Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ * - የትርጉሞች ማዉጫ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ   አንቀጽ:
وَلَقَدْ ذَرَاْنَا لِجَهَنَّمَ كَثِیْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖؗ— لَهُمْ قُلُوْبٌ لَّا یَفْقَهُوْنَ بِهَا ؗ— وَلَهُمْ اَعْیُنٌ لَّا یُبْصِرُوْنَ بِهَا ؗ— وَلَهُمْ اٰذَانٌ لَّا یَسْمَعُوْنَ بِهَا ؕ— اُولٰٓىِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ— اُولٰٓىِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ ۟
மனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோரை நரகத்திற்காக படைத்து விட்டோம். அவர்களுக்கு உள்ளங்கள் உண்டு, அவற்றின் மூலம் சிந்தித்து விளங்க மாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் உண்டு, அவற்றின் மூலம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் உண்டு, அவற்றின் மூலம் செவிகொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக, அவர்கள் (அவற்றைவிட) அதிகம் வழிகெட்டவர்கள். அவர்கள்தான் (என் அத்தாட்சிகளை மறந்த) கவனமற்றவர்கள் ஆவர்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰی فَادْعُوْهُ بِهَا ۪— وَذَرُوا الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اَسْمَآىِٕهٖ ؕ— سَیُجْزَوْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அல்லாஹ்விற்கே உரியன மிக அழகிய பெயர்கள். ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ یَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ یَعْدِلُوْنَ ۟۠
இன்னும், நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு நேர்வழிகாட்டுகின்ற; இன்னும், அதைக் கொண்டே நீதி செலுத்துகின்ற ஒரு கூட்டம் உண்டு.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۚ
இன்னும், நம் வசனங்களை எவர்கள் பொய்ப்பித்தார்களோ அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் ஈர்த்து (நமது பிடியில்) சிக்க வைப்போம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاُمْلِیْ لَهُمْ ؕ— اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
இன்னும், அவர்களுக்கு அவகாசமளிப்பேன். நிச்சயமாக என் சூழ்ச்சி மிக உறுதியானது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَوَلَمْ یَتَفَكَّرُوْا ٚ— مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍ ؕ— اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
இன்னும், அவர்கள் சிந்திக்கவில்லையா? “அவர்களுடைய தோழருக்கு அறவே பைத்தியம் இல்லை. தெளிவான எச்சரிப்பவராகவே தவிர அவரில்லை.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَوَلَمْ یَنْظُرُوْا فِیْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۙ— وَّاَنْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ— فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟
இன்னும், வானங்கள், பூமியின் பேராட்சியிலும், அல்லாஹ் படைத்த (ஏனைய சிறிய, பெரிய) பொருளிலும், அவர்களுடைய (மரணத்தின்) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்லையா? (எச்சரிக்கை நிறைந்த வேறு) எந்த செய்தியைத்தான் அவர்கள் இதற்குப் பின்னர் நம்பிக்கை கொள்வார்கள்?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
مَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِیَ لَهٗ ؕ— وَیَذَرُهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் அறவே இல்லை. இன்னும், அ(த்தகைய)வர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக (சில காலம் வரை) அவன் விட்டுவைக்கிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّیْ ۚ— لَا یُجَلِّیْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَ ؔؕۘ— ثَقُلَتْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— لَا تَاْتِیْكُمْ اِلَّا بَغْتَةً ؕ— یَسْـَٔلُوْنَكَ كَاَنَّكَ حَفِیٌّ عَنْهَا ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
(நபியே!) மறுமையைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடம்தான் இருக்கிறது. அதற்குரிய நேரத்தில் அதை அவன்தான் வெளிப்படுத்துவான். அது, வானங்களிலும் பூமியிலும் (யாராலும் அதை அறியமுடியாதவாறு) கனத்து விட்டது (-மறைவாக இருக்கிறது). திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும், மக்களில் அதிகமானோர் (மறுமையின் அறிவு அல்லாஹ்விடம்தான் இருக்கிறது என்பதை) அறிய மாட்டார்கள்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
 
የይዘት ትርጉም ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ - የትርጉሞች ማዉጫ

ተርጓሚ ሸይኽ ዑመር ሸሪፍ ቢን ዐብዱሰላም

መዝጋት