Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 嘎萨特   段:
اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ— وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ— وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ— قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ— مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ
41.47. மறுமை குறித்த அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. அது எப்போது நிகழும் என்பதை அவன் மட்டுமே அறிவான். அவனைத் தவிர யாரும் அதனை அறியமாட்டார்கள். அவனுக்குத் தெரியாமல் எந்தக் கனியும் தன்னைப் பாதுகாக்கும் பாளையிலிருந்து வெளிப்படுவதுமில்லை; எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை. பிரசவிப்பதுமில்லை. இவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அல்லாஹ்வுடன் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த இணைவைப்பாளர்களை அவன் அழைக்கும் நாளில் அவர்கள் வணங்கியதன்பால் அவர்களைப் பழிக்கும் விதமாக அவர்களிடம், “எனக்கு இணையானவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணினீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான். அதற்கு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “உனக்கு இணை உண்டு என்று சாட்சி கூறக்கூடியவர் இப்போது எங்களில் யாரும் இல்லை என உனக்கு முன்னால் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.”
阿拉伯语经注:
وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
41.48. அவர்கள் அழைத்துக்கொண்டிருந்த சிலைகள் அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்துவிடும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை நிச்சயமாக அவர்கள் உறுதியாக அறிந்துகொள்வார்கள்.
阿拉伯语经注:
لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ— وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟
41.49. மனிதன் ஆரோக்கியம், செல்வம், பிள்ளை போன்ற அருட்கொடைகளை வேண்டுவதில் சோர்வடைவதில்லை. ஆனால் வறுமை, நோய் போன்ற துன்பங்கள் அவனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் மிகவும் நிராசையடைபவனாக உள்ளான்.
阿拉伯语经注:
وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ— وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ— وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ— فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ— وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
41.50. அவனுக்கு ஏற்பட்ட துன்பம் மற்றும் நோயின் பின்னர் நாம் அவனுக்கு எமது புறத்திலிருந்து ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் சுவைக்கச் செய்தால், “இது எனக்குரியது. நிச்சயமாக நான் இதற்குத் தகுதியானவன்தான். மறுமை நாள் ஏற்படும் என்று நான் எண்ணவில்லை. ஒரு வேளை மறுமை ஏற்பட்டாலும் அல்லாஹ்விடம் எனக்கு செல்வம், சொத்து கிடைக்கும். நான் தகுதியானவன் என்பதால் அவன் எனக்கு உலகில் வழங்கியது போன்றே மறுமையிலும் அருட்கொடைகளை வழங்குவான்” என்று திட்டமாக கூறுகிறான். நிச்சயமாக நிராகரிப்பாளனுக்கு அவன் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களைக்குறித்து அறிவித்திடுவோம். அவர்களைக் கடும் வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.
阿拉伯语经注:
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ— وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟
41.51. நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருட்கொடைகளை வழங்கினால் அவன் அல்லாஹ்வை நினைவுகூராமல், அவனுக்குக் கட்டுப்படாமல் அலட்சியமாக இருக்கின்றான். கர்வத்தினால் புறக்கணித்து விலகிச் செல்கிறான். வறுமையோ, நோயோ வேறு ஏதேனும் துன்பமோ அவனைப் பீடித்துவிட்டால் அவன் அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்தனை செய்பவனாகி விடுகிறான். தன்னைப் பீடித்த துன்பத்தை போக்குமாறு அவனிடம் முறையிடுகிறான். அருட்கொடைகள் வழங்கும்போது அவன் தன் இறைவனுக்கு நன்றிசெலுத்துவதுமில்லை. அவனை சோதித்தால் அந்த சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பதுமில்லை.
阿拉伯语经注:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟
41.52. -தூதரே!- பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும் நீங்கள் அதனை நிராகரித்து பொய்ப்பித்தீர்களானால் உங்களின் நிலைமை என்னவாகும் என்பதைக் குறித்து எனக்கு அறிவியுங்கள். சத்தியம் தெளிவாகவும் பலமான ஆதாரமிக்கதாகவும் உள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதத்தில் இருப்பவனை விட வழிகேடன் யார் இருக்கிறான்?!
阿拉伯语经注:
سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ— اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
41.53. அவர்களுக்கு குர்ஆன்தான் சத்தியமானது என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகும்பொருட்டு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும் பூமியின் பல்வேறு பகுதிகளிலும், மக்கா வெற்றியின் மூலம் அவர்களிலும் நம் சான்றுகளை குறைஷிக் காபிர்களுக்கு காட்டுவோம். நிச்சயமாக குர்ஆன் தன்னிடமிருந்து இறங்கியது என்று அல்லாஹ் கூறிய சாட்சி இந்த இணைவைப்பாளர்களுக்குப் போதுமானதில்லையா? அல்லாஹ்வின் சாட்சியத்தை விட யாருடைய சாட்சியம் பெரியது? அவர்கள் சத்தியத்தை விரும்பியிருந்தால் தங்கள் இறைவனின் சாட்சியை போதுமாக்கிக் கொண்டிருப்பார்கள்.
阿拉伯语经注:
اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ— اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠
41.54. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இணைவைப்பாளர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதனால் மறுமையில் தம் இறைவனைச் சந்திப்பதில் சந்தேகத்திலே உள்ளனர். எனவே அவர்கள் மறுமையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் நற்காரியம் செய்து அதற்காகத் தயாராகமாட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்து விடயங்களையும் தன் அறிவாலும் ஆற்றலாலும் சூழ்ந்துள்ளான்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• علم الساعة عند الله وحده.
1. மறுமை பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உண்டு.

• تعامل الكافر مع نعم الله ونقمه فيه تخبط واضطراب.
2. நிராகரிப்பாளன் அல்லாஹ்வின் அருட்கொடைகள் மற்றும் தண்டனைகளுடன் நடந்துகொள்ளும் முறை தடுமாற்றமாகவே இருக்கின்றது.

• إحاطة الله بكل شيء علمًا وقدرة.
3. அல்லாஹ் அறிவாலும் ஆற்றலாலும் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளான்.

 
含义的翻译 章: 嘎萨特
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭