《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

页码:close

external-link copy
52 : 20

قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّیْ فِیْ كِتٰبٍ ۚ— لَا یَضِلُّ رَبِّیْ وَلَا یَنْسَی ۟ؗ

அவர் (-மூஸா) கூறினார்: அவர்களைப் பற்றிய ஞானம் என் இறைவனிடம் ஒரு பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) இருக்கிறது. என் இறைவன் தவறு செய்துவிட மாட்டான். இன்னும், மறக்கமாட்டான். info
التفاسير:

external-link copy
53 : 20

الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَكُمْ فِیْهَا سُبُلًا وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ— فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰی ۟

அவன்தான் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை ஏற்படுத்தினான். இன்னும் வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகைகளை நாம் உற்பத்தி செய்கிறோம். info
التفاسير:

external-link copy
54 : 20

كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّهٰی ۟۠

சாப்பிடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் மேய்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் இதில் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
55 : 20

مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِیْهَا نُعِیْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰی ۟

அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். அதில்தான் உங்களை மீட்டுக் கொண்டுவருவோம். அதிலிருந்துதான் மற்றொருமுறை உங்களை (உயிருள்ளவர்களாக) வெளியேற்றுவோம். info
التفاسير:

external-link copy
56 : 20

وَلَقَدْ اَرَیْنٰهُ اٰیٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰی ۟

அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது அத்தாட்சிகள் அனைத்தும் நாம் காண்பித்தோம். எனினும் அவன் (அவற்றை) பொய்ப்பித்தான். இன்னும் ஏற்க மறுத்தான். info
التفاسير:

external-link copy
57 : 20

قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ یٰمُوْسٰی ۟

அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?” info
التفاسير:

external-link copy
58 : 20

فَلَنَاْتِیَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَیْنَنَا وَبَیْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًا سُوًی ۟

நிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் இடைப்பட்ட ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட நேரத்தை ஏற்படுத்து. நாமும் அதற்கு மாறுசெய்ய மாட்டோம். நீயும் அதற்கு மாறுசெய்யக் கூடாது. info
التفاسير:

external-link copy
59 : 20

قَالَ مَوْعِدُكُمْ یَوْمُ الزِّیْنَةِ وَاَنْ یُّحْشَرَ النَّاسُ ضُحًی ۟

அவர் (-மூஸா) கூறினார்: உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் “யவ்முஸ் ஸீனா” (என்ற உங்கள் பெருநாள்) ஆகும். இன்னும் மக்கள் முற்பகலில் ஒன்றுதிரட்டப்படுவதும் (நமது ஒப்பந்தம் ஆகும்). info
التفاسير:

external-link copy
60 : 20

فَتَوَلّٰی فِرْعَوْنُ فَجَمَعَ كَیْدَهٗ ثُمَّ اَتٰی ۟

ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். தனது சூழ்ச்சியை ஒன்றிணைத்தான். பிறகு (வாக்களிக்கப்பட்ட நேரத்தில் சூனியக்காரர்களுடன்) வந்தான். info
التفاسير:

external-link copy
61 : 20

قَالَ لَهُمْ مُّوْسٰی وَیْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَی اللّٰهِ كَذِبًا فَیُسْحِتَكُمْ بِعَذَابٍ ۚ— وَقَدْ خَابَ مَنِ افْتَرٰی ۟

அவர்களுக்கு மூஸா கூறினார்: உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை கற்பனை செய்யாதீர்கள்! அவன் உங்களை வேதனையைக் கொண்டு அழித்து விடுவான். திட்டமாக (பொய்யை) கற்பனை செய்தவன் நஷ்டமடைந்து விட்டான். info
التفاسير:

external-link copy
62 : 20

فَتَنَازَعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰی ۟

அவர்கள் (சூனியக்காரர்கள்) தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் தர்க்கித்துக் கொண்டனர். இன்னும் அந்த பேச்சை அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர். info
التفاسير:

external-link copy
63 : 20

قَالُوْۤا اِنْ هٰذٰنِ لَسٰحِرٰنِ یُرِیْدٰنِ اَنْ یُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَیَذْهَبَا بِطَرِیْقَتِكُمُ الْمُثْلٰی ۟

அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள். உங்கள் பூமியிலிருந்து உங்களை (அவ்விருவரும்) தங்கள் சூனியத்தைக் கொண்டு வெளியேற்றுவதற்கும் உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் அவ்விருவரும் நாடுகின்றனர்.” info
التفاسير:

external-link copy
64 : 20

فَاَجْمِعُوْا كَیْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّا ۚ— وَقَدْ اَفْلَحَ الْیَوْمَ مَنِ اسْتَعْلٰی ۟

“ஆகவே, உங்கள் சூழ்ச்சிகளை உறுதிப்படுத்தி பின்பு (ஒரே) ஓர் அணியாக வாருங்கள். இன்றைய தினம் மிகைத்தவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்.” info
التفاسير: