Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-Isrā’   Ayah:
مَنْ كَانَ یُرِیْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِیْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِیْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ ۚ— یَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا ۟
17.18. யார் மறுமையின் மீது நம்பிக்கைகொள்ளாமல், அதனைப் பொருட்படுத்தாமல் நற்செயல்களின் மூலம் இவ்வுலகத்தை விரும்புகிறாரோ நாம் நாடிய இன்பங்களையே விரைவாக அவருக்கு வழங்கிடுவோம் அவர் விரும்பியதையல்ல. அதுவும் நாம் நாடியவர்களுக்கே வழங்குவோம். பின்னர் அவருக்காக நரகத்தை தயார்படுத்தியுள்ளோம். அவன் மறுமையை நிராகரித்து இவ்வுலகை தேர்ந்தெடுத்துக் கொண்டதைக் கண்டிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டு அதில் நுழைந்து, அதன் வெப்பத்தை அனுபவிப்பார்.
Arabic explanations of the Qur’an:
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰی لَهَا سَعْیَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ كَانَ سَعْیُهُمْ مَّشْكُوْرًا ۟
17.19. அல்லாஹ் நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிட்டவற்றை நம்பிக்கைகொண்டவராக நற்செயல்களின் மூலம் மறுமையின் நன்மையை யார் விரும்புவாரோ, அதற்காக முகஸ்துதியற்ற முயற்சி செய்வாரோ, அவ்வாறான பண்புகளைக்கொண்டு வர்ணிக்கப்பட்டவர்களின் முயற்சி அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றிற்கேற்ப அவர்களுக்கு அவன் கூலி வழங்குவான்.
Arabic explanations of the Qur’an:
كُلًّا نُّمِدُّ هٰۤؤُلَآءِ وَهٰۤؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ؕ— وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا ۟
17.20. -தூதரே!- நல்லவர், பாவி ஆகிய இந்த இரு பிரிவினருக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் துண்டிக்காமல் அதிகமாக வழங்குவோம். இவ்வுலகில் உம் இறைவனின் கொடை நல்லவர், பாவி என எவருக்கும் தடைசெய்யப்பட்டதாக இல்லை.
Arabic explanations of the Qur’an:
اُنْظُرْ كَیْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ؕ— وَلَلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِیْلًا ۟
17.21. -தூதரே!- நாம் இவ்வுலகில் அவர்களில் சிலரை சிலரைவிட வாழ்வாதாரத்திலும் அந்தஸ்திலும் எவ்வாறு சிறப்பித்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. உலக வாழ்வை விட மறுமை, இன்பங்களின் படித்தரங்களின் ஏற்றத்தாழ்விலும், சிறப்பிலும் சிறந்ததாகும். எனவே நம்பிக்கையாளன் அதற்காக ஆசை கொள்ளட்டும்.
Arabic explanations of the Qur’an:
لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا ۟۠
17.22. -அடியானே!- அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுளை ஏற்படுத்தி விடாதே. அவ்வாறு செய்தால் நீ அல்லாஹ்விடத்திலும் அவனுடைய நல்லடியார்களிடத்திலும் இழிவடைந்து உன்னை புகழக்கூடியவர் யாரும் இல்லாது அவனது உதவியை இழந்து எவ்வித உதவியாளரும் அற்றவனாகி விடுவாய்.
Arabic explanations of the Qur’an:
وَقَضٰی رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ؕ— اِمَّا یَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا ۟
17.23. அடியானே! உன் இறைவன் உனக்குப் பின்வரும் விஷயங்களைக் கட்டளையிட்டுள்ளான்: “நீங்கள் அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. தாய், தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக அவர்கள் முதுமையை அடைந்த பின்னர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உன்னிடத்தில் இருக்கும் நிலையில் முதுமையை அடைந்துவிட்டால் “சீ” என்று அவர்களை உதாசீனப்படுத்தும் வார்த்தைகளைக் கூறிவிடக் கூடாது; அவர்களை விரட்டவோ வார்த்தைகளால் கடிந்து கொள்ளவோ கூடாது; அவர்களிடம் மென்மைகலந்த கண்ணியமான வார்த்தைகளைக் கூறு.
Arabic explanations of the Qur’an:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا ۟ؕ
17.24. அவர்களுடன் கருணையோடு பணிவாக நடந்துகொள். “என் இறைவா! அவர்கள் சிறுவயதில் என்னைப் பராமரித்ததற்காக அவர்கள் மீது கருணைகாட்டு” என்று பிரார்த்தனை செய்.
Arabic explanations of the Qur’an:
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ— اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
17.25. -மனிதர்களே!- வணக்கத்திலும் நற்காரியங்களிலும் பெற்றோர் நலன் பேணுவதிலும் உங்களின் உள்ளங்களிலுள்ள மனத்தூய்மையை உங்களின் இறைவன் நன்கறிந்தவன். இவற்றில் உங்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் நிச்சயமாக அவன் தன் பக்கம் திரும்பி பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். தனது இறைவனுக்குக் கட்டுப்படுவதில், தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதில் ஏற்பட்ட தவறுகளுக்காக யார் பாவமன்னிப்புத் தேடுவாறோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.
Arabic explanations of the Qur’an:
وَاٰتِ ذَا الْقُرْبٰی حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِیْرًا ۟
17.26. -நம்பிக்கையாளனே!- உன் உறவினருக்கு செய்ய வேண்டிய சேர்ந்து வாழும் உரிமையை வழங்குவாயாக! தேவையுடைய ஏழைக்கும் பிரயாணத்தில் இடையில் சிக்கிக்கொண்டவனுக்கும் கொடுப்பாயாக. பாவமான காரியத்திலோ வீண்விரயமாகவோ உன் செல்வத்தை செலவழித்து விடாதே.
Arabic explanations of the Qur’an:
اِنَّ الْمُبَذِّرِیْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّیٰطِیْنِ ؕ— وَكَانَ الشَّیْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا ۟
17.27. நிச்சயமாக தமது செல்வங்களை பாவமான காரியங்களிலோ, வீண்விரயமாகவோ செலவு செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவர். வீண்விரயம் செய்யுமாறு அவனிடும் கட்டளையில் அவர்களுக்குக் கட்டுப்படுகிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். பாவமான காரியத்தைத் தவிர வேறு எதையும் அவன் செய்ய மாட்டான். தன் இறைவன் வெறுக்கும் செயலைத் தவிர வேறு எதையும் அவன் ஏவமாட்டான்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• ينبغي للإنسان أن يفعل ما يقدر عليه من الخير وينوي فعل ما لم يقدر عليه؛ ليُثاب على ذلك.
1. மனிதன் தன்னால் இயன்ற நற்செயல்களில் ஈடுபட வேண்டும். இயலாதவற்றைச் செய்வதற்கு எண்ண வேண்டும். அதற்காகவும் அவன் கூலி வழங்கப்படுவான்.

• أن النعم في الدنيا لا ينبغي أن يُسْتَدل بها على رضا الله تعالى؛ لأنها قد تحصل لغير المؤمن، وتكون عاقبته المصير إلى عذاب الله.
2. உலகில் கிடைக்கும் அருட்கொடைகள் இறைதிருப்திக்கான ஆதாரமல்ல. ஏனெனில் அது விசுவாசம்கொள்ளாதவர்களுக்கும் கிடைத்து அதன் இறுதி முடிவு அல்லாஹ்வின் வேதனையாக இருக்கலாம்.

• الإحسان إلى الوالدين فرض لازم واجب، وقد قرن الله شكرهما بشكره لعظيم فضلهما.
3. தாய், தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் தனக்கு நன்றி செலுத்துவதுடன் தாய், தந்தையருக்கு நன்றி செலுத்துவதையும் இணைத்துக்கூறுமளவுக்கு அவ்விருவரின் சிறப்பு மகத்தானதாகும்.

• يحرّم الإسلام التبذير، والتبذير إنفاق المال في غير حقه.
4. இஸ்லாம் வீண்விரயம் செய்வதைத் தடைசெய்கிறது. பணத்தை (சொத்தை) தேவையற்ற விதத்தில் செலவளிப்பதே வீண்விரயமாகும்.

 
Translation of the meanings Surah: Al-Isrā’
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close