Prijevod značenja časnog Kur'ana - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (21) Sura: Sura er-Rum
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَیْهَا وَجَعَلَ بَیْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
30.21. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: -ஆண்களே!- அவன் உங்களுக்காக உங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்காக அவர்களிடம் உங்களின் மனம் அமைதிபெற வேண்டி உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்குத் துணைகளை படைத்துள்ளான். உங்களுக்கிடையேயும் அவர்களிடையேயும் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளான். நிச்சயமாக (மேலே) கூறப்பட்டவற்றில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு தெளிவான சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. ஏனெனில் திட்டமாக அவர்கள்தாம் தங்களின் சிந்தனையைச் செயற்படுத்துவதனால் பயனடைபவர்கள்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• إعمار العبد أوقاته بالصلاة والتسبيح علامة على حسن العاقبة.
1. அடியான் தன் நேரங்களை அல்லாஹ்வைத் தொழுவதற்கும் அவனைப் புகழ்வதற்கும் செலவிடுவது அவனுடைய நல்ல முடிவிற்கான அடையாளமாகும்.

• الاستدلال على البعث بتجدد الحياة، حيث يخلق الله الحي من الميت والميت من الحي.
2. அல்லாஹ் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் இவைகள் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும்.

• آيات الله في الأنفس والآفاق لا يستفيد منها إلا من يُعمِل وسائل إدراكه الحسية والمعنوية التي أنعم الله بها عليه.
3. உயிர்களிலும் பிரபஞ்சத்திலும் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை தங்களுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட புலனுணர்வுகளையும் உள்ரங்கமான சாதனங்களையும் செயற்படுத்துபவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

 
Prijevod značenja Ajet: (21) Sura: Sura er-Rum
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Sadržaj prijevodā

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Zatvaranje