Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Translations’ Index


Translation of the meanings Ayah: (36) Surah: Al-Baqarah
فَاَزَلَّهُمَا الشَّیْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِیْهِ ۪— وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
2.36. ஷைத்தான் அவ்விருவருக்கும் தொடர்ந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட அந்த விஷயத்தை அலங்கரித்துக் காட்டினான். எந்த அளவுக்கெனில், அல்லாஹ் அவர்களுக்குத் தடைசெய்த மரத்திலிருந்து உண்டு பாவத்தில் வீழ்ந்துவிட்டார்கள். அதற்குத் தண்டனையாக அவ்விருவரும் இருந்த சொர்க்கத்திலிருந்து அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அப்போது அவர்களிடமும் ஷைத்தானிடமும் பின்வருமாறு கூறினான்: பூமியில் இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து மறுமை நிகழ முன் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கையும் உண்டு. அதிலுள்ள வளங்களை அனுபவித்துக்கொள்ளவும் முடியும்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• الواجب على المؤمن إذا خفيت عليه حكمة الله في بعض خلقه وأَمْرِهِ أن يسلِّم لله في خلقه وأَمْرِهِ.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர் அவனுடைய படைப்புகளில், கட்டளைகளில் சிலவற்றின் நோக்கத்தை அறியாமல் இருந்தாலும் அவற்றில் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது கட்டாயமாகும்.

• رَفَعَ القرآن الكريم منزلة العلم، وجعله سببًا للتفضيل بين الخلق.
2. குர்ஆன் கல்வியின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அதனை படைப்பினங்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணியாக ஆக்கியுள்ளது.

• الكِبْرُ هو رأس المعاصي، وأساس كل بلاء ينزل بالخلق، وهو أول معصية عُصِيَ الله بها.
3. கர்வம் பாவங்களில் தலையாயதாகும். படைப்புகளுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு கர்வமே அடிப்படையாக இருக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செய்யப்பட்ட முதல் பாவம் இதுதான்.

 
Translation of the meanings Ayah: (36) Surah: Al-Baqarah
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Translations’ Index

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

close