Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
15 : 11

مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟

11.15. யார் தம் செயல்களின் மூலம் மறுமையை விரும்பாமல் இவ்வுலகத்தையும் அழியக்கூடிய அதன் இன்பங்களையும் விரும்புவார்களோ நாம் அவர்களின் செயல்களுக்கான கூலியை ஆரோக்கியம், செல்வ வளம், அமைதி போன்ற வடிவில் இவ்வுலகிலேயே வழங்கிவிடுவோம். அவர்களின் செயல்களுக்கான கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது. info
التفاسير:
Benefits of the verses in this page:
• تحدي الله تعالى للمشركين بالإتيان بعشر سور من مثل القرآن، وبيان عجزهم عن الإتيان بذلك.
1. அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு குர்ஆனைப் போன்று பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வரும்படி சவால் விடுகிறான். அவர்களால் ஒரு போதும் கொண்டுவர முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறான். info

• إذا أُعْطِي الكافر مبتغاه من الدنيا فليس له في الآخرة إلّا النار.
2. நிராகரிப்பாளனுக்கு உலகில் அவனது எதிர்பார்ப்பு நிவைற்றப்பட்டாலும் மறுமையில் அவனுக்கு நரகத்தைத் தவிர வேறொன்றுமில்லை. info

• عظم ظلم من يفتري على الله الكذب وعظم عقابه يوم القيامة.
3.அல்லாஹ்வின் மீது பொய்யை புனைந்தரைப்பவனின் அநியாயம் மிகப் பெரியது. மறுமையில் அவனுக்குரிய தண்டனையும் மிகப் பெரியது. info