《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。

external-link copy
4 : 71

یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرْكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا یُؤَخَّرُ ۘ— لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

71.4. நிச்சயமாக நீங்கள் இவ்வாறு செய்தால் அடியார்களின் உரிமைகளோடு சம்பந்தமில்லாத உங்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். அவன் அறிந்த குறிப்பிட்ட தவணை வரை உங்கள் சமுதாயத்தின் வாழ்நாளை நீட்டுவான். அதில் அவ்வாறு நேராக இருக்கும்வரை வரை பூமியை நீங்கள் நிர்வாகம் செய்வீர்கள். நிச்சயமாக மரணம் வந்துவிட்டால் தாமதப்படுத்தப்படமாட்டாது. நீங்கள் இதனை அறிந்திருந்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வதன் பக்கம், நீங்கள் இருந்துகொண்டிருக்கும் இணைவைப்பு மற்றும் வழிகேட்டை விட்டும் பாவமன்னிப்புக் கோருவதன் பக்கம் நீங்கள் விரைந்திருப்பீர்கள். info
التفاسير: |
这业中每段经文的优越:
• خطر الغفلة عن الآخرة.
1. மறுமையை மறந்து அலட்சியமாக இருப்பதன் ஆபத்து. info

• عبادة الله وتقواه سبب لغفران الذنوب.
2. அல்லாஹ்வை வணங்குவதும் அவனை அஞ்சுவதும் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன. info

• الاستمرار في الدعوة وتنويع أساليبها حق واجب على الدعاة.
3. அழைப்புப் பணியில் நிலைத்திருப்பதும் அதில் பலவகையான வழிமுறைகளைக் கையாளுவதும் அழைப்பாளர்களின் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். info