Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ * - የትርጉሞች ማዉጫ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ   አንቀጽ:
وَاكْتُبْ لَنَا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةً وَّفِی الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَیْكَ ؕ— قَالَ عَذَابِیْۤ اُصِیْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ— وَرَحْمَتِیْ وَسِعَتْ كُلَّ شَیْءٍ ؕ— فَسَاَكْتُبُهَا لِلَّذِیْنَ یَتَّقُوْنَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِیْنَ هُمْ بِاٰیٰتِنَا یُؤْمِنُوْنَ ۟ۚ
“இன்னும், இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை[1] விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (அல்லாஹ்) கூறினான்: “என் தண்டனை அதன் மூலம் நான் நாடியவர்களை பிடிப்பேன். இன்னும், என் கருணை ஒவ்வொரு பொருளுக்கும் விசாலமாக இருக்கிறது. ஆக, எவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுகிறார்களோ; இன்னும், ஸகாத்தைக் கொடுப்பார்களோ; இன்னும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு அதை விதிப்பேன்.”
[1] இம்மையில் ஹஸனா என்பது நற்செயல்களையும் மறுமையில் ஹஸனா என்பது இறைமன்னிப்பையும் குறிக்கும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ— یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ— اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠
அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியாகிய இத்தூதரை பின்பற்றுவார்கள். தங்களிடமுள்ள தவ்ராத் இன்னும் இன்ஜீலில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் காண்பார்கள். அவர்களுக்கு நன்மையை அவர் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார்; இன்னும், நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; இன்னும், கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார்; இன்னும், அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட (குர்ஆன் என்ற) ஒளியை பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنِّیْ رَسُوْلُ اللّٰهِ اِلَیْكُمْ جَمِیْعَا ١لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ۪— فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِیِّ الْاُمِّیِّ الَّذِیْ یُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், (நீங்கள் நேர்வழி பெறுவதற்காக) அல்லாஹ்வையும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்பவரான, எழுதப் படிக்கத் தெரியாதவரான, நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவரைப் பின்பற்றுங்கள்!
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِنْ قَوْمِ مُوْسٰۤی اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟
மூஸாவுடைய சமுதாயத்தில் சத்தியத்தின்படி வழிகாட்டுகிற, இன்னும், அதன்படி நீதி செலுத்துகின்ற ஒரு கூட்டமும் இருக்கிறது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ - የትርጉሞች ማዉጫ

ተርጓሚ ሸይኽ ዑመር ሸሪፍ ቢን ዐብዱሰላም

መዝጋት