Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-Baqarah   Ayah:
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِیْ تَجْرِیْ فِی الْبَحْرِ بِمَا یَنْفَعُ النَّاسَ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِیْهَا مِنْ كُلِّ دَآبَّةٍ ۪— وَّتَصْرِیْفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَیْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
2.164. வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், அவற்றிலுள்ள அபுர்வ படைப்புக்களிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய உணவுப்பொருட்கள், வியாபாரப் பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை சுமந்துகொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கி, விளையும் பயிா்கள் மூலம் பூமியை உயிர்ப்பிக்கும் நீரிலும், இந்த உலகத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய உயிரினங்களிலும், ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு அவன் காற்றை வீசச் செய்வதிலும், வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் ஆதாரங்களைப் புரிந்துகொள்ளும் மக்களுக்கு, அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
Arabic explanations of the Qur’an:
وَمِنَ النَّاسِ مَنْ یَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا یُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ— وَلَوْ یَرَی الَّذِیْنَ ظَلَمُوْۤا اِذْ یَرَوْنَ الْعَذَابَ ۙ— اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۙ— وَّاَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعَذَابِ ۟
2.165. தெளிவான இந்த சான்றுகள் இருந்தும் மனிதர்களில் சிலர் அல்லாஹ்வுக்கு இணையான தெய்வங்களை ஏற்படுத்தி அல்லாஹ்வை நேசிப்பதுபோல் அந்த தெய்வங்களையும் நேசிக்கிறார்கள். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் இவர்கள் தமது தெய்வங்களை நேசிப்பதை விட அல்லாஹ்வை அதிகமாக நேசிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவதில்லை. மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் அவனையே நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களோ மகிழ்ச்சியில் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தெய்வங்களை நேசிக்கிறார்கள்; துன்பத்தில் அல்லாஹ்வையே அழைக்கிறார்கள். இணைவைத்து, தீயகாரியங்கள் செய்து அநியாயக்காரர்களான இவர்கள் மறுமையில் வேதனையைக் காணும்போது வல்லமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களை அவன் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். அவர்கள் இந்த வேதனையை முன்னரே பார்த்திருந்தால் ஒருபோதும் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியிருக்க மாட்டார்கள்.
Arabic explanations of the Qur’an:
اِذْ تَبَرَّاَ الَّذِیْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِیْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ ۟
2.166. இது மறுமைநாளின் பயங்கரத்தையும் கடுமையையும் காணும் பின்பற்றப்பட்ட தலைவர்கள் தம்மைப் பின்பற்றிய பலவீனர்களை விட்டும் விலகிக்கொள்ளும் சந்தர்ப்பத்திலே நிகழும். தப்புவதற்கான அனைத்து வழிகளும் துண்டிக்கப்பட்டுவிடும்.
Arabic explanations of the Qur’an:
وَقَالَ الَّذِیْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ— كَذٰلِكَ یُرِیْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَیْهِمْ ؕ— وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنَ النَّارِ ۟۠
2.167. பின்பற்றியவர்கள், பலவீனமானவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டும் எமது தலைவர்கள் விலகிக்கொண்டதைப்போல் நாங்களும் அவா்களை விட்டு விலகுவதற்கு உலகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கக்கூடாதா? மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு கடுமையான வேதனையைக் காட்டியதுபோல், அசத்தியத்தில் இருந்த தலைவர்களைப் பின்பற்றியதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவலைகளாக, கைசேதங்களாக அனுபவிக்கச்செய்வான். அவர்கள் நரகத்திலிருந்து ஒருபோதும் வெளியேற முடியாது.
Arabic explanations of the Qur’an:
یٰۤاَیُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِی الْاَرْضِ حَلٰلًا طَیِّبًا ؗ— وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
2.168. மனிதர்களே! பூமியிலுள்ள விலங்குகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதிக்கப்பட்ட, அசுத்தமற்ற தூய்மையானவைகளை உண்ணுங்கள். உங்களைத் தந்திரமாகத் தன்பக்கம் ஈர்க்கும் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். தனக்கு தீங்கிழைக்க, தனக்குத் தீங்கிழைக்கவும் தன்னை வழிகெடுக்கவும் நினைக்கின்ற தன் எதிரியைப் பின்பற்றுவது ஒரு அறிவாளிக்கு உகந்ததல்ல.
Arabic explanations of the Qur’an:
اِنَّمَا یَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
2.169. அவன் மானக்கேடான, பெரும் பாவங்களைச் செய்யுமாறும் அல்லாஹ்விடமிருந்தோ அவனது தூதர்களிடமிருந்தோ கிடைத்த அறிவின்றி கொள்கையிலும், சட்டங்களிலும் அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுமாறும் உங்களைத் தூண்டுகிறான்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• المؤمنون بالله حقًّا هم أعظم الخلق محبة لله؛ لأنهم يطيعونه على كل حال في السراء والضراء، ولا يشركون معه أحدًا.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்களே அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் மக்கள். ஏனெனில் அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுக்கே கட்டுப்படுவார்கள். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டார்கள்.

• في يوم القيامة تنقطع كل الروابط، ويَبْرَأُ كل خليل من خليله، ولا يبقى إلا ما كان خالصًا لله تعالى.
2. மறுமைநாளில் தொடர்புகள் அனைத்தும் அறுந்துவிடும். நெருங்கிய நண்பன் தன் நெருங்கிய நண்பனை விட்டும் விலகிவிடுவான். அல்லாஹ்வுக்காக செய்யப்பட்ட செயல்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.

• التحذير من كيد الشيطان لتنوع أساليبه وخفائها وقربها من مشتهيات النفس.
3. சைதானின் சூழ்ச்சிகள் பலதரப்பட்டவை, மறைவானவை, மனோஇச்சைகளுக்கு நெருக்கமானவை என்பதனால் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

 
Translation of the meanings Surah: Al-Baqarah
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close