Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (40) Sura: En-Nisa
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ— وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟
4.40. அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவன். தன் அடியார்களில் யார்மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அவர்களின் நன்மைகளில் அணுவளவுகூட குறைத்துவிடவோ தீமைகளில் எதையும் அதிகரித்துவிடவோ மாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் தனது அருளினால் அதனை பன்மடங்காக்கித் தருவான். அத்துடன் தன் புறத்திலிருந்து பெரும் கூலியையும் வழங்கிடுவான்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• من كمال عدله تعالى وتمام رحمته أنه لا يظلم عباده شيئًا مهما كان قليلًا، ويتفضل عليهم بمضاعفة حسناتهم.
1. அல்லாஹ்வின் பரிபூரண நீதி மற்றும் கருணையின் காரணமாகவே தன் அடியார்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. மாறாக அவர்களுக்குப் பன்மடங்கு நன்மைகளை வழங்கி அருள்புரிகிறான்.

• من شدة هول يوم القيامة وعظم ما ينتظر الكافر يتمنى أن يكون ترابًا.
2. மறுமை நாளின் திகில் மற்றும் நிராகரிப்பாளனை எதிர்பார்த்திருக்கும் பெரும் தண்டைனைகளின் காரணமாக அவன் தான் மண்ணோடு மண்ணாக ஆகிவிடக்கூடாதா என்று ஆசைகொள்வான்.

• الجنابة تمنع من الصلاة والبقاء في المسجد، ولا بأس من المرور به دون مُكْث فيه.
3. குளிப்பு அவசியமான நிலையில் இருப்பவர் தொழுவதோ பள்ளிவாயிலில் தங்குவதோ கூடாது. அதனைக் கடந்து செல்வது அனுமதிக்கப்பட்டது.

• تيسير الله على عباده بمشروعية التيمم عند فقد الماء أو عدم القدرة على استعماله.
4. தண்ணீர் கிடைக்காதபோது அல்லது அதனைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தின் மூலம் அல்லாஹ் தன் அடியார்கள் மீது எளிதாக்கியுள்ளான்.

 
Prijevod značenja Ajet: (40) Sura: En-Nisa
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje