Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran

external-link copy
20 : 32

وَاَمَّا الَّذِیْنَ فَسَقُوْا فَمَاْوٰىهُمُ النَّارُ ؕ— كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِیْدُوْا فِیْهَا وَقِیْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟

32.20. அல்லாஹ்வை நிராகரித்து பாவங்கள் புரிந்து அவனுக்கு அடிபணியாதவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மறுமை நாளில் அவர்களுக்காகவே தயார் செய்யப்பட்டதாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேற நாடும்போதெல்லாம் மீண்டும் அதன் பக்கமே திருப்பப்படுவார்கள். அவர்களிடம் கண்டிக்கும் விதத்தில் கூறப்படும்: “உலகில் தூதர்கள் வந்து உங்களை எச்சரித்த போது நீங்கள் பொய்பித்த நரக வேதனையை அனுபவியுங்கள்.” info
التفاسير:
Benefits of the Verses on this page:
• إيمان الكفار يوم القيامة لا ينفعهم؛ لأنها دار جزاء لا دار عمل.
1. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கைகொள்வதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஏனெனில் அது கூலி கொடுக்கப்படும் இடமே அன்றி செயல்படும் களம் அல்ல. info

• خطر الغفلة عن لقاء الله يوم القيامة.
2. மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திப்பதைவிட்டும் அலட்சியமாக இருப்பதால் ஏற்படும் விபரீதம். info

• مِن هدي المؤمنين قيام الليل.
3. இரவில் நின்று வணங்குவது நம்பிக்கையாளர்களின் வழிகாட்டலில் உள்ளதாகும். info