《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
6 : 11

وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ؕ— كُلٌّ فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. அவற்றின் தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவற்றின் அடங்குமிடத்தையும் அவன் அறிகின்றான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (பதிவாகி) உள்ளன. info
التفاسير:

external-link copy
7 : 11

وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَی الْمَآءِ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ— وَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟

அவன் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவன். அவனுடைய ‘அர்ஷு’ நீரின் மீதிருந்தது. உங்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவன் உங்களை சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்). “இறப்பிற்கு பின்னர் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்” என்று (நபியே) நீர் கூறினால், “இது பகிரங்கமான சூனியமே தவிர (வேறு) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
8 : 11

وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰۤی اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّیَقُوْلُنَّ مَا یَحْبِسُهٗ ؕ— اَلَا یَوْمَ یَاْتِیْهِمْ لَیْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

அவர்களை விட்டு வேதனையை எண்ணப்பட்ட ஒரு காலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதை எது தடுக்கின்றது?” என நிச்சயம் அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அது வரும் நாளில், (அது) அவர்களை விட்டு அறவே திருப்பப்படாது. அவர்கள் எதை பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழும். info
التفاسير:

external-link copy
9 : 11

وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُ ۚ— اِنَّهٗ لَیَـُٔوْسٌ كَفُوْرٌ ۟

நம்மிடமிருந்து ஓர் அருளை மனிதனுக்கு நாம் சுவைக்க வைத்து, பிறகு அதை அவனிடமிருந்து நீக்கினால், நிச்சயமாக அவன் நிராசையாளனாக நன்றி கெட்டவனாக ஆகிவிடுகின்றான். info
التفاسير:

external-link copy
10 : 11

وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ— اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் அவனுக்கு இன்பத்தை நாம் சுவைக்க வைத்தால், “என்னை விட்டு தீமைகள் சென்றன” என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் (செருக்குடன்) மகிழ்பவனாக தற்பெருமையாளனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
11 : 11

اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟

சகித்(திருந்)து, நன்மைகளைச் செய்தவர்களைத் தவிர. அவர்களுக்கு மன்னிப்பும்; பெரிய கூலியும் உண்டு. info
التفاسير:

external-link copy
12 : 11

فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَضَآىِٕقٌ بِهٖ صَدْرُكَ اَنْ یَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ— اِنَّمَاۤ اَنْتَ نَذِیْرٌ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟ؕ

“அவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப் பற்றி) கூறுவதால் உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுபவற்றில் சிலவற்றை நீர் விட்டுவிடக் கூடியவராக ஆகலாம்; அதன் மூலம் உம் நெஞ்சம் நெருக்கடியாக ஆகலாம். (நபியே!) நீரெல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். அல்லாஹ்தான் எல்லாப் பொருள் மீதும் பொறுப்பாளன் ஆவான்! info
التفاسير: