আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
107 : 10

وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ— وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ— یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (வேறுயாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை அடையச் செய்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன். info
التفاسير:

external-link copy
108 : 10

قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ— فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ— وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ؕ— وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ

(நபியே!) கூறுவீராக! மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை (வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. எவர் (அதன் படி) நேர்வழி சென்றாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெட்டாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்குக் கேடாகத்தான். நான் உங்கள் மீது பொறுப்பாளனாக இல்லை. info
التفاسير:

external-link copy
109 : 10

وَاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَاصْبِرْ حَتّٰی یَحْكُمَ اللّٰهُ ۚ— وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟۠

உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதையே பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும்வரை பொறுப்பீராக! அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன். info
التفاسير: