Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 安比亚仪   段:
وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ— وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟
21.36. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் உம்மைப் பார்த்தால் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இவர்தான் நீங்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டக்கூடியவரா?” என்று கூறி தங்களைப் பின்பற்றுபவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் உம்மைப் பரிகாசம் செய்வதுடன் அவர்களுக்காக இறக்கப்பட்ட குர்ஆனையும் மறுத்து, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளையும் மறுக்கிறார்கள். எனவே அனைத்துத் தீமைகளும் ஒன்றுசேர இருப்பதால் அவர்களே குறை கூறப்பட மிகத் தகுதியானவர்கள்.
阿拉伯语经注:
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ— سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟
21.37. மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவன் விஷயம் நிகழ்வதற்கு முன்னரே அதை விரைவாக வேண்டுகிறான். அதனால்தான் இணைவைப்பாளர்கள் வேதனையை விரைவாக வேண்டுகிறார்கள். -என் வேதனைக்காக அவசரப்படக்கூடியவர்களே!- நான் உங்களுக்கு நீங்கள் அவசரப்படும் வேதனையைக் காட்டுவேன். எனவே அதனை அவசரமாக வேண்டாதீர்கள்.
阿拉伯语经注:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
21.38. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்கள் அவசரப்பட்டு கேட்கிறார்கள்: -“முஸ்லிம்களே!- இறந்தபின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது நிகழும் என்று எங்களுக்கு வாக்களித்த உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது எப்போது நிகழும்? என்பதைக் கூறுங்கள்.”
阿拉伯语经注:
لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟
21.39. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளை மறுக்கும் இந்த நிராகரிப்பாளர்கள் அப்போது தங்கள் முகங்களையும் முதுகுகளையும் விட்டு நரக நெருப்பைத் தடுக்க முடியாது என்பதையும் அந்நாளில் அவர்களுக்கு வேதனையை தடுத்து யாரும் உதவிசெய்ய முடியாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமே!. இதை அவர்கள் உறுதியாக அறிந்தால் வேதனையை விரைவாக வேண்ட மாட்டார்கள்.
阿拉伯语经注:
بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
21.40. நெருப்பைக்கொண்டு செய்யப்படும் இந்த வேதனை அவர்கள் அறிந்த நிலையில் அவர்களிடம் வராது. மாறாக திடீரென அவர்களிடம் வரும். அவர்கள் அதனைத் தடுக்க சக்திபெறமாட்டார்கள். பாவமன்னிப்புக் கோரி அருளைப் பெறும் அளவுக்கு அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.
阿拉伯语经注:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
21.41. -தூதரே!- உம் சமூகம் உம்மை பரிகாசம் செய்தால் நீர் ஒன்றும் அதற்குப் புதுமையானவர் அல்ல. உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பரிகாசம் செய்த நிராகரிப்பாளர்களை வேதனை சூழ்ந்துகொண்டது. அதனைக் கொண்டு அவர்களது தூதர்கள் அவர்களை அச்சுறுத்திய போது அதனை அவர்கள் இவ்வுலகில் பரிகாசம் செய்துகொண்டிருந்தனர்.
阿拉伯语经注:
قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ— بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟
21.42. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “அளவிலாக் கருணையாளன் உங்கள் மீது வேதனையை இறக்கி உங்களை அழிக்க நாடினால் இரவிலும் பகலிலும் உங்களைப் பாதுகாப்பவர் யார்? மாறாக அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரைகளை நினைவுபடுத்துவதையும் அவனின் ஆதாரங்களையும் புறக்கணிக்கிறார்கள். அறியாமையினால் அவர்கள் அவற்றைக்குறித்து எதையும் சிந்திப்பதில்லை.
阿拉伯语经注:
اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ— لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟
21.43. அல்லது நம்முடைய வேதனையிலிருந்து அவர்களை தடுக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவை தங்களுக்குக்கூட நன்மையளிக்கவோ தீங்கினை அகற்றவோ சக்திபெற மாட்டா. தமக்குக்கூட உதவிசெய்ய முடியாதவை எவ்வாறு மற்றவர்களுக்கு உதவிசெய்யும்? அவர்கள் நம்முடைய வேதனையை விட்டும் பாதுகாக்கப்படவும் மாட்டார்கள்.
阿拉伯语经注:
بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ— اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟
21.44. மாறாக இந்த நிராகரிப்பாளர்களையும் அவர்களின் முன்னோர்களையும் விட்டுப்பிடிக்கும் பொருட்டு நாம் அருட்கொடைகளை அள்ளி வழங்கி நீண்ட காலம் வரைக்கும் அனுபவிக்கச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் ஏமாந்து, தங்களின் நிராகரிப்பில் நிலைத்துவிட்டார்கள். நம் அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்து நம் வேதனையை விரைவாக வேண்டும் இவர்கள், நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறத்திலிருந்து, அதிலுள்ளவர்களை அடக்கி, வென்று, குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதைக் கவனித்து, மற்றவர்களுக்கு ஏற்பட்டது இவர்களுக்கும் ஏற்படாமலிருக்க, படிப்பினை பெறமாட்டாரகளா? இவர்கள் ஒருபோதும் மிகைப்பவர்களல்ல. மாறாக அவர்கள் மிகைக்கப்படுபவர்களே.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• بيان كفر من يستهزئ بالرسول، سواء بالقول أو الفعل أو الإشارة.
1. தூதரைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகும். அது சொல்லாகவோ, செயலாகவோ, சைகையாகவோ இருந்தாலும் சரியே.

• من طبع الإنسان الاستعجال، والأناة خلق فاضل.
2. அவசரப்படுவது மனிதனின் இயற்கை தன்மையாகும். நிதானம் சிறந்த பண்பாகும்.

• لا يحفظ من عذاب الله إلا الله.
3. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அல்லாஹ்வைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது.

• مآل الباطل الزوال، ومآل الحق البقاء.
4. அசத்தியத்தின் முடிவு அழிவே. சத்தியத்தின் முடிவு நிலைப்பதே.

 
含义的翻译 章: 安比亚仪
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭