Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 奈哈里   段:
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ شَیْـًٔا وَّلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۚ
16.73. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளை வணங்குகிறார்கள். அவை வானங்களிலிருந்தோ பூமியிலிருந்தோ அவர்களுக்கு உணவளிக்க சக்திபெற மாட்டாது. அவை உயிரும் அறிவுமற்ற ஜடப்பொருள்களாக இருப்பதால் அவற்றுக்கு அவை சொந்தமும் கிடையாது.
阿拉伯语经注:
فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَ ؕ— اِنَّ اللّٰهَ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
16.74. -மனிதர்களே!- பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்திபெறாத இந்த சிலைகளை அல்லாஹ்வுக்கு மாதிரிகளாக ஆக்காதீர்கள். வணங்குவதில் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்குவதற்கு அவனுக்கு எந்த மாதிரியும் இல்லை. தன்னுடைய பரிபூரணமான, கண்ணியமான பண்புகளை அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அவற்றை அறிய மாட்டீர்கள். எனவேதான் அவனுக்கு இணைவைப்பதிலும் உங்கள் சிலைகளுக்கு அவன் ஒப்பானவன் எனச் சித்தரிப்பதிலும் ஈடுபடுகிறீர்கள்.
阿拉伯语经注:
ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا یَقْدِرُ عَلٰی شَیْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ یُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا ؕ— هَلْ یَسْتَوٗنَ ؕ— اَلْحَمْدُ لِلّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
16.75. அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு உதாரணம் கூறுகிறான்: ஒருவர் எதையும் செய்யமுடியாத ஓர் அடிமை. அவரிடம் செலவு செய்வதற்கும் எதுவும் இல்லை. மற்றொருவர் சுதந்திரமானவர். நாம் அவருக்கு தூய்மையான செல்வங்களை வழங்கியுள்ளோம். தான் விரும்பியவாறு அதனை அவர் செலவளிக்கிறார். விரும்பியவாறு அவர் அதிலிருந்து வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செலவு செய்கிறார். இந்த இருவரும் சமமாவார்களா என்ன? அவ்வாறிருக்கும் போது, தன் ஆட்சியில் தான் நாடியவாறு செயல்படும் அல்லாஹ்வையும் எதுவும் செய்ய இயலாத உங்கள் சிலைகளையும் எவ்வாறு சமமாக்குகிறீர்கள்? புகழனைத்தும் புகழுக்குத் தகுதியான அல்லாஹ்வுக்கே உரியது. ஆனால் இணைவைப்பாளர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிய மாட்டார்கள்.
阿拉伯语经注:
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلَیْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا یَقْدِرُ عَلٰی شَیْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰی مَوْلٰىهُ ۙ— اَیْنَمَا یُوَجِّهْهُّ لَا یَاْتِ بِخَیْرٍ ؕ— هَلْ یَسْتَوِیْ هُوَ ۙ— وَمَنْ یَّاْمُرُ بِالْعَدْلِ ۙ— وَهُوَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟۠
16.76. அவர்களுக்கு மறுப்பாக அல்லாஹ் மற்றொரு உதாரணமாக இரு மனிதர்களை கூறுகிறான். அவர்களில் ஒருவர் ஊமையாகவும், செவிடனாகவும், பேசவும், செவியேற்கவும், விளங்கிக் கொள்ளவும் இயலாதவராக இருக்கின்றார். அவர் தனக்கோ மற்றவர்களுக்கோ பயனளிக்க இயலாதவராக, தன் பொறுப்பாளருக்கு கடும் சுமையாக இருக்கின்றார். பொறுப்பாளர் அவரை எங்கே அனுப்பினாலும் அவர் எந்த நன்மையையும் கொண்டுவருவதில்லை. தேவையானதைப் பெற்றுக்கொள்வதுமில்லை. இத்தகைய பண்புகளையுடைய ஒருவரும் நன்றாக செவியேற்கக்கூடிய, பேசக்கூடிய, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய, அவர்களை நீதியைக் கொண்டு ஏவக்கூடிய, கோணல், சந்தேகமற்ற தெளிவான பாதையில் நிலைத்திருக்கக்கூடிய மனிதரும் சமமாவார்களா என்ன? எனவே, -இணைவைப்பாளர்களே!- பரிபூரண, கண்ணியமிக்க பண்புகளையுடைய அல்லாஹ்வையும் செவியேற்கவோ, பேசவோ, பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெறாத உங்கள் சிலைகளையும் எவ்வாறு சமமாக்குகிறீர்கள்?
阿拉伯语经注:
وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
16.77. வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான். அந்த அறிவுக்கு அவன் மட்டுமே உரித்தானவன். படைப்பினங்களில் வேறு யாரும் அவற்றை அறிய மாட்டார்கள். மறைவான விஷயங்களில் உள்ளடங்கியுள்ள மறுமை நிகழ்வும் அவன் நாடினால் கண்ணை திறந்து இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடும். மாறாக அதை விடவும் விரைவாக நிகழ்ந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்ப முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை செய்ய நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும்.
阿拉伯语经注:
وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَیْـًٔا ۙ— وَّجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ۙ— لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
16.78. மனிதர்களே! அவனே உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து உங்களை கர்ப்ப நேரம் கழிந்த பின் எதையும் அறியாத குழந்தைகளாக வெளிப்படுத்துகிறான். நீங்கள் செவியேற்பதற்காக செவிகளையும் பார்ப்பதற்காக பார்வைகளையும் விளங்கிக்கொள்வதற்காக உள்ளங்களையும் ஏற்படுத்தினான். அவற்றை வழங்கியதற்காக அவனுக்கு நீங்கள் நன்றிசெலுத்த வேண்டும் என்பதற்காக வேண்டியே அவற்றை வழங்கியுள்ளான்.
阿拉伯语经注:
اَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ مُسَخَّرٰتٍ فِیْ جَوِّ السَّمَآءِ ؕ— مَا یُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
16.79. இந்த இணைவைப்பாளர்கள் வசப்படுத்தப்பட்டுள்ள பறவைகளைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவற்றுக்கு வழங்கிய இறக்கைகளினாலும் காற்றின் மென்மையினாலும் தனது இறகுகளை மடக்கி, விரிப்பதற்காக அவற்றுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய உள்ளுணர்வினாலும் அவை விண்ணில் பறப்பதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. வல்லமையுடைய அல்லாஹ்தான் அவற்றை விழுந்து விடாமல் காற்றில் பிடித்து வைத்துள்ளான். நிச்சயமாக இவ்வாறு வசப்படுத்தப்பட்டுள்ளதில், கீழே விழாமல் பிடித்து வைத்ததில் நம்பிக்கைகொள்ளும் மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் சான்றுகளையும் படிப்பினைகளையும் கொண்டு பயனடைகிறார்கள்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• لله تعالى الحكمة البالغة في قسمة الأرزاق بين العباد، إذ جعل منهم الغني والفقير والمتوسط؛ ليتكامل الكون، ويتعايش الناس، ويخدم بعضهم بعضًا.
1. அடியார்களிடையே அல்லாஹ் வாழ்வாதாரத்தைப் பங்கிட்டு வைத்துள்ளதன் ஆழமான நோக்கங்கள் அவனுக்கே உரியன. அவன் அவர்களின் உலகவாழ்க்கையை முழுமைப்படுத்துவதற்காக, மக்கள் ஒருவருக்கொருவர் கலந்து வாழ்வதற்காக அவர்களில் சிலர் சிலருக்குப் பணிவிடைசெய்வதற்காக ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர் என பலவகையினரை அவர்களில் ஏற்படுத்தியுள்ளான்.

• دَلَّ المثلان في الآيات على ضلالة المشركين وبطلان عبادة الأصنام؛ لأن شأن الإله المعبود أن يكون مالكًا قادرًا على التصرف في الأشياء، وعلى نفع غيره ممن يعبدونه، وعلى الأمر بالخير والعدل.
2. அல்லாஹ் கூறிய இரு உதாரணங்களும் இணைவைப்பாளர்களின் வழிகேட்டையும், சிலை வணக்கம் தவறு என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் ஆட்சியாளனாக, எதையும் செய்யும் ஆற்றலுடையவனாக, தன்னை வணங்கக்கூடியவர்களுக்குப் பயனளிக்கக்கூடியவனாக நன்மையையும் நீதியையும் கொண்டு கட்டளையிடுபவனாக இருக்க வேண்டும்.

• من نعمه تعالى ومن مظاهر قدرته خلق الناس من بطون أمهاتهم لا علم لهم بشيء، ثم تزويدهم بوسائل المعرفة والعلم، وهي السمع والأبصار والأفئدة، فبها يعلمون ويدركون.
3. அல்லாஹ்வின் அருள் மற்றும் ஆற்றலில் ஒன்றுதான் மனிதர்களை தமது தாயின் வயிறுகளிலிருந்து படைத்ததாகும். அவர்களுக்கு எவ்வித அறிவும் இருக்கவில்லை. பின்னர் அவர்களுக்கு கேள்வி, பார்வை, உள்ளங்கள் ஆகிய அறிவுக்குரிய சாதனங்களை அவர்களுக்கு வழங்கினான். அதன் மூலம் அவர்கள் அறிந்தும், புரிந்தும் கொள்கிறார்கள்.

 
含义的翻译 章: 奈哈里
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭