Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Ayah: (44) Surah: Al-Anbiyā’
بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ— اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟
21.44. மாறாக இந்த நிராகரிப்பாளர்களையும் அவர்களின் முன்னோர்களையும் விட்டுப்பிடிக்கும் பொருட்டு நாம் அருட்கொடைகளை அள்ளி வழங்கி நீண்ட காலம் வரைக்கும் அனுபவிக்கச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் ஏமாந்து, தங்களின் நிராகரிப்பில் நிலைத்துவிட்டார்கள். நம் அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்து நம் வேதனையை விரைவாக வேண்டும் இவர்கள், நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறத்திலிருந்து, அதிலுள்ளவர்களை அடக்கி, வென்று, குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதைக் கவனித்து, மற்றவர்களுக்கு ஏற்பட்டது இவர்களுக்கும் ஏற்படாமலிருக்க, படிப்பினை பெறமாட்டாரகளா? இவர்கள் ஒருபோதும் மிகைப்பவர்களல்ல. மாறாக அவர்கள் மிகைக்கப்படுபவர்களே.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• بيان كفر من يستهزئ بالرسول، سواء بالقول أو الفعل أو الإشارة.
1. தூதரைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகும். அது சொல்லாகவோ, செயலாகவோ, சைகையாகவோ இருந்தாலும் சரியே.

• من طبع الإنسان الاستعجال، والأناة خلق فاضل.
2. அவசரப்படுவது மனிதனின் இயற்கை தன்மையாகும். நிதானம் சிறந்த பண்பாகும்.

• لا يحفظ من عذاب الله إلا الله.
3. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அல்லாஹ்வைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது.

• مآل الباطل الزوال، ومآل الحق البقاء.
4. அசத்தியத்தின் முடிவு அழிவே. சத்தியத்தின் முடிவு நிலைப்பதே.

 
Translation of the meanings Ayah: (44) Surah: Al-Anbiyā’
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close