Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: En-Nisa   Ajet:
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰیٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ— بَلْ طَبَعَ اللّٰهُ عَلَیْهَا بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۪۟
4.155. அவர்கள் உறுதியான உடன்படிக்கையை முறித்ததனாலும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததனாலும் இறைத்தூதர்களை துணிந்து கொலை செய்ததனாலும் முஹம்மதிடம், ‘எங்களின் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே நீர் கூறும் எதுவும் அதனை அடையப்போவதில்லை’ என்று கூறியதனாலும் நாம் அவர்களை நம் கருணையிலிருந்து தூரமாக்கிவிட்டோம். விஷயம் அவர்கள் கூறுவது போலல்ல. மாறாக அல்லாஹ் அவர்கள் நிராகரித்தனால் அவர்களது உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே எந்த நன்மையும் அவற்றை அடைந்துவிட முடியாது. அவர்களுக்குப் பயனளிக்காத அளவு குறைவாகவே அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள்.
Tefsiri na arapskom jeziku:
وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰی مَرْیَمَ بُهْتَانًا عَظِیْمًا ۟ۙ
4.156. அவர்கள் நிராகரித்ததனாலும் மர்யமின் மீது அபாண்டமாக விபச்சாரக் குற்றச்சாட்டை சுமத்தியதனாலும் நாம் நம் கருணையிலிருந்து அவர்களைத் தூரமாக்கினோம்.
Tefsiri na arapskom jeziku:
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ— وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ— مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ— وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ
4.157. நாங்கள்தாம் அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் ஈஸாவைக் கொலைசெய்தோம் என்று பெருமையாகக் கூறியதனாலும் நாம் அவர்களைச் சபித்துவிட்டோம். அவர்கள் கூறுவதுபோல, அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. ஈஸாவின் தோற்றத்தை அல்லாஹ் வழங்கிய வேறொரு மனிதரையே அவர்கள் கொன்று சிலுவையில் அறைந்தார்கள். ஈஸாதான் கொல்லப்பட்டவர் என்று எண்ணிக்கொண்டார்கள். அவரை நாங்கள்தாம் கொன்றோம் என்று கூறிய யூதர்களும் ஈஸாவை அவர்களிடம் ஒப்படைத்த கிருஸ்தவர்களும் ஈஸாவின் விஷயத்தில் கடுமையான சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்து எந்த அறிவும் இல்லை. அவர்கள் வெற்று யூகங்களையே பின்பற்றுகிறார்கள். சத்திய விஷயத்தில் யூகம் எந்தப் பயனையும் அளிக்காது. உறுதியாக அவர்கள் ஈஸாவைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை.
Tefsiri na arapskom jeziku:
بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَیْهِ ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
4.158. மாறாக அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவரது உடலோடும் உயிரோடும் அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் தன் ஆட்சியதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன் நிர்வகித்தல், விதிகள், சட்டங்கள் என்பவற்றில் அவன் ஞானமிக்கவன்.
Tefsiri na arapskom jeziku:
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
4.159. ஈஸா மீண்டும் பூமிக்கு வருகை தந்த பிறகு வேதக்காரர்களிலுள்ள அனைவரும் அவரது மரணத்திற்கு முன்பே அவர் மீது நம்பிக்கைகொண்டு விடுவார்கள். மறுமைநாளில் அவர்களின் செயல்களில் எது மார்க்கத்திற்கு உட்பட்டது எது மார்க்கத்திற்கு முரணானது என்பதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார்.
Tefsiri na arapskom jeziku:
فَبِظُلْمٍ مِّنَ الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَیْهِمْ طَیِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ كَثِیْرًا ۟ۙ
4.160. யூதர்களின் அக்கிரமத்தினால் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில தூய்மையான உணவுகளையும் நாம் அவர்கள்மீது தடைசெய்தோம். நகங்களுடைய அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பைத் தவிர்ந்த ஆடு, மாடு ஆகியவற்றின் ஏனைய கொழுப்புகளையும் நாம் அவர்கள் மீது தடைசெய்தோம். ஏனெனில் நல்ல விஷயங்களை விட்டுத் தடுப்பதே தமது இயல்பான குணமாகிவிடும் அளவிற்கு தங்களையும் மற்றவர்களையும் அல்லாஹ்வின் பாதையைவிட்டு அவர்கள் தடுத்ததனர்.
Tefsiri na arapskom jeziku:
وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ؕ— وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
4.161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தும் அவர்கள் அதனை வாங்கியதாலும் மக்களின் செல்வங்களை உரிமையின்றி பெற்றதனாலும் நாம் அவ்வாறு செய்தோம். அவர்களிலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
Tefsiri na arapskom jeziku:
لٰكِنِ الرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِیْمِیْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— اُولٰٓىِٕكَ سَنُؤْتِیْهِمْ اَجْرًا عَظِیْمًا ۟۠
4.162. ஆனால் யூதர்களில் நன்கு கற்றோரும் நம்பிக்கையாளர்களும் அல்லாஹ் உம்மீது இறக்கிய குர்ஆனையும் உமக்கு முன்னால் ஏனைய தூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத், இன்ஜீல் போன்ற வேதங்களையும் உண்மைப்படுத்துகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தையும் வழங்குகிறார்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்பதையும் மறுமை நாளையும் உண்மைப்படுத்துகிறார்கள். இந்த பண்புகளை உடையவர்களுக்கு நாம் பெரும் நன்மைகளை வழங்குவோம்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• عاقبة الكفر الختم على القلوب، والختم عليها سبب لحرمانها من الفهم.
நிராகரிப்பின் முடிவு உள்ளத்தில் முத்திரையிடுவதாகும். அவ்வாறு முத்திரையிடுவது அவை புரிந்துகொள்வதை விட்டும் தடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும்.

• بيان عداوة اليهود لنبي الله عيسى عليه السلام، حتى إنهم وصلوا لمرحلة محاولة قتله.
2. இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு யூதர்கள் அவரை எதிர்த்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• بيان جهل النصارى وحيرتهم في مسألة الصلب، وتعاملهم فيها بالظنون الفاسدة.
3. சிலுவையில் அறையப்பட்ட விடயத்தில் கிறிஸ்தவர்களின் அறியாமையும் தடுமாற்றமும் அது விடயத்தில் அவர்களது தவறான எண்ணங்களுடன் கூடிய நடவடிக்கையையும் தெளிவுபடுத்தப்படுகிறது.

• بيان فضل العلم، فإن من أهل الكتاب من هو متمكن في العلم حتى أدى به تمكنه هذا للإيمان بالنبي محمد صلى الله عليه وسلم.
4. அறிவின் சிறப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கல்வியாளர்கள் பெற்றிருந்த ஆழமான அறிவு நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு அவர்களை இட்டுச்சென்றது.

 
Prijevod značenja Sura: En-Nisa
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje