Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
76 : 22

یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟

22.76. அவன் வானவர்களிலும் மனிதர்களிலும் உள்ள தன் தூதர்களை அவர்களைப் படைப்பதற்கு முன்னரும் அவர்கள் இறந்தபின்னரும் அறியக்கூடியவன். மறுமைநாளில் விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன. அந்நாளில் அவன் தன் அடியார்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி அவர்கள் செய்த செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
Benefits of the verses in this page:
• أهمية ضرب الأمثال لتوضيح المعاني، وهي طريقة تربوية جليلة.
1. விஷயங்களைப் புரியவைப்பதற்காக உதாரணங்கள் கூறுவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. அது மிகச்சிறந்த பயிற்றுவிக்கும் வழிமுறையாகும். info

• عجز الأصنام عن خلق الأدنى دليل على عجزها عن خلق غيره.
2. சிறு படைப்பைக்கூட சிலைகளால் படைக்க முடியாமை ஏனையவற்றை அவற்றால் படைக்க முடியாது என்பதற்கான ஆதாரமாகும். info

• الإشراك بالله سببه عدم تعظيم الله.
3. அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் காரணம் அவனைக் கண்ணியப்படுத்தாமையே. info

• إثبات صفتي القوة والعزة لله، وأهمية أن يستحضر المؤمن معاني هذه الصفات.
4. சக்தி, கண்ணியம் என்ற இரு பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பது நிரூபனமாகிறது. நம்பிக்கையாளன் இந்த பண்புகளின் அர்த்தங்களை விளங்கிக் கொள்வது முக்கியமாகும். info