Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: El-Kasas   Ajet:
فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰی بِاٰیٰتِنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَرًی وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟
28.36. மூஸா நம்முடைய தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது மூஸாவால் புனைந்து கூறப்பட்ட பொய்யே அன்றி வேறில்லை. இதனை நமது முன்னோர்களிடம் நாம் கேள்விப்படவில்லை.
Tefsiri na arapskom jeziku:
وَقَالَ مُوْسٰی رَبِّیْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰی مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟
28.37. மூஸா ஃபிர்அவ்னிடம் கூறினார்: “தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்துள்ள உண்மையாளரையும் மறுமையில் யாருடைய முடிவு புகழத்தக்கதாக அமையும் என்பதையும் என் இறைவன் அறிவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் தாங்கள் வேண்டுவதை பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றியடைய மாட்டார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَقَالَ فِرْعَوْنُ یٰۤاَیُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرِیْ ۚ— فَاَوْقِدْ لِیْ یٰهَامٰنُ عَلَی الطِّیْنِ فَاجْعَلْ لِّیْ صَرْحًا لَّعَلِّیْۤ اَطَّلِعُ اِلٰۤی اِلٰهِ مُوْسٰی ۙ— وَاِنِّیْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِیْنَ ۟
28.38. ஃபிர்அவ்ன் தன் சமூகத்து செல்வாக்கு உள்ளவர்களிடம் கூறினான்: “அவையோரே! நான் உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவனை அறிந்திருக்கவில்லை. ஹாமானே! நான் மூஸாவின் இறைவனைக் கண்டு அவருக்கு முன்னால் நிற்கும் பொருட்டு உறுதியாக இருப்பதற்காக தீயை மூட்டி களிமண்ணால் (செங்கற்கள்) செய்து எனக்காக ஒரு உயர்ந்த கட்டடத்தை எழுப்புவீராக. என்னிடமும் எனது சமூகத்திடமும் நிச்சயமாக தன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியுள்ளான் என்று சொல்லிக் கொள்ளும் மூஸாவை திட்டமாக நான் பொய்யர் என்றே கருதுகிறேன்.”
Tefsiri na arapskom jeziku:
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟
28.39. ஃபிர்அவ்ன் மற்றும் அவனது படையினரின் கர்வம் அதிகரித்து எகிப்து மண்ணில் உண்மையான நியாயம் எதுவமின்றி பெருமையடித்தார்கள். மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்தார்கள். நிச்சயமாக மறுமை நாளில் விசாரணைக்கும் தண்டனை பெறவும் நம்மிடம் திரும்பி வர மாட்டார்கள் என்றே அவர்கள் எண்ணினார்கள்.
Tefsiri na arapskom jeziku:
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
28.40. நாம் அவனையும் அவனது படையினரையும் தண்டித்து கடலில் வீசியெறிந்து மூழ்கடித்து அனைவரையும் அழித்துவிட்டோம். -தூதரே!- அநியாயக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அழிவே அவர்களின் முடிவாக இருந்தது.
Tefsiri na arapskom jeziku:
وَجَعَلْنٰهُمْ اَىِٕمَّةً یَّدْعُوْنَ اِلَی النَّارِ ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ لَا یُنْصَرُوْنَ ۟
28.41. அவர்களை நிராகரிப்பையும் வழிகேட்டையும் பரப்பி நரகத்தின்பால் அழைப்பு விடுக்கும் வழிகேடர்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் முன்மாதிரிகளாக ஆக்கினோம். மறுமை நாளில் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அவர்கள் ஏற்படுத்திய தீய வழிமுறையினால், வழிகேட்டின்பால் அழைப்பு விடுத்ததனால் அவர்களுக்குப் பல மடங்கு வேதனையளிக்கப்படும். அவர்களின் வழிகெட்ட செயல்கள், அவற்றில் அவர்களைப் பின்பற்றியவர்களின் செயல்களின் பாவங்களும் அவர்களின் கணக்கில் எழுதப்படும்.
Tefsiri na arapskom jeziku:
وَاَتْبَعْنٰهُمْ فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِیْنَ ۟۠
28.42. இவ்வுலகிலும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையோடு இழிவும் சாபமும் அதிகரித்ததாக அவர்களைப் பின்தொடரச் செய்தோம். மறுமை நாளில் இழிவாக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர்கள் தூரமாக்கப்படுவார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ مِنْ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰی بَصَآىِٕرَ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةً لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
28.43. தங்களின்பால் அனுப்பப்பட்ட தூதர்களை பொய்ப்பித்த சமூகங்களை அழித்த பிறகு நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். அது மனிதர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய பயனுள்ள விஷயங்களையும் விட்டுவிட வேண்டிய தீங்குதரும் விஷயங்களையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் அவர்களுக்கு நன்மையின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மைகளை உள்ளடக்கிய அருளாகவும் திகழ்ந்தது. அதன் மூலம் அவர்கள்அல்லாஹ் தங்களுக்கு நல்கிய அருட்கொடைகளை நினைவுபடுத்தி அவனுக்கு நன்றிசெலுத்தி அவன் மீது நம்பிக்கைகொள்ளலாம்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• رَدُّ الحق بالشبه الواهية شأن أهل الطغيان.
1. பலவீனமான சந்தேகங்களைக்கொண்டு சத்தியத்தை மறுப்பது அநியாயக்கார்களின் வழிமுறையாகும்.

• التكبر مانع من اتباع الحق.
2. கர்வம் சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கின்றது.

• سوء نهاية المتكبرين من سنن رب العالمين.
3. கர்வம் கொள்பவர்களுக்கு தீய முடிவை ஏற்படுத்துவது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனின் வழிமுறைகளில் ஒன்றாகும்.

• للباطل أئمته ودعاته وصوره ومظاهره.
4. அசத்தியத்திற்குத் தலைவர்களும் அழைப்பாளர்களும் தோற்றங்களும் அடையாளங்களும் உண்டு.

 
Prijevod značenja Sura: El-Kasas
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje