Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 艾尔拉夫   段:
وَلَقَدْ ذَرَاْنَا لِجَهَنَّمَ كَثِیْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖؗ— لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا ؗ— وَلَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا ؗ— وَلَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا ؕ— اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
7.179. நாம் மனிதர்களிலும் ஜின்களிலும் பெரும்பாலோரை நரகத்திற்காகவே படைத்துள்ளோம். அவர்கள் நரகவாதிகளுக்குரிய செயல்களைச் செய்வார்கள் என்பதை நாம் அறிந்திருந்ததனால்தான் அவ்வாறு செய்தோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு தங்களுக்குப் பயனளிக்கும், தீங்கிழைக்கும் விஷயங்களை விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு பிரபஞ்சத்திலும் தங்களுக்குள்ளும் இருக்கும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கண்டு படிப்பினை பெற மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் சான்றுகளைச் செவிமடுத்து அதிலுள்ளவற்றைச் சிந்திக்கமாட்டார்கள். இந்த பண்புகளை உடையவர்கள் பகுத்தறிவின்மையில் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக கால்நடைகளை விடவும் வழிகெட்டவர்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.
阿拉伯语经注:
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْهُ بِهَا ۪— وَذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآىِٕهٖ ؕ— سَیُجْزَوْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
7.180. அல்லாஹ்வின் கண்ணியத்தையும் பரிபூரணத்தையும் அறிவிக்கும் அழகிய பெயர்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவற்றைக் கொண்டு நீங்கள் விரும்பும் விஷயத்தை அல்லாஹ்விடம் கேளுங்கள். அவற்றின் மூலம் அவனைப் புகழுங்கள். இந்தப் பெயர்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்குதல் அல்லது இவற்றை மறுத்தல் அல்லது இவற்றின் பொருளைத் திரித்தல் அல்லது அல்லாஹ் அல்லாதவர்களை அவற்றுக்கு உவமையாக்குதல் ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை விட்டுப் நெறிபிறழ்ந்து செல்வோரை விட்டுவிடுங்கள். அவற்றைச் சத்தியத்தை விட்டும் திருப்பும் இவர்களுக்கு, அவர்கள் செய்துகொண்டிந்த செயல்களினால் வேதனைமிக்க தண்டனையை நாம் கூலியாக வழங்குவோம்.
阿拉伯语经注:
وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟۠
7.181. நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு தாமும் நேர்வழியடைந்து, மற்றவர்களையும் இதன் பக்கம் அழைத்து அவர்களும் நேர்வழி பெற வழிவகுக்கும் ஒரு சமூகத்தினரும் இருக்கின்றார்கள். அவர்கள் நீதியுடன் தீர்ப்பு வழங்குகிறார்கள். அநியாயம் இழைக்கமாட்டார்கள்.
阿拉伯语经注:
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۚ
7.182. நம்முடைய சான்றுகளை நம்பாமல், அவற்றைப் பொய்பித்து மறுத்தவர்களுக்கு நாம் வாழ்வாதாரத்தின் வாசல்களை திறந்துவைப்போம், அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு அல்ல. மாறாக அவர்கள் தம் வழிகேட்டில் மென்மேலும் தொடருவதற்காக அவர்களை விட்டுப் பிடிப்பதற்காக. எதிர்பாராத சமயத்தில் திடீரென நம் வேதனை அவர்களைத் தாக்கி விடும்.
阿拉伯语经注:
وَاُمْلِیْ لَهُمْ ؕ— اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
7.183. அவர்கள் தண்டிக்கப்படுவோரல்ல என்று அவர்கள் கருதுமளவுக்கு நாம் அவர்களுக்குத் தண்டனையை தாமதப்படுத்துகிறோம். எனவே அவர்கள் தங்களின் வழிகேட்டிலும், நிராகரிப்பிலும் வேதனை பன்மடங்காகும் வரை நிலைத்து நிற்கிறார்கள். என் சூழ்ச்சி பலமானது. எனவேதான் அவர்களைக் கைவிட்டு விடும் நோக்கில் வெளிரங்கத்தில் அவர்களுக்கு நன்மைசெய்கிறேன்.
阿拉伯语经注:
اَوَلَمْ یَتَفَكَّرُوْا ٚ— مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ ؕ— اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
7.184. அல்லாஹ்வுடைய சான்றுகளையும் அவனுடைய தூதரையும் நிராகரிக்கும் இவர்கள் சிந்திக்கமாட்டார்களா? முஹம்மது பைத்தியக்காரர் அல்ல, அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அவனால் அனுப்பப்பட்டுள்ள தூதரே என்பதைப் புரிந்துகொள்ள, அவர்களது அறிவைச் செயற்படுத்தக் கூடாதா?
阿拉伯语经注:
اَوَلَمْ یَنْظُرُوْا فِیْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۙ— وَّاَنْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ— فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟
7.185. வானங்களிலும் பூமியிலும் காணப்படும் அல்லாஹ்வின் ஆட்சியை படிப்பினை பெறும் நோக்கோடு அவர்கள் சிந்திக்கவில்லையா? அவற்றில் அல்லாஹ் படைத்த உயிரினங்கள், தாவரங்கள், ஏனையவற்றை அவர்கள் பார்க்கவில்லையா? தங்களின் தவணைகள் நெருங்கிவிட்டன. அதற்குள் அல்லாஹ்வின்பால் மீண்டுவிட வேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திக்கவில்லையா? இந்த குர்ஆனின் மீதும் அதிலுள்ள வாக்குறுதி மற்றும் எச்சரிக்கையை அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் வேறு எந்த வேதத்தின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?
阿拉伯语经注:
مَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِیَ لَهٗ ؕ— وَیَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
7.186. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டாமல் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை. அவர்கள் நேர்வழி பெறாதவாறு தங்களின் வழிகேட்டிலும் நிராகரிப்பிலும் தடுமாறித் திரியுமாறு அல்லாஹ் அவர்களை விட்டுவிடுகிறான்.
阿拉伯语经注:
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّیْ ۚ— لَا یُجَلِّیْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَ ؔؕۘ— ثَقُلَتْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— لَا تَاْتِیْكُمْ اِلَّا بَغْتَةً ؕ— یَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِیٌّ عَنْهَا ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
7.187. இந்த பிடிவாதம் மிக்க நிராகரிப்பாளர்கள் மறுமை நாளைக் குறித்து அது எப்போது நிகழும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். முஹம்மதே! நீர் கூறுவீராக: “என்னிடமோ மற்றவர்களிடமோ அது குறித்த அறிவு இல்லை. அல்லாஹ் மட்டுமே அதனைக் குறித்து அறிவான். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அல்லாஹ்வே அதனை வெளிப்படுத்துவான். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அது தோன்றுவதை அறியமாட்டார்கள். அது திடீரென்றே உங்களிடம் வரும். நீர் மறுமையைக் குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருப்பது போல அதனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். உம் இறைவனைப் பற்றி நீர் நன்கறிந்துள்ளதால் நீர் அதனைப் பற்றி அவனிடம் கேட்க மாட்டீர் என்பதை அவர்கள் அறியவில்லை. முஹம்மதே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “மறுமை நாள் குறித்த அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.”
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• خلق الله للبشر آلات الإدراك والعلم - القلوب والأعين والآذان - لتحصيل المنافع ودفع المضار.
1. அல்லாஹ் மனிதனுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும் தீங்கிலிருந்து காத்துக் கொள்ளவும் புரிவதற்கும் அறிவதற்குமான கருவிகளான - உள்ளங்கள், கண்கள், செவிகள் ஆகிய புலனுறுப்புகளைப் படைத்துள்ளான்.

• الدعاء بأسماء الله الحسنى سبب في إجابة الدعاء، فيُدْعَى في كل مطلوب بما يناسب ذلك المطلوب، مثل: اللهمَّ تب عَلَيَّ يا تواب.
2. அல்லாஹ்வின் அழகிய பெயர்களைக் கொண்டு பிரார்த்திப்பது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு சமயத்திலும் பொருத்தமான பெயர்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக “அல்லாஹ்வே, பாவங்களை மன்னிக்கக்கூடியவனே என்னை மன்னித்தருள்வாயாக.”

• التفكر في عظمة السماوات والأرض، والتوصل بهذا التفكر إلى أن الله تعالى هو المستحق للألوهية دون غيره؛ لأنه المنفرد بالصنع.
3. வானங்கள் மற்றும் பூமியின் மகத்துவத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும். அதன் மூலம் அல்லாஹ்வே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவன் மாத்திரமே அவற்றைப் படைப்பவன்.

 
含义的翻译 章: 艾尔拉夫
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭