《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 译解目录


含义的翻译 段: (110) 章: 玛仪戴
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ— اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫— تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ— وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ— وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ— وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ— وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
5.110. அல்லாஹ் ஈஸாவிடம் பின்வருமாறு உரையாடிய சந்தர்ப்பத்தை நினைவுகூர்வீராக: “மர்யமின் மகன் ஈஸாவே, நான் உம்மை தந்தையின்றி படைத்தபோது உம்மீது பொழிந்த அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக. உமது தாய் மர்யமை அக்காலப் பெண்களை விட சிறப்பாக்கி அவர் மீது செய்த அருளையும் நினைவுகூர்வீராக! ஜிப்ரீலைக் கொண்டு நாம் உம்மை வலுப்படுத்தியபோது - நீர் கைக்குழந்தையாக இருந்த போது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து உரையாடினீர். மேலும் வாலிபப் பருவத்திலும் நான் உமக்கு வழங்கிய தூதை அவர்களுக்கு எடுத்துரைத்து உரையாடினீர். உமக்கு எழுதவும் மூஸாவுக்கு இறக்கிய தவ்ராத், உம்மீது இறக்கிய இன்ஜீல், மார்க்க சட்டங்களின் இரகசியங்களையும், பயன்களையும், நோக்கங்களையும் உமக்கு நான் கற்பித்ததும் நான் உமக்கு அளித்த அருட்கொடைகளே. மேலும் நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் மண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல் செய்து பின்னர் அதில் ஊதியதும் அது பறவையாயிற்று. நீர் பிறவிக் குருடனை குருட்டுத்தன்மையிலிருந்து குணப்படுத்துகிறீர். தொழுநோயாளியையும் குணப்படுத்துகிறீர். அதனால் அவர் ஆரோக்கியமான தோல் உடையவராக மாறிவிடுகிறார். உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறீர். இவையனைத்தும் என் அனுமதியால் நடந்தவையாகும். நாம் உமக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, நீர் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது ‘ஈஸா கொண்டு வந்தது தெளிவான சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று கூறி அவற்றை நிராகரித்து இஸ்ராயீலின் மக்கள் உம்மைக் கொல்ல நாடியபோது நாம் உம்மை இஸ்ரவேலர்களிடமிருந்து காப்பாற்றியதாகும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• إثبات جمع الله للخلق يوم القيامة جليلهم وحقيرهم.
1. மறுமை நாளில் அல்லாஹ் சிறிய பெரிய அனைத்துப் படைப்பினங்களையும் ஒன்றுதிரட்டுவான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

• إثبات بشرية المسيح عليه السلام وإثبات آياته الحسية من إحياء الموتى وإبراء الأكمه والأبرص التي أجراها الله على يديه.
2. ஈஸா(அலை) ஒரு மனிதர்தாம் என்பதையும் இறந்தவர்களை உயிர்ப்பித்தமை, பிறவிக் குருடனையையும் தொழுநோயாளியையும் குணப்படுத்தியமை ஆகிய வெளிரங்கமானஅத்தாட்சிகளை அல்லாஹ் அவர் மூலம் நிகழ்த்திக்காட்டினான் என்பதையும் நிரூபித்தல்

• بيان أن آيات الأنبياء تهدف لتثبيت الأتباع وإفحام المخالفين، وأنها ليست من تلقاء أنفسهم، بل تأتي بإذن الله تعالى.
3. இறைத்தூதர்களின் அற்புதங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களை உறுதிப்படுத்தவும் நிராகரிப்பவர்களை வாயடைப்பதற்காக வருபவையே அன்றி அவர்களின் புறத்திலிருந்து வருபவையல்ல. மாறாக அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே நடைபெறுகின்றன.

 
含义的翻译 段: (110) 章: 玛仪戴
章节目录 页码
 
《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 译解目录

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

关闭