《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
6 : 13

وَیَسْتَعْجِلُوْنَكَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ ؕ— وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰی ظُلْمِهِمْ ۚ— وَاِنَّ رَبَّكَ لَشَدِیْدُ الْعِقَابِ ۟

(நபியே!) உம்மிடம் நல்லதிற்கு முன்னர் கெட்டதை அவசரமாகத் தேடுகின்றனர். தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன் (திருந்திவிடுகிற) மக்களை மன்னிப்பவன்தான், அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும். (திருந்தாத பாவிகளுக்கு) நிச்சயமாக உம் இறைவன் தண்டனை (வழங்குவதில்) கடுமையானவன். info
التفاسير:

external-link copy
7 : 13

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠

“(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்(கள்). (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். எல்லா மக்களுக்கும் (அவர்களை வழி நடத்துகின்ற ஒரு) தலைவர் உண்டு. info
التفاسير:

external-link copy
8 : 13

اَللّٰهُ یَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُ وَمَا تَغِیْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ؕ— وَكُلُّ شَیْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ۟

ஒவ்வொரு பெண் (கர்ப்பத்தில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் காலம்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் அறிகின்றான். எல்லாம் அவனிடம் (குறிக்கப்பட்ட) ஓர் அளவில் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
9 : 13

عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْكَبِیْرُ الْمُتَعَالِ ۟

(அவன்) மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன். info
التفاسير:

external-link copy
10 : 13

سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِالَّیْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ ۟

உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும் அதை பகிரங்கப்படுத்தியவனும் இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்து பகலில் (நல்லவனாக) வெளிப்படுபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமே! info
التفاسير:

external-link copy
11 : 13

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ— وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ— وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟

(மனிதனாகிய) அவனுக்கு முன்னும், அவனுக்குப் பின்னும் தொடரக்கூடிய (கா)வ(ல)ர்கள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து அவனை பாதுகாக்(க முயற்சிக்)கின்றனர். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்றவரை. அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
12 : 13

هُوَ الَّذِیْ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ ۟ۚ

அவன் உங்க(ளில் பயணிக)ளுக்கு மின்னலை பயமாகவும் (மற்றவர்களுக்கு) ஆசையாகவும் காட்டுகின்றான். (மழையைச் சுமந்த) கனமான மேகங்களை கிளப்புகின்றான். info
التفاسير:

external-link copy
13 : 13

وَیُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓىِٕكَةُ مِنْ خِیْفَتِهٖ ۚ— وَیُرْسِلُ الصَّوَاعِقَ فَیُصِیْبُ بِهَا مَنْ یَّشَآءُ وَهُمْ یُجَادِلُوْنَ فِی اللّٰهِ ۚ— وَهُوَ شَدِیْدُ الْمِحَالِ ۟ؕ

இடியும், வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கின்றனர். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்க, அவனே அபாயங்களை அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேறறுக்கிறான். அவன் (ஆற்றலும்) பிடி(யும்) கடுமையானவன். info
التفاسير: