Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Translations’ Index


Translation of the meanings Ayah: (143) Surah: Al-Baqarah
وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ وَیَكُوْنَ الرَّسُوْلُ عَلَیْكُمْ شَهِیْدًا ؕ— وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِیْ كُنْتَ عَلَیْهَاۤ اِلَّا لِنَعْلَمَ مَنْ یَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ یَّنْقَلِبُ عَلٰی عَقِبَیْهِ ؕ— وَاِنْ كَانَتْ لَكَبِیْرَةً اِلَّا عَلَی الَّذِیْنَ هَدَی اللّٰهُ ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُضِیْعَ اِیْمَانَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
2.143. உங்களுக்காக நாம் விரும்பிய முன்னோக்கு திசையை (கிப்லா) ஆக்கியது போலவே உங்களையும் சிறந்த, நீதியுள்ள சமூகமாக, கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பொதுவிவகாரங்கள் ஆகிய விஷயங்களில் நடுநிலையான சமூகமாக ஆக்கியுள்ளோம். இது, தமது சமூகங்களுக்கு எடுத்துரைக்குமாறு தனது தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள் என்று மறுமைநாளில் அவர்களுக்காக நீங்கள் சாட்சியாளர்களாய் திகழ வேண்டும் என்பதற்காகவும் முஹம்மது நபி அவருக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று உங்கள்மீது அவர் சாட்சியாளராக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். யார் அல்லாஹ் விதித்த கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதையும் யார் தம் மனஇச்சையைப் பின்பற்றி மார்க்கத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்வதற்காகத்தான், நீர் முன்னோக்கியிருந்த கிப்லாவான பைதுல் முகத்தஸை நாம் மாற்றினோம். அல்லாஹ்வையும் அவன் தன் அடியார்களுக்கு விதித்த சட்டங்கள் யாவும் உயர்ந்த மதிநுட்பமிக்கவை என்பதையும் நம்பிக்கைக்கொள்வதற்கு அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, முதல் கிப்லா மாற்றப்பட்ட சம்பவம் மிகவும் கடினமானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான். கிப்லா மாற்றப்படுவதற்கு முன்னால் நீங்கள் தொழுத தொழுகைகளும் அந்த நம்பிக்கையைச் சார்ந்ததே. நிச்சயமாக அவன் மக்களின் விஷயத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான். அவன் அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்த மாட்டான்; அவர்கள் செய்த செயல்களின் கூலியை வீணாக்க மாட்டான்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• أن الاعتراض على أحكام الله وشرعه والتغافل عن مقاصدها دليل على السَّفَه وقلَّة العقل.
1. அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு மறுப்புத்தெரிவிப்பது அவற்றின் நோக்கங்களை விட்டு அலட்சியமாக இருப்பது அறிவீனத்தின் அடையாளமாகும்.

• فضلُ هذه الأمة وشرفها، حيث أثنى عليها الله ووصفها بالوسطية بين سائر الأمم.
2. அனைத்து சமூகங்களைவிடவும் இந்த சமூகம் நடுநிலையாகத் திகழ்வதே இதற்கு வழங்கப்பட்ட சிறப்பாகும். சமூகத்தின் இந்த பண்பையே அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான்.

• التحذير من متابعة أهل الكتاب في أهوائهم؛ لأنهم أعرضوا عن الحق بعد معرفته.
3. வேதக்காரர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சத்தியத்தை அறிந்தபிறகும் அதனைப் புறக்கணித்தார்கள்.

• جواز نَسْخِ الأحكام الشرعية في الإسلام زمن نزول الوحي، حيث نُسِخَ التوجه إلى بيت المقدس، وصار إلى المسجد الحرام.
4. வஹி இறங்கும் காலத்தில் இஸ்லாத்தின் சில சட்டதிட்டங்கள் நீக்கப்படுவது ஆகுமானதே. ஆரம்பத்தில் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவாக இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு முஸ்லிம்கள் கஅபாவை முன்னோக்கினார்கள்.

 
Translation of the meanings Ayah: (143) Surah: Al-Baqarah
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Translations’ Index

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

close