Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (68) Sura: El-Enfal
لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
8.68. போர்ச் செல்வங்களைப் பெறுவதும், கைதிகளுக்காக பிணைத்தொகை பெறுவதும் ஆகுமானதே என தனது விதியில் ஏற்கனவே அல்லாஹ் தீர்மானித்திருக்காவிட்டால், வஹி இறங்கி அவை அனுமதிக்கப்பட முன்னரே, போர்ச் செல்வங்களையும், கைதிகளிடம் பிணைத் தொகையும் பெற்றுக் கொண்டதற்காக அல்லாஹ்விடமிருந்து கடுமையான வேதனை உங்களை அடைந்திருக்கும்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• في الآيات وَعْدٌ من الله لعباده المؤمنين بالكفاية والنصرة على الأعداء.
1. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு வெற்றியளிப்பதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

• الثبات أمام العدو فرض على المسلمين لا اختيار لهم فيه، ما لم يحدث ما يُرَخِّص لهم بخلافه.
2. எதிரிகளுக்கு முன்னால் உறுதியுடன் நிற்பது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமையாகும். அதிலே அவர்கள் வேறு எந்த தெரிவும் கிடையாது, கடமையில்லை என சலுகை வழங்கும் ஏதேனும் நிகழ்வு நடந்தாலே தவிர.

• الله يحب لعباده معالي الأمور، ويكره منهم سَفْسَافَها، ولذلك حثهم على طلب ثواب الآخرة الباقي والدائم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு உயர்ந்த விஷயங்களை விரும்புகிறான், தாழ்ந்த விஷயங்களை வெறுக்கிறான். எனவேதான் நிலையான மறுமையின் நன்மையைத் தேடுமாறு அவர்களுக்கு ஆர்வமூட்டியுள்ளான்.

• مفاداة الأسرى أو المنّ عليهم بإطلاق سراحهم لا يكون إلا بعد توافر الغلبة والسلطان على الأعداء، وإظهار هيبة الدولة في وجه الآخرين.
4. எதிரிகளின் மீது அதிகாரம் ஏற்பட்டு முஸ்லிம் நாட்டைப் பற்றிய பயம் ஏனையோரிடம் வெளிப்படும் வரை கைதிகளுக்குப் பிணைவழங்கவோ அல்லது அவர்களை இலவசமாக விடுவித்து கருணை காட்டவோ முடியாது.

 
Prijevod značenja Ajet: (68) Sura: El-Enfal
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje