《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அஅல்ஹிஜ்ர்

external-link copy
1 : 15

الٓرٰ ۫— تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِیْنٍ ۟

அலிஃப்; லாம்; றா. (நபியே!) இவை (முந்திய) வேதங்கள் இன்னும் தெளிவான குர்ஆனின் வசனங்களாகும். info
التفاسير:

external-link copy
2 : 15

رُبَمَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِیْنَ ۟

நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் விரும்புவார்கள். info
التفاسير:

external-link copy
3 : 15

ذَرْهُمْ یَاْكُلُوْا وَیَتَمَتَّعُوْا وَیُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟

(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் புசிக்கட்டும், இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும். அவர்களுடைய ஆசை அவர்களை மறக்கடிக்கட்டும். பின்னர் (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள். info
التفاسير:

external-link copy
4 : 15

وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ۟

எவ்வூரையும் அதற்கு குறிப்பிட்ட தவணை இருந்தே தவிர நாம் (உடனே) அழிக்கவில்லை. info
التفاسير:

external-link copy
5 : 15

مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟

எந்த சமுதாயமும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
6 : 15

وَقَالُوْا یٰۤاَیُّهَا الَّذِیْ نُزِّلَ عَلَیْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۟ؕ

(உம்மை நோக்கி) “ஓ அறிவுரை இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகின்றனர். info
التفاسير:

external-link copy
7 : 15

لَوْ مَا تَاْتِیْنَا بِالْمَلٰٓىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

“நீர் உண்மையாளர்களில் இருந்தால் நம்மிடம் வானவர்களை நீர் கொண்டு வரலாமே?” (என்று கேட்கின்றனர்) info
التفاسير:

external-link copy
8 : 15

مَا نُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِیْنَ ۟

சத்தியத்தைக் கொண்டே தவிர வானவர்களை நாம் இறக்க மாட்டோம். (அப்படி இறக்கினால்) அப்போது அவர்கள் அவகாசமளிக்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
9 : 15

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟

நிச்சயமாக நாம்தான் அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும் நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம். info
التفاسير:

external-link copy
10 : 15

وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ شِیَعِ الْاَوَّلِیْنَ ۟

(நபியே!) உமக்கு முன்னர் முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம். info
التفاسير:

external-link copy
11 : 15

وَمَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை அவரை அவர்கள் பரிகசிப்பவர்களாக இருந்தே தவிர. info
التفاسير:

external-link copy
12 : 15

كَذٰلِكَ نَسْلُكُهٗ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ۙ

(முன்னோர் செய்த) அவ்வாறே அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இக்)குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம். info
التفاسير:

external-link copy
13 : 15

لَا یُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِیْنَ ۟

(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். முன்னோரின் வழிமுறை சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிவர்.) info
التفاسير:

external-link copy
14 : 15

وَلَوْ فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِیْهِ یَعْرُجُوْنَ ۟ۙ

அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகலில் அவர்கள் ஏறுபவர்களாக ஆகினாலும்... info
التفاسير:

external-link copy
15 : 15

لَقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ۟۠

அவர்கள் (நம்பிக்கை கொள்ளாமல்), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட மக்கள்” என்றே கூறுவர். info
التفاسير: