Check out the new design

《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 * - 译解目录


含义的翻译 章: 穆丹斯拉   段:
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِیْنَ ۟ؕ
74.48. மறுமை நாளில் பரிந்துரை செய்யக்கூடிய வானவர்கள், நபிமார்கள், நல்லடியார்கள் ஆகிய எவரின் பரிந்துரையும் அவர்களுக்குப் பயனளிக்காது. ஏனெனில் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று, பரிந்துரை செய்யப்படுபவரைக்குறித்து இறைவன் திருப்தியடைந்திருக்க வேண்டும்.
阿拉伯语经注:
فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِیْنَ ۟ۙ
74.49. எது இந்த இணைவைப்பாளர்களை குர்ஆனை விட்டும் புறக்கணிக்கத் தூண்டியது?
阿拉伯语经注:
كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۟ۙ
74.50. விரைவாக வெருண்டோடும் காட்டுக்கழுதையைப் போன்று அவர்கள் குர்ஆனைப் புறக்கணிப்பவர்களாக உள்ளனர்!
阿拉伯语经注:
فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ۟ؕ
74.51. அது சிங்கத்திற்குப் பயந்து வெருண்டோடுகிறது.
阿拉伯语经注:
بَلْ یُرِیْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّؤْتٰی صُحُفًا مُّنَشَّرَةً ۟ۙ
74.52. மாறாக இந்த இணைவைப்பாளர்களில் ஒவ்வொருவரும் தன் தலைக்கு மேல் ஒரு விரிக்கப்பட்ட புத்தகம் இருந்து அது ‘முஹம்மது அல்லாஹ்வின் தூதர்தாம்’ என்று அவர்களிடம் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்குக் காரணம் ஆதாரங்களின் போதாமை அல்லது ஆதாரங்களின் பலவீனம் அல்ல. மாறாக அவர்களின் கர்வமும் பிடிவாதமுமேயாகும்.
阿拉伯语经注:
كَلَّا ؕ— بَلْ لَّا یَخَافُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
74.53. விடயம் அவ்வாறு அல்ல. அவர்கள் வழிகேட்டில் உழன்று கொண்டிருப்பதற்கான காரணம் அவர்கள் மறுமையின் வேதனையின்மீது நம்பிக்கைகொள்ளவில்லை என்பதுதான். அதனால்தான் அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள்.
阿拉伯语经注:
كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ ۟ۚ
74.54. அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இந்த குர்ஆன் அறிவுரையாகவும் நினைவூட்டலாகவும் இருக்கின்றது.
阿拉伯语经注:
فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ۟ؕ
74.55. எனவே எவர் குர்ஆனைப் படித்து அறிவுரை பெற விரும்புகிறாரோ அவர் குர்ஆனைப் படித்து அறிவுரை பெறட்டும்.
阿拉伯语经注:
وَمَا یَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ— هُوَ اَهْلُ التَّقْوٰی وَاَهْلُ الْمَغْفِرَةِ ۟۠
74.56. அவர்கள் அறிவுரை பெறவேண்டுமென அல்லாஹ் நாடியவர்கள் மாத்திரமே அறிவுரை பெறுவார்கள். ஏவல்களை எடுத்துநடந்து விலக்கல்களைத் தவிர்ந்து அஞ்சப்படுவதற்கு அவனே தகுதியானவன். தன் அடியார்கள் தன் பக்கம் திரும்பினால் அவர்களின் பாவங்களை மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• مشيئة العبد مُقَيَّدة بمشيئة الله.
1. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டது.

• حرص رسول الله صلى الله عليه وسلم على حفظ ما يوحى إليه من القرآن، وتكفّل الله له بجمعه في صدره وحفظه كاملًا فلا ينسى منه شيئًا.
2. தனக்கு வஹியாக இறங்கிய குர்ஆனை மனனம் செய்வதற்கு நபியவர்கள் கொண்ட பேராசை தெளிவாகிறது. அவர்களின் உள்ளத்தில் முழுமையாக ஒன்றுசேர்த்து பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அவற்றில் எதுவும் மறந்து விடாது.

 
含义的翻译 章: 穆丹斯拉
章节目录 页码
 
《古兰经》译解 - 泰米尔语版古兰经简明注释。 - 译解目录

古兰经注释研究中心发行。

关闭