Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (89) Sura: El-Maida
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ— فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ— ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ— وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
5.89. நம்பிக்கையாளர்களே! சத்தியம் செய்வதை நாடாது உங்களின் நாவில் வெளிப்பட்டுவிடும் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களிடம் கணக்குக் கேட்க மாட்டான். நீங்கள் உறுதியான நோக்கத்துடன் செய்யும் சத்தியங்களை முறித்து விட்டால்தான் அவன் உங்களிடம் கணக்குக் கேட்பான். நீங்கள் உள்ளத்தில் உறுதிகொண்டு நாவினால் மொழிந்த சத்தியங்களை முறித்துவிட்டால் பின்வரும் மூன்றில் நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்தால் சத்தியத்தை முறித்த பாவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். உங்களின் ஊரிலுள்ள நடுநிலையான உணவிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் (ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு அளவு உணவுப்பொருள் கொடுக்கப்பட வேண்டும்) அல்லது அவர்களுக்கு தகுந்த ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். தனது சத்தியத்திற்குப் பரிகாரம் செய்வதற்கு மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் எதையும் பெறாதவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்று பரிகாரம் செய்யட்டும். இதுதான் நீங்கள் முறித்துவிட்ட சத்தியங்களுக்கான பரிகாரமாகும். அல்லாஹ்வின் மீது பொய்ச்சத்தியம் செய்வது, அதிகமாக சத்தியம் செய்வது, சத்தியத்தின் படி செயற்படாமை ஆகியவற்றை விட்டும் உங்களது சத்தியங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். சத்தியத்தின் படி செயற்படாமை சிறந்ததாக இருந்தால் அதனை முறித்துவிடுங்கள். சிறந்ததைச் செய்து உங்களது சத்தியங்களுக்குப் பரிகாரம் செய்து விடுங்கள். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்ததற்காக நீங்கள் அவனுக்கு நன்றிசெலுத்தும்பொருட்டு சத்தியங்களுக்குப் பரிகாரத்தைத் தெளிவுபடுத்தியது போன்று ஹலால், ஹராம் பற்றிய தெளிவான தன் சட்டங்களை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الأمر بتوخي الطيب من الأرزاق وترك الخبيث.
1. தூய்மையான உணவுகளையே தேடுமாறும் கெட்ட உணவுகளை விட்டு விடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

• عدم المؤاخذة على الحلف عن غير عزم للقلب، والمؤاخذة على ما كان عن عزم القلب ليفعلنّ أو لا يفعلنّ.
2. உள உறுதியின்றி செய்யப்படும் சத்தியங்களுக்கு குற்றமில்லை. செய்வேன் அல்லது செய்யமாட்டேன் என உளப்பூர்வமாக செய்யப்படும் சத்தியங்களுக்குத்தான் குற்றம்பிடிக்கப்படும்.

• بيان أن كفارة اليمين: إطعام عشرة مساكين، أو كسوتهم، أو عتق رقبة مؤمنة، فإذا لم يستطع المكفِّر عن يمينه الإتيان بواحد من الأمور السابقة، فليكفِّر عن يمينه بصيام ثلاثة أيام.
3. சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரம், பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஆடை வழங்க வேண்டும் அல்லது நம்பிக்கைகொண்ட ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஒருவர் மேற்குறிப்பிட்ட எதையும் செய்ய சக்திபெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

• قوله تعالى: ﴿... إنَّمَا الْخَمْرُ ...﴾ هي آخر آية نزلت في الخمر، وهي نص في تحريمه.
4. மதுபானம் சம்பந்தமான இங்கு இடம்பெற்றுள்ள வசனமே மதுபானம் சம்பந்தமாக இறங்கிய இறுதி வசனமாகும். இது மதுபானத்தை தெளிவாகவும் முழுமையாகவும் தடுக்கும் வசனமாகும்.

 
Prijevod značenja Ajet: (89) Sura: El-Maida
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje