Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 优努斯   段:
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ— اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
10.71. -தூதரே!- நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு நூஹின் செய்தியை எடுத்துரைப்பீராக. அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “என் சமூகமே, நான் உங்களிடையே இருப்பதும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கொண்டு உங்களை அறிவுறுத்துவதும் உங்களுக்குப் பாரமாகத் தோன்றி, நீங்கள் என்னைக் கொல்ல நாடினால் உங்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே உறுதியான திட்டம் தீட்டி என்னை அழிக்க முடிவுசெய்யுங்கள். அதற்கு உங்களின் தெய்வங்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களின் திட்டம் புரியாத இரகசியமாக இருக்க வேண்டாம். என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிறகு அதனைச் செயல்படுத்துங்கள். ஒரு வினாடி கூட எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்.
阿拉伯语经注:
فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ— وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
10.72. நீங்கள் எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இறைவனின் தூதை எடுத்துரைப்பதற்காக உங்களிடம் எந்த கூலியையும் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என் மீது நம்பிக்கை கொண்டாலும் என்னை நிராகரித்தாலும் எனது கூலி அல்லாஹ்விடமே இருக்கின்றது. நான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரியக்கூடியவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
阿拉伯语经注:
فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟
10.73. அவருடைய சமூகம் அவரை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது. நாம் அவரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் கப்பலில் காப்பாற்றினோம். அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் வழித்தோன்றல்களாக அவர்களை ஆக்கினோம். அவர் கொண்டு வந்த சான்றுகளையும் ஆதாரங்களையும் நிராகரித்தவர்களை வெள்ளத்தால் அழித்து விட்டோம். -தூதரே!- நூஹ் எச்சரித்தும் நம்பிக்கை கொள்ளாத மக்களின் கதி என்னாவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக.
阿拉伯语经注:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟
10.74. நூஹுக்கு சில காலத்திற்குப் பிறகு பல தூதர்களை அவர்களது சமூகங்களின்பால் அனுப்பினோம். தூதர்கள் தங்களின் சமூகங்களிடம் சான்றுகளையும் அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் தூதர்களை நிராகரிப்பதில் முன்பு உறுதியாக இருந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். முந்தைய தூதர்களை நிராகரித்த அந்த மக்கள் மீது முத்திரையிட்டது போன்றே எல்லா கால கட்டங்களிலும் இடங்களிலும் நிராகரிப்பின் மூலம் இறைவரம்பை மீறக்கூடிய நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களின் மீதும் முத்திரையிட்டு விடுகின்றோம்.
阿拉伯语经注:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
10.75. இந்த தூதர்கள் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் எகிப்தின் அரசன் பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து தலைவர்களிடமும் அனுப்பினோம். அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பினோம். ஆனால் பிர்அவ்னும் அவன் சமூகத்தினரும் அவர்கள் இருவரும் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதர்களை மறுத்ததனாலும் குற்றவாளிகளாக இருந்தார்கள்.
阿拉伯语经注:
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟
10.76. பிர்அவ்னிடமும் அவன் சமூகத்து பெரியவர்களிடமும் மூஸாவும் ஹாரூனும் கொண்டு வந்த சத்திய மார்க்கம் வந்த போது மூஸா கொண்டு வந்த இறை அத்தாட்சிகளைப் பற்றி அவர்கள் “நிச்சயமாக இவை தெளிவான சூனியமே. அவை உண்மையல்ல.” என்று கூறினார்கள்.
阿拉伯语经注:
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ— اَسِحْرٌ هٰذَا ؕ— وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
10.77. மூஸா, அவர்கள் கூறியதை மறுத்தவராக கூறினார்: “உங்களிடம் வந்துள்ள சத்தியத்தையா சூனியம் என்று கூறுகிறீர்கள்? இது ஒருபோதும் சூனியமாக முடியாது. சூனியக்காரன் ஒரு போதும் வெற்றிபெற மாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். பிறகு எவ்வாறு நான் அதில் ஈடுபட முடியும்?
阿拉伯语经注:
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ— وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟
10.78. பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் விடையளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு எம்மைத் திசை திருப்பவும் உமக்கும் உமது சகோதரருக்கும் அதிகாரம் கிடைக்கவுமா இந்த சூனியத்தை எம்மிடம் எடுத்து வந்துள்ளீர்கள்? -மூஸாவே ஹாரூனே- நீங்கள் இருவரும் எங்களிடம் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• سلاح المؤمن في مواجهة أعدائه هو التوكل على الله.
1. நம்பிக்கையாளன் தன் எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஆயுதம் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதேயாகும்.

• الإصرار على الكفر والتكذيب بالرسل يوجب الختم على القلوب فلا تؤمن أبدًا.
2. நிராகரிப்பிலும் தூதர்களை மறுப்பதிலும் தொடர்ந்து நிலைத்திருப்பதனால், எப்பொழுதுமே நம்பிக்கை கொள்ள முடியாதவாறு, உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விடும்.

• حال أعداء الرسل واحد، فهم دائما يصفون الهدى بالسحر أو الكذب.
3. தூதர்களின் எதிரிகளுடைய நிலை ஒன்றே. அவர்கள் எப்பொழுதும் நேர்வழியை சூனியம் அல்லது பொய் என்பதாகவே வர்ணிப்பார்கள்.

• إن الساحر لا يفلح أبدًا.
4. நிச்சயமாக சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டான்.

 
含义的翻译 章: 优努斯
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭