আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
62 : 10

اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
63 : 10

الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ

அவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தார்கள். info
التفاسير:

external-link copy
64 : 10

لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ— لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ

உலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும். info
التفاسير:

external-link copy
65 : 10

وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ— اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ— هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

(நபியே!) அவர்களுடைய சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
66 : 10

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ— وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி இணை (தெய்வங்)களை அழைப்பவர்கள் எதைப் பின்பற்றுகின்றனர்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை; அவர்கள் கற்பனை செய்பவர்களாகவே தவிர (ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை! info
التفاسير:

external-link copy
67 : 10

هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟

அவன் உங்களுக்கு இரவை நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும், பகலை (நீங்கள்) பார்க்கக்கூடியதாகவும் ஆக்கியவன். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
68 : 10

قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ— هُوَ الْغَنِیُّ ؕ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ— اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

அல்லாஹ் சந்ததியை ஆக்கிக்கொண்டான் என்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியை விட்டு) தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா? info
التفاسير:

external-link copy
69 : 10

قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ

“அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றிபெற மாட்டார்கள்” என்று கூறுவீராக! info
التفاسير:

external-link copy
70 : 10

مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠

இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையை அவர்களுக்கு சுவைக்க வைப்போம். info
التفاسير: