Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 段: (4) 章: 玛仪戴
یَسْـَٔلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْ ؕ— قُلْ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ۙ— وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِیْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ ؗ— فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَیْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهِ ۪— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
5.4. தூதரே! உம் தோழர்கள் உம்மிடம், ‘உண்பதற்குத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை?’ என்று கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்து உணவுகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய நாய், சிறுத்தை, கூரிய நகங்களுடைய கழுகு போன்றவை வேட்டையாடியவற்றையும் நீங்கள் உண்ணலாம். நீங்கள்தாம் அவற்றிற்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கிறீர்கள். வேட்டையாடும் ஒழுங்குகளைப் பற்றிய அறிவை அல்லாஹ்தான் உங்களுக்கு வழங்கினான். அவ்வேட்டைப் பிராணிகள், சொல்வதைச் செயற்படுத்தி தடுப்பதைத் தவிர்க்குமளவு பயிற்சி பெற்றுவிட்டால் அவை வேட்டையாடுபவை இறந்து விட்டாலும் அதனை நீங்கள் உண்ணுங்கள். அவற்றை வேட்டைக்கு அனுப்பும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் செயல்களுக்கு விரைவாக கணக்கு தீர்ப்பவன்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• تحريم ما مات دون ذكاة، والدم المسفوح، ولحم الخنزير، وما ذُكِرَ عليه اسْمٌ غير اسم الله عند الذبح، وكل ميت خنقًا، أو ضربًا، أو بسقوط من علو، أو نطحًا، أو افتراسًا من وحش، ويُستثنى من ذلك ما أُدرِكَ حيًّا وذُكّيَ بذبح شرعي.
1. அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர்கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெறிபட்டு அல்லது அடிபட்டு அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து அல்லது கொம்பால் முட்டப்பட்டு அல்லது மிருகங்களால் கடித்துக் குதறப்பட்டு செத்தவை ஆகியவை யாவும் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் இறப்பதற்கு முன் அறுக்கப்பட்டவை விதிவிலக்கானவையாகும்.

• حِلُّ ما صاد كل مدرَّبٍ ذي ناب أو ذي مخلب.
2. பயிற்றுவிக்கப்பட்ட கூரிய பற்களையுடைய அல்லது நகங்களையுடைய வேட்டைப்பிராணிகள் வேட்டையாடியவையும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

• إباحة ذبائح أهل الكتاب، وإباحة نكاح حرائرهم من العفيفات.
3. வேதக்காரர்களால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாம். அவர்களிலுள்ள சுதந்திரமான, கற்பொழுக்கமுள்ள பெண்களை மணமுடித்துக் கொள்ளவும் முடியும்.

 
含义的翻译 段: (4) 章: 玛仪戴
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭