《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
50 : 17

قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِیْدًا ۟ۙ

(அதற்கு நபியே!) கூறுவீராக! நீங்கள் கல்லாகவோ அல்லது இரும்பாகவோ ஆகிவிடுங்கள். info
التفاسير:

external-link copy
51 : 17

اَوْ خَلْقًا مِّمَّا یَكْبُرُ فِیْ صُدُوْرِكُمْ ۚ— فَسَیَقُوْلُوْنَ مَنْ یُّعِیْدُنَا ؕ— قُلِ الَّذِیْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ ۚ— فَسَیُنْغِضُوْنَ اِلَیْكَ رُءُوْسَهُمْ وَیَقُوْلُوْنَ مَتٰی هُوَ ؕ— قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَرِیْبًا ۟

அல்லது உங்கள் நெஞ்சங்களில் பெரியதாக உள்ளவற்றில் ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள். “எங்களை (உயிருள்ள மனிதர்களாக) யார் மீட்பார்?” என்று அவர்கள் கூறட்டும். (அப்போது நபியே!) கூறுவீராக! “உங்களை முதல் முறையாகப் படைத்தவன்தான் (உங்களை மீட்பான்).” உடனே, (கேலியாக) தங்கள் தலைகளை உம் பக்கம் ஆட்டுவார்கள். பிறகு, “அது எப்போது (வரும்)?” என்று கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்லை) சமீபமாக இருக்கக்கூடும்” என்று கூறுவீராக. info
التفاسير:

external-link copy
52 : 17

یَوْمَ یَدْعُوْكُمْ فَتَسْتَجِیْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِیْلًا ۟۠

உங்களை அவன் அழைக்கிற நாளில், நீங்கள் அவனுடைய ஆற்றல் கொண்டு பதில் அளிப்பீர்கள். சொற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் மண்ணறையிலும்) தங்கவில்லை என்று (அந்நாளில்) எண்ணுவீர்கள்! info
التفاسير:

external-link copy
53 : 17

وَقُلْ لِّعِبَادِیْ یَقُوْلُوا الَّتِیْ هِیَ اَحْسَنُ ؕ— اِنَّ الشَّیْطٰنَ یَنْزَغُ بَیْنَهُمْ ؕ— اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِیْنًا ۟

(நபியே!) என் அடியார்களுக்கு கூறுவீராக! மிக அழகியதை அவர்கள் கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீய சொற்களால்) குழப்பம் (இன்னும் கெடுதி) செய்வான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
54 : 17

رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ ؕ— اِنْ یَّشَاْ یَرْحَمْكُمْ اَوْ اِنْ یَّشَاْ یُعَذِّبْكُمْ ؕ— وَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ وَكِیْلًا ۟

(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். (நபியே!) உம்மை அவர்கள் மீது (கண்காணிப்பவராக இன்னும்) பொறுப்பாளராக நாம் அனுப்பவில்லை. info
التفاسير:

external-link copy
55 : 17

وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِیّٖنَ عَلٰی بَعْضٍ وَّاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟

வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம், (நபி) தாவூதுக்கு ‘ஜபூரை’க் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
56 : 17

قُلِ ادْعُوا الَّذِیْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا یَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِیْلًا ۟

(நபியே!) கூறுவீராக! அவனையன்றி (தெய்வங்கள் என) நீங்கள் கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் அவர்களிடம் உதவிகோரி) அழையுங்கள். அவை உங்களை விட்டுத் துன்பத்தை நீக்குவதற்கும் (அதை விட்டுத்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
57 : 17

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَدْعُوْنَ یَبْتَغُوْنَ اِلٰی رَبِّهِمُ الْوَسِیْلَةَ اَیُّهُمْ اَقْرَبُ وَیَرْجُوْنَ رَحْمَتَهٗ وَیَخَافُوْنَ عَذَابَهٗ ؕ— اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا ۟

(தூதர்கள், இறைநேசர்கள், இன்னும் வானவர்களில்) எவர்களை இவர்கள் பிரார்த்தனையில் அழைக்கின்றார்களோ அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று நன்மையை (அதிகம் செய்ய வழிகளை)த் தேடுகின்றனர்; அவனுடைய அருளை ஆதரவு வைக்கின்றனர்; அவனுடைய வேதனையைப் பயப்படுகின்றனர். நிச்சயமாக உம் இறைவனின் வேதனை பயப்படவேண்டியதாக இருக்கின்றது! (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்) info
التفاسير:

external-link copy
58 : 17

وَاِنْ مِّنْ قَرْیَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ یَوْمِ الْقِیٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِیْدًا ؕ— كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟

(அநியாயக்காரர்களின்) எந்த ஊரும் இல்லை, மறுமை நாளுக்கு முன்பாக நாம் அதை அழிப்பவர்களாக அல்லது கடுமையான வேதனையால் வேதனை செய்பவர்களாக இருந்தே தவிர. இது (நம்) ‘புத்தகத்தில்’ எழுதப்பட்டதாக இருக்கின்றது. info
التفاسير: