Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: El-Beled   Ajet:

அல்பலத்

Intencije ove sure:
بيان افتقار الإنسان وكبده وسبل نجاته.
மனிதனின் தேவை, சிரமம், ஈடேற்றம் பெறுவதுக்கான வழிகள் என்பவற்றைத் தெளிவுபடுத்தல்

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
90.1. அல்லாஹ் மக்கா என்னும் புனித நகரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
90.2. -தூதரே!- நீர் அங்கு செய்பவை கொல்லப்படத் தகுதியானவர்களைக் கொன்றது, கைதிகளாகப் பிடிக்கப்படத் தகுதியானவர்களை கைதிகளாகப் பிடித்தது உமக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.
Tefsiri na arapskom jeziku:
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
90.3. அல்லாஹ் மனிதஇனத் தந்தையைக் கொண்டும் அவனிலிருந்து தோன்றும் சந்ததியைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
90.4. மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கும் சிரமங்களினால் அவனைக் கஷ்டத்திலும் சிரமத்திலும் நாம் படைத்தோம்.
Tefsiri na arapskom jeziku:
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
90.5. தான் பாவங்களை சம்பாதித்தால் தனக்கெதிராக யாரும் சக்திபெற மாட்டார்கள், தன்னை யாராலும் அது அவனைப் படைத்த இறைவனாக இருந்தாலும் தண்டிக்க முடியாது என்று நிச்சயமாக மனிதன் எண்ணிக்கொண்டானா?
Tefsiri na arapskom jeziku:
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
90.6. அவன் கூறுகிறான்: “நான் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன், என்று.”
Tefsiri na arapskom jeziku:
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
90.7. தான் செலவழித்ததைக்கொண்டு பெருமையடிக்கும் மனிதன் தன்னை அல்லாஹ் பார்க்கவில்லை என்றும் தன் செல்வங்களில், தான் சம்பாதித்தது குறித்தும் செலவுசெய்தது குறித்தும் அவன் கணக்குக் கேட்க மாட்டான் என்றும் எண்ணிக் கொண்டானா?
Tefsiri na arapskom jeziku:
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
90.8. நாம் அவனுக்கு பார்க்கக்கூடிய இரு கண்களை ஆக்கவில்லையா?
Tefsiri na arapskom jeziku:
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
90.9. பேசக்கூடிய ஒரு நாவையும் இரு உதடுகளையும் (ஆக்கவில்லையா?)
Tefsiri na arapskom jeziku:
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
90.10. நாம் அவனுக்கு நன்மையின் பாதையையும் அசத்தியப் பாதையையும் அறிவித்துக் கொடுக்கவில்லையா?
Tefsiri na arapskom jeziku:
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
90.11. அவன் சுவனத்தை விட்டும் பிரிக்கும் கணவாயைக் கடக்குமாறு வேண்டப்படுவான்.
Tefsiri na arapskom jeziku:
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
90.12. -தூதரே!- சுவனம் செல்வதற்குக் கடக்க வேண்டிய கணவாயைக் குறித்து உமக்கு அறிவித்தது எது?
Tefsiri na arapskom jeziku:
فَكُّ رَقَبَةٍ ۟ۙ
90.13. அது ஆண் அல்லது பெண் அடிமையை விடுதலை செய்வதாகும்.
Tefsiri na arapskom jeziku:
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
90.14. அல்லது உணவு கிடைப்பது அரிதான பசி, பட்டினியுடைய நாளில் உணவளிப்பதாகும்,
Tefsiri na arapskom jeziku:
یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ
90.15. தந்தையை இழந்த உறவுக்கார குழந்தைக்கோ.
Tefsiri na arapskom jeziku:
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
90.16. அல்லது எதுவும் சொந்தம் இல்லாத ஏழைக்கோ ஆகும்.
Tefsiri na arapskom jeziku:
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
90.17. பின்னர் அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வணக்கவழிபாடுகளைச் செய்வதிலும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதிலும் கஷ்டங்களிலும் பொறுமையைக் கடைபிடிக்கும்படியும் அவனுடைய அடியார்களுடன் பொறுமையாக நடந்துகொள்ளும்படியும், கிருபையைக்கொண்டும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களில் உள்ளவராக இருப்பார்.
Tefsiri na arapskom jeziku:
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
90.18. இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் வலதுபுறத்தில் உள்ளவர்களாவர்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• عتق الرقاب، وإطعام المحتاجين في وقت الشدة، والإيمان بالله، والتواصي بالصبر والرحمة: من أسباب دخول الجنة.
1. அடிமையை விடுதலை செய்வது, கஷ்டமான சமயங்களில் தேவையுடையோருக்கு உணவளிப்பது, அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொள்வது, பொறுமையாக இருக்கும்படியும் கருணையோடு நடந்துகொள்ளும்படியும் ஒருவருக்கொருவர் அறிவுரை வழங்குவது சுவனத்தில் நுழைவிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

• من دلائل النبوة إخباره أن مكة ستكون حلالًا له ساعة من نهار.
2. நிச்சயமாக பகலின் சில மணி நேரங்கள் மக்கா நபியவர்களுக்கு ஹலாலாக மாறிவிடும் என்ற அறிவிப்பு நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்றே.

• لما ضيق الله طرق الرق وسع طرق العتق، فجعل الإعتاق من القربات والكفارات.
3. அடிமைப்படுத்தலின் வழிகளை அல்லாஹ் குறைக்கும் அதேவேளை உரிமையிடுவதற்கான வழிகளை விரிவுபடுத்தியுள்ளான். அதனால்தான் உரிமையிடுதலை வணக்கங்கள் மற்றும் குற்றப்பரிகாரங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

 
Prijevod značenja Sura: El-Beled
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje