《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
31 : 24

وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَیَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪— وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪— وَلَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ— وَتُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு அல்லது தங்கள் தந்தைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு அல்லது தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரர்களுக்கு அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் (இன முஸ்லிமான) பெண்களுக்கு அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு அல்லது ஆண்களில் ஆசையில்லாத பணியாளர்களுக்கு அல்லது பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. மற்ற மேல் கூறப்பட்டவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைக்கின்றவற்றை (மற்றவர்கள்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும் நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். info
التفاسير: