Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: Et-Tegabun   Ajet:

அத்தகாபுன்

Intencije ove sure:
التحذير مما تحصل به الندامة والغبن يوم القيامة.
மறுமையில் நஷ்டம் தருபவற்றை விட்டும் எச்சரித்தல்

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ— لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
64.1. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்ற குறைபாடுடைய பண்புகளைவிட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஆட்சியதிகாரமும் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத்தவிர வேறு அரசன் இல்லை. அழகிய புகழும் அவனுக்கே உரியது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
Tefsiri na arapskom jeziku:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
64.2. -மனிதர்களே!- அவனே உங்களைப் படைத்தான். உங்களில் அவனை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவன்மீது நம்பிக்கைகொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சேருமிடம் சுவனமாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tefsiri na arapskom jeziku:
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
64.3. அவன் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்துள்ளான். அவன் அவற்றை வீணாகப் படைக்கவில்லை. -மனிதர்களே!- அவன் உங்கள்மீது அருள்புரியும்பொருட்டு அழகிய வடிவில் உங்களைப் படைத்துள்ளான். அவன் நாடியிருந்தால் உங்களை அலங்கோலமாக ஆக்கியிருப்பான். மறுமை நாளில் நீங்கள் அவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். நலவுக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் கிடைக்கும்.
Tefsiri na arapskom jeziku:
یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
64.4. அவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான். உங்களின் அந்தரங்கமான செயல்களையும் வெளிப்படையான செயல்களையும் அவன் அறிவான். அவன் உள்ளங்களில் உள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Tefsiri na arapskom jeziku:
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؗ— فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
64.5. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் பொய்ப்பித்த நூஹின் சமூகம், ஆதின் சமூகம், ஸமூதின் சமூகம் மற்றும் ஏனைவர்களைக் குறித்த செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்கள் உலகில் நிராகரித்துக் கொண்டிருந்ததன் தண்டனையை அனுபவித்தார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது. நிச்சயமாக அவர்களைக்குறித்த செய்தி உங்களிடம் வந்தே இருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள்மீது இறங்கிய வேதனை உங்கள்மீது இறங்குவதற்கு முன்னால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளுங்கள்.
Tefsiri na arapskom jeziku:
ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ یَّهْدُوْنَنَا ؗ— فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَی اللّٰهُ ؕ— وَاللّٰهُ غَنِیٌّ حَمِیْدٌ ۟
64.6. அவர்களைத் தாக்கிய அந்த வேதனைக்கான காரணம், அல்லாஹ்வின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் வந்தபோது தூதர் மனித இனத்தில் இருப்பதை வெறுத்தோராக “ஒரு மனிதன் எங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவதா” என்று கூறினார்கள். அவர்கள் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தார்கள். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவர்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டை விட்டும் அவன் தேவையற்றவன். ஏனெனில் நிச்சயமாக அவர்களின் வழிபாடு அவனுக்கு எதனையும் அதிகரிக்கப்போவதில்லை. அல்லாஹ் தனது அடியார்களின் பக்கம் தேவையற்றவனாவான். தன் சொல்லிலும் செயலிலும் அவன் புகழுக்குரியவனாக இருக்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ— قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ— وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
64.7. அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பமாட்டான் என்று எண்ணுகிறார்கள். -தூதரே!- மீண்டும் எழுப்புவதை நிராகரிக்கும் இவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள். பின்னர் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்கள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு எழுப்புவது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. அவன் உங்களை முதன்முறையாகப் படைத்தான். எனவே நீங்கள் இறந்தபிறகு உங்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி கொடுப்பதற்காகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு அவன் ஆற்றலுடையவனே.
Tefsiri na arapskom jeziku:
فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِیْۤ اَنْزَلْنَا ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
64.8. -மனிதர்களே!- அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் எம் தூதர் மீது நாம் இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tefsiri na arapskom jeziku:
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
64.9. -தூதரே!- அல்லாஹ் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. அந்த நாளே நிராகரிப்பாளர்களின் நஷ்டமும் குறையும் வெளிப்படும் நாளாகும். நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நரகவாசிகளுக்குரிய தங்குமிடங்களைப் பெறுவார்கள். நரகவாசிகள் நரகத்தில் சுவனவாசிகளின் தங்குமிடங்களைப் பெறுவார்கள். யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிவாரோ அல்லாஹ் அவரது பாவங்களைப் போக்கி சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதில் இருந்து அவர்கள் வெளியேறமாட்டார்கள். அவற்றின் இன்பங்கள் என்றும் முடிவடையாததாகும். அவ்வாறு அவர்கள் பெறுவதே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• من قضاء الله انقسام الناس إلى أشقياء وسعداء.
1. மக்கள் நற்பாக்கியசாலிகள், துர்பாக்கியசாலிகள் என்னும் இரு பிரிவினராகக் காணப்படுவது அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.

• من الوسائل المعينة على العمل الصالح تذكر خسارة الناس يوم القيامة.
2. நல்லமல்கள் செய்வதற்கு வழிவகுக்கும் சாதனங்களில் உள்ளவையே மறுமையில் மனிதர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நினைவு கூர்வதாகும்.

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
64.10. அல்லாஹ்வை நிராகரித்து, எமது தூதர் மீது நாம் இறக்கிய எமது வசனங்களை நிராகரிப்பவர்கள்தாம் நிரந்தரமாக நரகத்தில் வீழ்ந்து கிடக்கும் நரகவாசிகளாவர். அது அவர்களின் மோசமான சேருமிடமாகும்.
Tefsiri na arapskom jeziku:
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
64.11. ஒருவருக்கு ஏதேனும் துன்பம் அவரிலோ, அவரது சொத்திலோ, பிள்ளைகளிலோ ஏற்பட்டால் அது அல்லாஹ் ஏற்படுத்திய விதியினாலாகும். யார் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய விதியின்மீதும் நம்பிக்கைகொண்டாரோ அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அவரது உள்ளம் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்படுவதற்கும் அவனது விதியை பொருந்திக் கொள்வதற்கும் அவருக்கு வழிகாட்டுவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Tefsiri na arapskom jeziku:
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ— فَاِنْ تَوَلَّیْتُمْ فَاِنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
64.12. அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவனது தூதர் கொண்டு வந்ததைப் புறக்கணித்துவிட்டால் அதனால் ஏற்படும் தீங்கு உங்களையே சாரும். நாம் எடுத்துரைக்குமாறு இட்ட கட்டளையை எடுத்துரைப்பதைத் தவிர நம் தூதர்மீது வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. எடுத்துரைக்குமாறு அவருக்கு இடப்பட்ட கட்டளைகளை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்.
Tefsiri na arapskom jeziku:
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
64.13. அல்லாஹ்வே உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத்தவிர வேறு உண்மையான வணக்குத்திற்குரிய இறைவன் இல்லை. நம்பிக்கையாளர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.
Tefsiri na arapskom jeziku:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ— وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
64.14. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! நிச்சயமாக உங்களின் மனைவியரிலும் குழந்தைகளிலும் உங்களுக்கான எதிரிகள் இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் அவன் பாதையில் ஜிஹாது செய்வதைவிட்டும் திருப்பக்கூடியவர்களாகவும் உங்களை சோர்வடையச்செய்பவர்களாகவும் உள்ளனர். எனவே அவர்கள் உங்களின் மீது தாக்கம் ஏற்படுத்திவிடாவண்ணம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களின் தவறுகளை மன்னித்து, கண்டுகொள்ளாமல், மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து உங்கள்மீது கருணை காட்டுவான். செயலுக்கேற்றவாறே கூலி வழங்கப்படும்.
Tefsiri na arapskom jeziku:
اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ— وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
64.15. நிச்சயமாக உங்களின் செல்வங்களும் பிள்ளைகளும் உங்களுக்குச் சோதனையே. தடுக்கப்பட்டவற்றைச் சம்பாதிப்பதற்கும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படாமல் இருப்பதற்கும் உங்களை சில வேளை தூண்டுவார்கள். பிள்ளைகளுக்கு வழிப்படுதல், செல்வங்களில் ஈடுபாடுகொள்ளல் என்பவற்றை விட அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கின்றது. அந்த மகத்தான கூலி சுவனமாகும்.
Tefsiri na arapskom jeziku:
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِیْعُوْا وَاَنْفِقُوْا خَیْرًا لِّاَنْفُسِكُمْ ؕ— وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
64.16. அவனுடைய பாதையில் வழிப்பட உங்களால் இயன்ற அளவு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். காதுகொடுத்துக் கேளுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவன் உங்களுக்கு வழங்கிய செல்வங்களை நல்வழிகளில் செலவு செய்யுங்கள். யாரையெல்லாம் மனதின் பேராசையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர்கள்தாம் வெறுக்கும் விடயத்தில் இருந்து விடுதலையடைந்து தான் வேண்டுவதை பெற்று வெற்றியடையக்கூடியவர்கள்.
Tefsiri na arapskom jeziku:
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعِفْهُ لَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ— وَاللّٰهُ شَكُوْرٌ حَلِیْمٌ ۟ۙ
64.17. நீங்கள் உங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்து அவனுக்கு அழகிய கடன் வழங்கினால் அவன் உங்களுக்கு பத்து முதல் எழுநூறு மடங்கு என பன்மடங்குவரை நன்மையளித்து உங்களுக்கு கூலியைப் பன்மடங்காக ஆக்கித் தருவான். உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் குறைவான செயலுக்கு அதிகமான கூலியளித்து நன்றி பாராட்டக்கூடியவனாகவும் உங்களை உடனுக்குடன் தண்டிக்காமல் சகித்துக் கொள்ளக்கூடியவனாகவும் இருக்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
64.18. அல்லாஹ் வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், யாராலும் தன்னை மிகைக்க முடியாதவனாகவும் தன் படைப்பில், சட்டங்களில், நிர்ணயத்தில் ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• مهمة الرسل التبليغ عن الله، وأما الهداية فهي بيد الله.
1. அல்லாஹ்வை பற்றி எடுத்துரைப்பதே தூதர்களின் பணியாகும். நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.

• الإيمان بالقدر سبب للطمأنينة والهداية.
2. விதியை நம்புவது நிம்மதிக்கும் நேர்வழிக்கும் காரணமாக அமையும்.

• التكليف في حدود المقدور للمكلَّف.
3. (மனிதனுக்கு) இயன்ற அளவே பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.

• مضاعفة الثواب للمنفق في سبيل الله.
4. அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பவனுக்கு நன்மை பன்மடங்காக வழங்கப்படல்.

 
Prijevod značenja Sura: Et-Tegabun
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje