《古兰经》译解 - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்அன்பால்

external-link copy
1 : 8

یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ— قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪— وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: ‘வெற்றிப் பொருள்கள்’ அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் சொந்தமானவை. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். info
التفاسير:

external-link copy
2 : 8

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۙ

நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும்; தங்கள் இறைவன் மீதே (பொறுப்பு சாட்டி) நம்பிக்கை வைப்பார்கள்; (அவனையே எல்லாக் காரியங்களிலும் சார்ந்து இருப்பார்கள்.) info
التفاسير:

external-link copy
3 : 8

الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ

அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் புரிவார்கள். info
التفاسير:

external-link copy
4 : 8

اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ— لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ

அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் பல பதவிகளும் மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு. info
التفاسير:

external-link copy
5 : 8

كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪— وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ

(நபியே!) உம் இறைவன் உம் இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய (போ)து (தர்க்கித்தது) போன்றே (எதிரிகளைப் போரில் சந்திப்பதிலும் உம்மிடம் தர்க்கிப்பார்கள்). நம்பிக்கையாளர்களில் நிச்சயமாக ஒரு பிரிவினர் (உம்முடன் வர) வெறுப்பவர்களே. info
التفاسير:

external-link copy
6 : 8

یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ

(போர் அவசியம் என) அவர்களுக்கு (உண்மை) தெளிவான பின்னர் அவர்கள் (மரணத்தை கண்கூடாக) பார்ப்பவர்களாக இருக்க (அந்த) மரணத்தின் பக்கம் தாங்கள் ஓட்டிச் செல்லப்படுவது போன்று (இந்த) உண்மையில் உம்முடன் தர்க்கிக்கின்றனர். info
التفاسير:

external-link copy
7 : 8

وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ

(எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்றை, “நிச்சயமாக அது உங்களுக்கு என்று” அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தை நினைவு கூருவீராக. (அவ்விரண்டில்) ஆயுதமுடையது அல்லாததை, “அது உங்களுக்கு ஆகவேண்டும்” என்று விரும்பினீர்கள். அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு உண்மையை உண்மைப்படுத்தவும் (நிலைநாட்டவும்), நிராகரிப்பவர்களின் வேரை துண்டித்து விடவும் நாடுகிறான். info
التفاسير:

external-link copy
8 : 8

لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ

(சிலை வணங்கும்) பாவிகள் வெறுத்தாலும் அவன் உண்மையை உண்மைப்படுத்தவும் பொய்யை அழித்துவிடவும் (நாடுகிறான்). info
التفاسير: