Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Surah: Al-Qasas   Ayah:
فَلَمَّا قَضٰی مُوْسَی الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًا ۚ— قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّیْۤ اٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
28.29. மூஸா இரு தவணைகளில் அதிகபட்ச தவணையான பத்து வருடங்களை நிறைவுசெய்து தம் குடும்பத்தாருடன் மத்யனிலிருந்து எகிப்தை நோக்கி புறப்பட்டார். அப்போது தூர் மலைக்கு அருகில் நெருப்பைக் கண்டார். தம் குடும்பத்தாரிடம் கூறினார்: “இங்கேயே இருங்கள். நான் நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து நான் ஏதேனும் செய்தியைக் கொண்டு வருகிறேன் அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு நெருப்பை மூட்டுவதற்காக அங்கிருந்து ஏதேனும் எரிகொள்ளியைக் கொண்டு வருகிறேன்.
Arabic explanations of the Qur’an:
فَلَمَّاۤ اَتٰىهَا نُوْدِیَ مِنْ شَاطِئِ الْوَادِ الْاَیْمَنِ فِی الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ یّٰمُوْسٰۤی اِنِّیْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۙ
28.30. மூஸா தான் கண்ட நெருப்பை நோக்கி வந்தபோது அவரின் வலதுபுறம் அமைந்த அந்தப் பகுதியின் மூஸாவுடன் பேசுவதன் மூலம் அருள் வளமிக்க இடத்திலுள்ள (ஒரு) மரத்திலிருந்து இறைவன் அவரை அழைத்துக் கூறினான்: “மூஸாவே! நிச்சயமாக நான்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்.”
Arabic explanations of the Qur’an:
وَاَنْ اَلْقِ عَصَاكَ ؕ— فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ— یٰمُوْسٰۤی اَقْبِلْ وَلَا تَخَفْ ۫— اِنَّكَ مِنَ الْاٰمِنِیْنَ ۟
28.31. ”உமது கைத்தடியைப் போடுவீராக.” இறைவனின் கட்டளைக்கேற்ப அவர் தம் கைத்தடியைப் போட்டார். நிச்சயமாக அது பாம்பைப் போன்று வேகமாக அசைந்து ஓடுவதைக் கண்டதும் திரும்பிப் பார்க்காமல் பயந்து வெருண்டோடிவிட்டார். பயத்தினால் திரும்பி வரவும் இல்லை. இறைவன் அழைத்தான்: “மூஸாவே! முன்னால் வாரும். அதற்குப் பயப்பட வேண்டாம். நிச்சயமாக நீர் அதிலிருந்தும் நீர் பயப்படும் ஏனையவற்றிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவராக இருக்கின்றீர்.”
Arabic explanations of the Qur’an:
اُسْلُكْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ؗ— وَّاضْمُمْ اِلَیْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
28.32. “உம் வலது கையை சட்டையின் கழுத்துப் பக்கமாக உள்ள இடைவெளிக்குள் நுழைப்பீராக. அது வெண்குஷ்டம் இன்றி வெண்மையாக வெளிப்படும்.” மூஸா தம் கையை நுழைத்தார். அது பனிக்கட்டியைப்போன்று வெண்மையாகத் தோன்றியது. “அச்சம் நீங்குவதற்காக உம் கையை உம் பக்கம் ஒடுக்கிக் கொள்ளும்.” அவர் தம் கையை தம் பக்கம் ஒடுக்கிக் கொண்டார். அச்சம் நீங்கியது. ஃபிர்அவனிடமும் அவன் சமூகத்தின் செல்வாக்கு மிகுந்தவர்களிடம் செல்வதற்காக இவையிரண்டும் -கை, கைத்தடி- உம் இறைவனிடமிருந்து உமக்கு வழங்கப்பட்ட சான்றுகளாகும். நிச்சயமாக அவர்கள் நிராகரித்து பாவங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கு அடிபணியாதவதை விட்டும் வெளியேறியவர்களாக இருக்கிறார்கள்.
Arabic explanations of the Qur’an:
قَالَ رَبِّ اِنِّیْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟
28.33. மூஸா தம் இறைவனிடம் உதவி தேடியவராக கூறினார்: “நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டேன். எனவே எனக்கு அனுப்பப்பட்ட தூதை எடுத்துரைப்பதற்காக அவர்களிடம் சென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.
Arabic explanations of the Qur’an:
وَاَخِیْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّیْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِیَ رِدْاً یُّصَدِّقُنِیْۤ ؗ— اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟
28.34. என் சகோதரர் ஹாரூன் என்னைவிட நாவன்மை உடையவர். எனவே அவரையும் என்னுடன் உதவியாளராக அனுப்புவாயாக. பிர்அவ்னும் அவன் சமுதாயமும் என்னை மறுத்தால் அவர் எனது பேச்சில் உடன்படுவார். முந்தைய சமூகங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் அந்த மக்களால் நிராகரிக்கப்பட்டது போன்று ஃபிர்அவ்னும் அவனது சமூகமும் என்னை நிராகரித்துவிடுவார்கள் என்று நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்.
Arabic explanations of the Qur’an:
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِیْكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطٰنًا فَلَا یَصِلُوْنَ اِلَیْكُمَا ۚۛ— بِاٰیٰتِنَا ۚۛ— اَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ ۟
28.35. அல்லாஹ் மூஸாவின் பிரார்த்தனைக்குப் பதிலளித்தவாறு கூறினான்: “-மூஸாவே!- உம் சகோதரர் ஹாரூனையும் தூதராக்கி, உதவியாளராக்கி உம்மை நாம் வலுப்படுத்துவோம். உங்கள் இருவருக்கும் சான்றையும் ஆதரவையும் வழங்குவோம். எனவே அவர்கள் உங்களுக்கு நீங்கள் விரும்பாத எந்த தீங்கும் இழைக்க முடியாது. நாம் உங்களுக்கு வழங்கி அனுப்பிய அத்தாட்சிகளின் காரணமாக நீங்களும் உங்களைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களும்தாம் வெற்றி பெறுவார்கள்.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• الوفاء بالعقود شأن المؤمنين.
1. ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களின் பண்பாகும்.

• تكليم الله لموسى عليه السلام ثابت على الحقيقة.
2. அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுடன் பேசியது யதார்த்தமாக உறுதியானதாகும்.

• حاجة الداعي إلى الله إلى من يؤازره.
3. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு உதவியாளர் தேவை.

• أهمية الفصاحة بالنسبة للدعاة.
4. அழைப்பாளர்களைப் பொருத்தவரை நாவன்மை இன்றியமையாததாகும்.

 
Translation of the meanings Surah: Al-Qasas
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close