Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
42 : 12

وَقَالَ لِلَّذِیْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِیْ عِنْدَ رَبِّكَ ؗ— فَاَنْسٰىهُ الشَّیْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِی السِّجْنِ بِضْعَ سِنِیْنَ ۟۠

12.42. இருவரில் விடுதலையடைவார் என்று எண்ணியவரிடம் -அரசனுக்கு மது ஊற்றிக்கொடுப்பவர்- யூஸுஃப் கூறினார்: “அரசனிடம் என்னைப் பற்றி எடுத்துக் கூறுவீராக. அதனால் அவர் சிறையிலிருந்து என்னை விடுவிக்கலாம். அரசனிடம் யூஸுஃபைக் குறித்துக் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான். எனவே அதன் பின்னர் யூஸுஃப் பல வருடங்கள் சிறையில் கழித்தார். info
التفاسير: |
Benefits of the Verses on this page:
• وجوب اتباع ملة إبراهيم، والبراءة من الشرك وأهله.
1. இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவதும் இணைவைப்பையும், இணைவைப்பாளர்களையும் விட்டு நீங்கி விடுவதும் கட்டாயமாகும். info

• في قوله:﴿ءَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ ...﴾ دليل على أن هؤلاء المصريين كانوا أصحاب ديانة سماوية لكنهم أهل إشراك.
2. (சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது யாவரையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?) என்ற வசனம் இந்த எகிப்தியர்கள் வானுலக மார்க்கத்தைச் சார்ந்தவர்கள ஆனால் இணைவைப்பாளர்களாக காணப்பட்டனர் என்பதற்கான ஆதாரமாகும். info

• كلُّ الآلهة التي تُعبد من دون الله ما هي إلا أسماء على غير مسميات، ليس لها في الألوهية نصيب.
3. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் தெய்வங்கள் அனைத்தும் வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவை வணக்கத்திற்கு சிறிதும் தகுதியானவை அல்ல. info

• استغلال المناسبات للدعوة إلى الله، كما استغلها يوسف عليه السلام في السجن.
4. யூஸுஃப் (அலை) அவர்கள் சிறையில் இருந்து பயன்படுத்திக் கொண்டது போல சந்தர்ப்ப சூழ்நிலைகளை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். info