (- முடிவில்லாத) அருட்கொடைகள் (-இன்பங்கள் அவர்களுக்கு) உண்டு.
Арабча тафсирлар:
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوْا فِی الْبِلَادِ ؕ— هَلْ مِنْ مَّحِیْصٍ ۟
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட முரட்டு சக்தி உடைய பலசாலிகளாக இருந்தார்கள். ஆக, அவர்கள் (தங்களுக்கு) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா? என்று நகரங்களில் (மூலை முடுக்குகளில் எல்லாம்) சுற்றி வந்தார்கள்.
Арабча тафсирлар:
اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَی السَّمْعَ وَهُوَ شَهِیْدٌ ۟
யார் ஒருவர் அவருக்கு (சிந்திக்கின்ற உயிருள்ள) உள்ளம் (-அறிவு) இருக்கிறதோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. அல்லது, யார் ஒருவர் - அவரோ (உள்ளத்தால்) பிரசன்னமாகி இருந்து, (சொல்லப்படுவதை) நன்கு புரிபவராக இருந்து, (அழிக்கப்பட்ட முற்கால மக்களைப் பற்றி நாம் கூறுகிற செய்திகளை) - செவிசாய்த்து கேட்பாரோ (அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது.)
Арабча тафсирлар:
وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ۖۗ— وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ ۟
இன்னும், திட்டவட்டமாக வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம். நமக்கு எவ்வித சோர்வும் (அசதியும், களைப்பும்) ஏற்படவில்லை.
Арабча тафсирлар:
فَاصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِ ۟ۚ
ஆக, (நபியே!) அவர்கள் பேசுகிற பேச்சுகளை சகிப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் மறைவதற்கு முன்னரும் உமது இறைவனை புகழ்ந்து துதித்து வணங்குவீராக!
Арабча тафсирлар:
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاَدْبَارَ السُّجُوْدِ ۟
இன்னும், இரவி(ன் எல்லா நேரங்களி)லும் (உம்மால் முடிந்தளவு) அவனை துதித்து வணங்குவீராக! இன்னும் அந்த (மஃரிப்) தொழுகைக்குப் பிறகு (சுன்னத்தான இரு ரக்அத்துகளை) தொழுவீராக!
Арабча тафсирлар:
وَاسْتَمِعْ یَوْمَ یُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ
(நபியே!) சமீபமான ஓர் இடத்தில் இருந்து அழைப்பவர் அழைக்கின்ற நாளில் (அந்த அழைப்பை) நீர் செவியுறுவீராக!
Арабча тафсирлар:
یَّوْمَ یَسْمَعُوْنَ الصَّیْحَةَ بِالْحَقِّ ؕ— ذٰلِكَ یَوْمُ الْخُرُوْجِ ۟
அவர்கள் உண்மையில் அந்த சப்தத்தை செவியுறுகின்ற நாளில் (தங்களது புதைக்குழியில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள்). அதுதான் (படைப்புகள் அனைவரும் புதைக்குழிகளில் இருந்து) வெளியேறுகிற நாளாகும்.
Арабча тафсирлар:
اِنَّا نَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَاِلَیْنَا الْمَصِیْرُ ۟ۙ
நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; மரணிக்க வைக்கிறோம். இன்னும், நம் பக்கமே (இறுதி) மீளுமிடம் இருக்கிறது.
Арабча тафсирлар:
یَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا ؕ— ذٰلِكَ حَشْرٌ عَلَیْنَا یَسِیْرٌ ۟
அவர்களை விட்டும் பூமி பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது). இது (-மறுமையில் படைப்புகளை உயிர்ப்பித்து ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டலாகும்.
Арабча тафсирлар:
نَحْنُ اَعْلَمُ بِمَا یَقُوْلُوْنَ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِجَبَّارٍ ۫— فَذَكِّرْ بِالْقُرْاٰنِ مَنْ یَّخَافُ وَعِیْدِ ۟۠
அவர்கள் கூறுவதை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்கள் மீது (-அவர்களை அடக்கி வைக்கக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய) கொடுங்கோலனாக இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகிறவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக!
Арабча тафсирлар:
 
Маънолар таржимаси Сура: Қоф сураси
Суралар мундарижаси Бет рақами
 
Қуръони Карим маъноларининг таржимаси - Тамилча таржима - Умар Шариф - Таржималар мундарижаси

Қуръон Карим маъноларининг тамилча таржимаси, мутаржим: Шайх Умар Шариф ибн Абдуссалом

Ёпиш