《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
57 : 2

وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

2.57. நாம் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, பூமியில் நீங்கள் தடுமாறித் திரிந்தபோது சூரிய வெப்பத்திலிருந்து உங்களைக்காக்க மேகத்தை உங்கள்மீது நிழலிடச் செய்தோம். உங்கள்மீது தேனைப்போன்று இனிப்பான பானமான "மன்னு" வையும் காடையை ஒத்த தூய்மையான இறைச்சியைக்கொண்ட "சல்வா" என்னும் பறவையையும் இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள் என்று நாம் உங்களிடம் கூறினோம். இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டதன் மூலம் அவர்கள் நமக்கு எந்தக் குறையையும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக தமக்குக் கிடைக்கவிருந்த கூலியை இழந்து தம்மை தண்டனைக்குற்படுத்திக் கொண்டதன் மூலம் தமக்குத்தாமே அநியாயம் இழைத்துக்கொண்டனர். info
التفاسير:
这业中每段经文的优越:
• عِظَمُ نعم الله وكثرتها على بني إسرائيل، ومع هذا لم تزدهم إلا تكبُّرًا وعنادًا.
1. இஸ்ராயீலின் மக்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியபோதும் அது அவர்களுக்கு கர்வத்தையும் பிடிவாதத்தையும் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லை. info

• سَعَةُ حِلم الله تعالى ورحمته بعباده، وإن عظمت ذنوبهم.
2. அல்லாஹ் தன் அடியார்கள் விஷயத்தில் பொறுமையாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான், அடியார்கள் பெரும் பாவங்களைச் செய்தாலும் சரியே. info

• الوحي هو الفَيْصَلُ بين الحق والباطل.
3. சத்தியத்தையும் அசத்தியத்தையும் நிர்ணயிப்பது வஹியே ஆகும். info