《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 译解目录


含义的翻译 章: 塔拉格   段:

ஸூரா அல்அலக்

每章的意义:
الإنسان بين هدايته بالوحي وضلاله بالاستكبار والجهل.
மனிதன் வஹியின் மூலம் நேர்வழி பெறுவதற்கு மத்தியிலும், பெருமை அறியாமை ஆகியவற்றினால் வழிகேட்டுக்கு மத்தியிலும் உள்ளான்.

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ
96.1. -தூதரே!- படைப்புகள் அனைத்தையும் படைத்த உம் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்து உம் இறைவன் உமக்கு வஹியாக அறிவிப்பதை படிப்பீராக.
阿拉伯语经注:
خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ
96.2. அவன் மனிதனை விந்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்.
阿拉伯语经注:
اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ
96.3. -தூதரே!- அல்லாஹ் உமக்கு வஹியாக அறிவிப்பதைப் படிப்பீராக. உம் இறைவன் மிகப் பெரும் கொடையாளன். அவனது கொடையை எந்தக் கொடைவள்ளலாலும் நெருங்க முடியாது. ஏனெனில் அவன் பெரும் கொடையாளனாக, நலவு புரிபவனாக இருக்கின்றான்.
阿拉伯语经注:
الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ
96.4. அவன் மனிதனுக்கு எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்.
阿拉伯语经注:
عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ
96.5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
阿拉伯语经注:
كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ
96.6. உண்மையிலேயே அபூஜஹ்லைப் போன்ற பாவியான மனிதன் நிச்சயமாக அல்லாஹ்வின் வரம்புகளை மீறுதில் எல்லை கடந்துவிட்டான்.
阿拉伯语经注:
اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ
96.7. தன்னிடமுள்ள பதவியையும் செல்வங்களையும் கொண்டு அவன் தன்னைத் தேவையற்றவன் என்று கருதியதால்.
阿拉伯语经注:
اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ
96.8. -மனிதனே!- நிச்சயமாக மறுமை நாளில் உன் இறைவனின் பக்கமே நீ திரும்ப வேண்டும். அவன் ஒவ்வொருவருக்கும் தகுந்த கூலியை வழங்குவான்.
阿拉伯语经注:
اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ
96.9,10. (எமது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது) தடுக்கும் அபூஜஹ்லின் செயலை விட ஆச்சரியமானதை நீர் கண்டுள்ளீரா?
阿拉伯语经注:
عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ
எமது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது.
阿拉伯语经注:
اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ
96.11. நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கப்பட்டவர் தம் இறைவனிடமிருந்து வந்துள்ள நேர்வழியில் இருந்தாலுமா?
阿拉伯语经注:
اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ
96.12. அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள் என்று மக்களுக்கு ஏவக்கூடியவராக இருந்தாலுமா? இப்படிப்பட்டவர் தடுக்கப்படலாமா?
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• رضا الله هو المقصد الأسمى.
அல்லாஹ் தனது நபியின் புகழை உயர்த்தியதன் மூலம் அவரை கண்ணிப்படுத்தல்

• أهمية القراءة والكتابة في الإسلام.
1. அல்லாஹ்வின் திருப்தியே உன்னத நோக்கமாகும்.

• خطر الغنى إذا جرّ إلى الكبر والبُعد عن الحق.
2. இஸ்லாத்தில் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

• النهي عن المعروف صفة من صفات الكفر.
3. கர்வம், சத்தியத்தை விட்டும் தூரமாதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் செல்வத்தின் விபரீதம்

• إكرام الله تعالى نبيه صلى الله عليه وسلم بأن رفع له ذكره.
4. நன்மையான செயல்களைவிட்டுத் தடுப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ
96.13. நீர் பார்த்தீரா? இவ்வாறு தடுக்கக்கூடியவன் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பித்து புறக்கணித்தாலுமா? அவன் அல்லாஹ்வை அஞ்சவில்லையா?
阿拉伯语经注:
اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ
96.14. தொழுகையை விட்டும் அந்த அடியாரை தடுக்கக்கூடியவன் அவன் செய்யும் செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் அறியவில்லையா?
阿拉伯语经注:
كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬— لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ
96.15. இந்த மூடன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் நம் அடியாரைத் துன்புறுத்துவதையும் பொய்ப்பிப்பதையும் நிறுத்திக்கொள்ளவில்லையெனில் நாம் அவனது நெற்றி முடியை கொடூரமாகப் பிடித்து இழுத்து நரகத்தில் தள்ளிடுவோம்.
阿拉伯语经注:
نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ
96.16. அந்த நெற்றி முடி உடையவன் சொல்லில் பொய் சொல்லக்கூடியவன், செயலில் தவறிழைக்கக்கூடியவன்.
阿拉伯语经注:
فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ
96.17. அவனது நெற்றிமுடி பிடிக்கப்பட்டு அவன் நரகத்தில் தள்ளப்படும்போது தன்னை வேதனையிலிருந்து காப்பாற்றி உதவி புரிவதற்காக தன் தோழர்களையும் அவையினரையும் அவன் அழைக்கட்டும்.
阿拉伯语经注:
سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ
96.18. நாமும் நரகத்தின் காவலர்களான கடுமையான வானவர்களை அழைப்போம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட மாட்டார்கள். தங்களுக்கு இடப்படும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள். எனவே இரு பிரிவினரில் யார் பலம்வாய்ந்தவர், சக்தி பெற்றவர் என்பதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
阿拉伯语经注:
كَلَّا ؕ— لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟
96.19. இந்த அநியாயக்காரன் எண்ணுவது போலல்ல விடயம். அவன் உமக்குத் தீங்கிழைத்துவிட முடியாது. எனவே அவனுக்கு நீர் ஏவலிலும் விலக்கலிலும் கட்டுப்படாதீர். அல்லாஹ்வுக்குச் சிரம்பணிவீராக. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் அவனை நெருங்குவீராக. நிச்சயமாக அவனுக்குக் கட்டுப்படுவது அவன் பக்கம் நெருக்கி வைக்கும்.
阿拉伯语经注:
这业中每段经文的优越:
• فضل ليلة القدر على سائر ليالي العام.
1. லைலத்துல் கத்ர் என்னும் இரவு வருடத்தின் அனைத்து இரவுகளையும்விடச் சிறந்ததாகும்.

• الإخلاص في العبادة من شروط قَبولها.
2. அல்லாஹ்வை மட்டுமே உளப்பூர்வமாக வணங்குவது அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

• اتفاق الشرائع في الأصول مَدعاة لقبول الرسالة.
4. அனைத்து மார்க்கங்களும் அடிப்படைகளில் உடன்படுவது தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தூண்டக்கூடியதாகும்.

 
含义的翻译 章: 塔拉格
章节目录 页码
 
《古兰经》译解 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 译解目录

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

关闭