《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
25 : 22

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِیْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ ١لْعَاكِفُ فِیْهِ وَالْبَادِ ؕ— وَمَنْ یُّرِدْ فِیْهِ بِاِلْحَادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟۠

22.25. நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து மற்றவர்களையும் இஸ்லாத்தில் நுழைவதை விட்டும் தடுப்பவர்கள், இணைவைப்பாளர்கள் ஹுதைபிய்யாவின் போது நடந்துகொண்டதைப் போல மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் மக்களைத் தடுப்பவர்கள் ஆகியோருக்கு கடுமையான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம். மக்கள் தங்களின் தொழுகையில் முன்னோக்கும் கிப்லாவாகவும் ஹஜ் மற்றும் உம்ராவின் கிரிகைகளில் ஒன்றாகவும் ஆக்கிய அந்தப் பள்ளிவாயிலில் மக்காவில் வசிப்போரும் அதற்கு வெளியிலிருந்து வருவோரும் சமமானவர்களே. அங்கு வேண்டுமென்றே யார் பாவமான காரியத்தை செய்து சத்தியத்தை விட்டும் நெறிபிறழ நாடுகிறாரோ நாம் அவருக்கு வேதனை மிக்க தண்டனையை அனுபவிக்கச் செய்வோம். info
التفاسير:
这业中每段经文的优越:
• حرمة البيت الحرام تقتضي الاحتياط من المعاصي فيه أكثر من غيره.
1. புனித கஃபாவின் புனிதம், ஏனைய இடங்களை விட அந்த இடத்தில் பாவங்கள் செய்வதில் இருந்து அதிகம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை வேண்டி நிற்கின்றது. info

• بيت الله الحرام مهوى أفئدة المؤمنين في كل زمان ومكان.
2. எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் நம்பிக்கையாளர்களின் உள்ளங்கள் ஆசைகொள்ளும் இடம் அல்லாஹ்வின் புனித ஆலயமேயாகும். info

• منافع الحج عائدة إلى الناس سواء الدنيوية أو الأخروية.
3. ஹஜ்ஜுடைய இவ்வுலக, மறுவுலக பயன்கள் அனைத்தும் மனிதர்களுக்கே வந்து சேரக்கூடியது. info

• شكر النعم يقتضي العطف على الضعفاء.
4. அருள்களுக்கு நன்றிசெலுத்துவது என்பது பலவீனர்களுக்கு கருணை புரிவதை வேண்டுகின்றது. info