Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Yūnus   Ayah:
فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ۚؕ— لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟
10.98. யூனுஸ் உடைய சமூகத்தாரைத் தவிர நாம் தூதர்களை அனுப்பிய எந்த ஊர்வாசிகளும் வேதனையைக் காண்பதற்கு முன்னால் தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லை. யூனுஸின் சமூகத்தார் உண்மையாகவே நம்பிக்கை கொண்டதனால் நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை விட்டு இழிவு, அவமானம் ஆகிய வேதனையை அகற்றினோம். அவர்களின் தவணை முடியும் வரை அவர்களை அனுபவிக்கச் செய்தோம்.
Arabic explanations of the Qur’an:
وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِی الْاَرْضِ كُلُّهُمْ جَمِیْعًا ؕ— اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰی یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
10.99. -தூதரே!- உம் இறைவன் பூமியிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொள்வதை நாடியிருந்தால் அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆயினும் அவன் ஒரு நோக்கத்திற்காக அவ்வாறு நாடவில்லை. தான் நாடியவர்களை தன் நீதியால் அவன் வழிதவறச் செய்கிறான். தான் நாடியவர்களுக்குத் தன் அருளால் அவன் நேர்வழி காட்டுகிறான். உம்மால் மக்களை நம்பிக்கை கொள்ளும்படி நிர்ப்பந்திக்க முடியாது. ஈமான் கொள்வதற்கு பாக்கியமளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.
Arabic explanations of the Qur’an:
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَیَجْعَلُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
10.100. அல்லாஹ்வின் அனுமதியின்றி எவராலும் நம்பிக்கை கொண்டுவிட முடியாது. அவனது நாட்டமின்றி நம்பிக்கை ஏற்படாது. எனவே நீர் அவர்களுக்காக வருத்தப்படாதீர். அல்லாஹ்வின் ஆதாரங்களையும், ஏவல்களையும், விலக்கல்களையும் விளங்கிக் கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் வேதனையையும் இழிவையும் சாட்டிவிடுகிறான்.
Arabic explanations of the Qur’an:
قُلِ انْظُرُوْا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَا تُغْنِی الْاٰیٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
10.101. -தூதரே!- உம்மிடம் சான்றுகளை வேண்டும் இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகள் என்னென்ன இருக்கின்றன என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நிராகரிப்பில் நிலைத்திருந்து நம்பிக்கை கொள்வதற்கு தயாரற்ற சமூகத்திற்கு அத்தாட்சிகளையும் சான்றுகளையும் இறக்குவதும், தூதர்களை அனுப்புவதும் பயனளிக்கப் போவதில்லை.
Arabic explanations of the Qur’an:
فَهَلْ یَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَیَّامِ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ ؕ— قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
10.102. இந்த நிராகரிப்பாளர்கள் தங்களுக்கு முந்தைய பொய்பித்த சமூகங்களின் மீது அல்லாஹ் இறக்கிய வேதனையைப் போன்றல்லாத ஒன்றையா எதிர்பார்க்கிறார்கள்?! -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வின் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் என் இறைவனின் வாக்குறுதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
Arabic explanations of the Qur’an:
ثُمَّ نُنَجِّیْ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚ— حَقًّا عَلَیْنَا نُنْجِ الْمُؤْمِنِیْنَ ۟۠
10.103. பின்னர் அவர்கள் மீது வேதனையை இறக்கி நம்முடைய தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றுகின்றோம். அவர்களின் சமூகத்திற்கு ஏற்பட்டது அவர்களுக்கு ஏற்படுவதில்லை. நாம் அந்த தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றியது போன்றே அல்லாஹ்வின் தூதரையும் அவருடன் உள்ள நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவது நம்மீது நாம் விதித்துக் கொண்ட கடமையாகும்.
Arabic explanations of the Qur’an:
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ شَكٍّ مِّنْ دِیْنِیْ فَلَاۤ اَعْبُدُ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ ۖۚ— وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
10.104. -தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! நான் உங்களை அழைக்கும் ஓரிறைக் கொள்கை என்னும் என் மார்க்கத்தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தாலும் உங்களின் மார்க்கம் அசத்தியம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனவே நான் அதனைப் பின்பற்றமாட்டேன். அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கும் எதையும் நான் வணங்க மாட்டேன். ஆனாலும் உங்களை மரணிக்கச் செய்பவனான அல்லாஹ்வையே நான் வணங்குவேன். நான் வணக்கத்தை அவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும் என்று அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
Arabic explanations of the Qur’an:
وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ— وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
10.105. அவ்வாறே நான் எல்லா மார்க்கங்களையும் விட்டு விட்டு உண்மையான மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறு ஏவியுள்ளான். இணைவைப்பாளர்களில் ஒருவனாகி விடுவதை விட்டும் அவன் என்னைத் தடுத்துள்ளான்.
Arabic explanations of the Qur’an:
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكَ وَلَا یَضُرُّكَ ۚ— فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِیْنَ ۟
10.106. -தூதரே!- அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் சிலைகளை நீர் வணங்காதீர். அவை பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்திபெற மாட்டாது. நீர் அவற்றை வணங்கினால் அல்லாஹ்வின் விஷயத்திலும் தங்களின் விஷயத்திலும் வரம்புமீறிய அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• الإيمان هو السبب في رفعة صاحبه إلى الدرجات العلى والتمتع في الحياة الدنيا.
1. ஒரு மனிதனுக்கு இவ்வுலகில் உயர்ந்த அந்தஸ்துகளும் இன்பங்களும் வழங்கப்படுவதற்கு ஈமான் காரணமாக இருக்கின்றது.

• ليس في مقدور أحد حمل أحد على الإيمان؛ لأن هذا عائد لمشيئة الله وحده.
2. எவரும் மற்றவரை ஈமான்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் இது அல்லாஹ் ஒருவனின் நாட்டத்துக்குக் கட்டுப்பட்டதாகும்.

• لا تنفع الآيات والنذر من أصر على الكفر وداوم عليه.
3. நிராகரிப்பில் நிலைத்திருப்போருக்கு அத்தாட்சிகளும் எச்சரிக்கைகளும் பலனளிக்காது.

• وجوب الاستقامة على الدين الحق، والبعد كل البعد عن الشرك والأديان الباطلة.
4. உண்மையான மார்க்கத்தில் நிலைத்திருப்பதும், இணைவைப்பு, தவறான மதங்கள் ஆகிவற்றை விட்டும் முழுமையாக விலகியிருப்பதும் அத்தியவசியமாகும்.

 
Translation of the meanings Surah: Yūnus
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close