Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: El-Vakia   Ajet:
ثُمَّ اِنَّكُمْ اَیُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَ ۟ۙ
மறுமையில் எழுப்புவதை மறுத்து நேரான பாதையை விட்டும் வழிதவறிய நீங்கள்தான் மறுமைநாளில் ஸக்கூம் என்ற மிகத் தீய மோசமான மரத்திலிருந்து உண்ணுவீர்கள்.
Tefsiri na arapskom jeziku:
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍ ۟ۙ
மறுமையில் எழுப்புவதை மறுத்து நேரான பாதையை விட்டும் வழிதவறிய நீங்கள்தான் மறுமைநாளில் ஸக்கூம் என்ற மிகத் தீய மோசமான மரத்திலிருந்து உண்ணுபவர்கள்.
Tefsiri na arapskom jeziku:
فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ۚ
56.53. அந்த கசப்பான மரத்திலிருந்தே உங்களின் வெற்று வயிறுகளை நிரப்பிக் கொள்வீர்கள்.
Tefsiri na arapskom jeziku:
فَشٰرِبُوْنَ عَلَیْهِ مِنَ الْحَمِیْمِ ۟ۚ
56.54. அதன்பின் கடும் சூடான நீரை அருந்துவீர்கள்.
Tefsiri na arapskom jeziku:
فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِیْمِ ۟ؕ
56.55. தாகிக்கும் நோயின் காரணமாக அதிக நீரறுந்தும் ஒட்டகத்தைப் போன்று அதனை அதிகமாக அருந்துவீர்கள்.
Tefsiri na arapskom jeziku:
هٰذَا نُزُلُهُمْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
56.56. மேற்கூறப்பட்ட இந்த கசப்பான உணவையும் சூடான நீரையும் கொண்டே அவர்கள் கூலி கொடுக்கப்படும் நாளில் வரவேற்கப்பட்டு விருந்தளிக்கப்படுவார்கள்.
Tefsiri na arapskom jeziku:
نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ۟
56.57. -பொய்ப்பிப்பாளர்களே!- ஒன்றும் இல்லாமல் இருந்த உங்களை நாமே படைத்தோம். நீங்கள் இறந்தபிறகு நிச்சயமாக நாம் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவோம் என்பதை நீங்கள் உண்மைப்படுத்தியிருக்கவேண்டாமா?
Tefsiri na arapskom jeziku:
اَفَرَءَیْتُمْ مَّا تُمْنُوْنَ ۟ؕ
56.58. -மனிதர்களே!- நீங்கள் உங்கள் மனைவியரின் கர்ப்பப்பையில் செலுத்தும் விந்தைக் குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?
Tefsiri na arapskom jeziku:
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ ۟
56.59. அந்த விந்தை நீங்கள் படைத்தீர்களா? அல்லது அதனை நாம் படைத்தோமா?
Tefsiri na arapskom jeziku:
نَحْنُ قَدَّرْنَا بَیْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟ۙ
56.60. நாம் உங்களிடையே மரணத்தை விதித்துள்ளோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணை இருக்கின்றது. அது முந்தவோ, பிந்தவோ மாட்டாது. நாம் இயலாதவர்கள் அல்ல.
Tefsiri na arapskom jeziku:
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِیْ مَا لَا تَعْلَمُوْنَ ۟
56.61. நீங்கள் அறிந்த உங்களின் படைப்பையும் வடிவத்தையும் மாற்றி நீங்கள் அறியாத படைப்பையும் வடிவத்தையும் உங்களுக்கு அளிப்பதற்கு (நாம் இயலாதவர்கள் அல்ல).
Tefsiri na arapskom jeziku:
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟
56.62. நாம் உங்களை முதன்முதலில் எவ்வாறு படைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா? உங்களை முதன்முதலில் படைத்ததற்கு ஆற்றலுடையவன் நீங்கள் மரணித்ததன் பின் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்பவும் ஆற்றல் பெற்றவன் என்பதை அறிந்துகொள்ள மாட்டீர்களா?
Tefsiri na arapskom jeziku:
اَفَرَءَیْتُمْ مَّا تَحْرُثُوْنَ ۟ؕ
56.63. நீங்கள் பூமியில் விதைக்கும் விதையைக் கவனித்தீர்களா?
Tefsiri na arapskom jeziku:
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ ۟
56.64. அந்த விதையை நீங்கள் முளைக்க வைக்கிறீர்களா? அல்லது நாம் அதனை முளைக்க வைக்கிறோமா?
Tefsiri na arapskom jeziku:
لَوْ نَشَآءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ ۟
56.65. நாம் அந்த விதையை கூளமாக ஆக்க நாடியிருந்தால் அது முளையும் நிலையை அடைந்த பின்னர் கூளமாக ஆக்கியிருப்போம். பின்னர் அதற்கு ஏற்பட்டதைக்கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள்.
Tefsiri na arapskom jeziku:
اِنَّا لَمُغْرَمُوْنَ ۟ۙ
56.66. நீங்கள் கூறுவீர்கள்: “நிச்சயமாக நாம் செய்த செலவை இழந்து வேதனைக்குள்ளாகிவிட்டோம்.”
Tefsiri na arapskom jeziku:
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
56.67. மாறாக நாம் வாழ்வாதாரத்தைவிட்டும் தடுக்கப்பட்டு விட்டோம்.”
Tefsiri na arapskom jeziku:
اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ ۟ؕ
56.68. உங்களுக்கு தாகம் வரும்போது நீங்கள் பருகும் நீரைக்குறித்து சிந்தித்துப் பார்த்தீர்களா?
Tefsiri na arapskom jeziku:
ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ۟
56.69. வானத்திலிருக்கும் மேகத்திலிருந்து நீங்கள் அதனை இறக்கி வைக்கிறீர்களா? அல்லது நாம் அதனை இறக்கி வைக்கிறோமா?
Tefsiri na arapskom jeziku:
لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ۟
56.70. நாம் நாடியிருந்தால் பருகவோ, நீர்ப்பாய்ச்சவோ நீங்கள் பயன்படுத்த முடியாதபடி அந்த நீரை கடும் உப்பு நீராக ஆக்க நாடியிருந்தால் அவாறு ஆக்கியிருப்போம். உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு சுவையான நீரை இறக்கியதற்கு அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Tefsiri na arapskom jeziku:
اَفَرَءَیْتُمُ النَّارَ الَّتِیْ تُوْرُوْنَ ۟ؕ
56.71. நீங்கள் உங்களின் பயன்பாட்டிற்காக மூட்டும் நெருப்பைக் கவனித்துப் பார்த்தீர்களா?
Tefsiri na arapskom jeziku:
ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ۟
56.72. எந்த மரத்திலிருந்து நெருப்பை நீங்கள் மூட்டுகிறீர்களோ அதனை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது உங்கள்மீது கருணை காட்டும்பொருட்டு நாம் அதனை உருவாக்கினோமா?
Tefsiri na arapskom jeziku:
نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِیْنَ ۟ۚ
56.73. இந்த நெருப்பை நாம் உங்களுக்கு மறுமையின் நெருப்பை நினைவூட்டக்கூடியதாகவும் உங்களின் பயணிகளுக்குக் பயனளிக்கக்கூடியதாகவும் ஆக்கியுள்ளோம்.
Tefsiri na arapskom jeziku:
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟
56.74. -தூதரே!- கண்ணியமிக்க உம் இறைவனுக்குப் பொருத்தமற்றவற்றிலிருந்து அவனைத் தூய்மைப்படுத்துவீராக.
Tefsiri na arapskom jeziku:
فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ۟ۙ
56.75. நட்சத்திரங்கள் உதிக்குமிடங்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِیْمٌ ۟ۙ
56.76. நிச்சயமாக இந்த இடங்களைக்கொண்டு செய்யப்படும் சத்தியம் -அவற்றின் கண்ணியத்தை அறிவார்களானால்- அவற்றில் காணப்படும் எண்ணற்ற சான்றுகள் மற்றும் படிப்பினைகளால் அது மகத்தானதாகும்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• دلالة الخلق الأول على سهولة البعث ظاهرة.
1. முதன் முதலில் படைத்திருப்பது மீண்டும் இலகுவாக உயிர்கொடுத்து எழுப்புவதற்கான வெளிப்படையான ஆதாரமாகும்.

• إنزال الماء وإنبات الأرض والنار التي ينتفع بها الناس نعم تقتضي من الناس شكرها لله، فالله قادر على سلبها متى شاء.
2. மழை பொழிய வைத்தல், பூமியிலிருந்து தாவரங்களை முளைப்பித்தல், மக்களுக்குப் பயனளிக்கும் நெருப்பை ஏற்படுத்துதல் ஆகிய அருட்கொடைகள் அல்லாஹ்வுக்கு மனிதர்கள் நன்றி செலுத்துவதை வேண்டி நிற்கிறது. அல்லாஹ் நாடும் போது அவற்றைப் பறிப்பதற்கும் ஆற்றலுடையவனாவான்.

• الاعتقاد بأن للكواكب أثرًا في نزول المطر كُفْرٌ، وهو من عادات الجاهلية.
3. மழை பொழிவதில் கோள்களுக்கும் பங்குண்டு என்ற நம்பிக்கை நிராகரிப்பாகும். அது அறியாமைக்கால வழமையாகும்.

 
Prijevod značenja Sura: El-Vakia
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje